போகர் சப்தகாண்டம் 3681 - 3685 of 7000 பாடல்கள்
3681. செய்யவே தந்தேனான் சுவாமிநாதா ஜெகதலத்தில் உந்தனுட கீர்த்திகண்டு
எய்யதொரு சமாதிபுரம்
யாகம்செய்தேன் வுத்தமனே எந்தனுக்கு கிருபைசெய்து
பெய்யவே மழையதனை
வருட்சித்தேதான் பேரான வுலகுதனில் கீர்த்தியோங்க
தய்யதொரு கிருபையினா
லுந்தனுக்கு துரைராஜ சுந்தரனே வரமீவாயே
விளக்கவுரை :
3682. வரமெனக்குக் கொடுத்தல்லோ
புண்ணியவானே வரமுடனே ஞானோபதேசஞ்செய்து
புரம்விட்டு எந்தனுட
பதிபோகத்தான் பொங்கமுடன் வாழ்த்துதல் கூறுமென்ன
கரமெடுத்து கைபிடித்து
கொங்கணார்க்கு கர்த்தாவாம் ரிஷியாரும் விடைகொடுத்து
தரமுடனே யனுப்பிவிட்டார்
சாபந்தீர்ந்து சாங்கமுடன் கொங்கணரும் வந்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
3683. வந்திட்ட கொங்கணரைக் கௌதமரும்பார்த்து
வண்மையுடன் ரெண்டாவது யாகஞ்செய்து
தந்திட்ட வரமதுவும்
பெற்றுவந்த தகமையுள்ள கொங்கணர்க்குப் பின்னுஞ்சொல்வார்
முந்திட்ட சமாதியது
சிலதுகாலம் முதன்மையுடன் தாமிருந்தீர் மைந்தாநீயும்
பந்திட்ட மாகவல்லோ
வுலகுதன்னில் பரிவுடனே சிகால மிருவென்றாரே
விளக்கவுரை :
3684. என்றுமே கோடான வுற்பதங்கள்
எழிலாகக் கற்பித்தார் கொங்கணர்க்கு
வென்றிடவே சித்தர்முனி
காணாப்போக்கு வேணதொரு வதிசயங்கள் யாவுஞ்சொல்லி
துன்றிடவே பிரணாய
கற்பந்தன்னை துறையோடும் முறையோடும் சொல்லிப்பின்பு
நன்றுடனே தேகமதைப்
போக்கடிக்க நல்லவழியும் உபாயமது வருள்செய்தாரே
விளக்கவுரை :
3685. செய்யவே கொங்கணரு
முனிவர்தாமும் செயலான பாக்கியமும் ஆசையற்று
பையவே உலகமதில்
கற்பகோடிகாலம் பண்புடன்தானிருந்தாலு மென்னலாபம்
மெய்யதுவும் தானழிந்து
போகுமல்லால் மேதினியில் யாதொன்றும் கண்டதில்லை
எய்யவே தேகமது நில்லாது
யென்று நிலையவே சமாதிக்கு இறங்கிட்டாரே
விளக்கவுரை :