போகர் சப்தகாண்டம் 3696 - 3700 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3696. சென்றாரே கபிலமுனி சித்துதாமும் செம்மையுடன் சமாதிதனி லிறங்கியேதான்
நின்றுமே மூச்சதனை வுள்ளடக்கி நிலஐயான படுபள்ளந்தன்னிற்சென்று
வென்றிடவே தாம்படுத்தார் பள்ளமீதில் மேதினியில் பாறைதனை மூடச்சொல்லி
இன்றுமுதல் இருபத்து ஆண்டுரெண்டும் எழிலாக சமாதிக்கு பூசைபாரே

விளக்கவுரை :


3697. கார்க்கவே சீஷவர்க்க மெல்லோருக்கும் கருத்துடனே தாமுரைத்தார் கபிலர்தாமும்
நீர்க்கமுடன் சீஷவர்க்கக் கூட்டத்தார்கள் திகழுடனே குருவினது வாக்குபோல
பார்க்கவே சமாதியது பூசைதானும் பாருலகில் செய்துவந்தார் ஆண்டுமட்டும்
ஏர்க்கமுடன் ரெண்டுபத்து வாண்டுபோக எழிலாக சமாதியிடஞ் சூழ்ந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

3698. சூழவே சமாதிக்கு கெடுவுமாகி சுந்தரமாஞ் சீஷவர்க்கமாயிரம்பேர்
தாழவே சமாதியிட பக்கல்நின்று சட்டமுடன் சிவபூசை செய்யும்போது
நீழவே கற்பாறை தான்வெடித்து நேரான கபிலமுனி சித்துதாமும்
ஆழவே சொரூபமுடன் கபிலர்தாமும் அங்ஙனவே வெளியான வதிதம்பாரே

விளக்கவுரை :


3699. பாரேதான் கபிலமுனி சித்துதாமும் பண்புடனே வதிசயங்களெல்லாங்கண்டு
தீரேதான் ஜெகதலத்தில் மாந்தர்தம்மை தீர்க்கமுடன் தான்பார்த்துக் கூறலுற்றார்
தேரேதான் காயாதி கற்பங்கொண்டு தெளிவுடனே பூமிதனி லிருந்தார்சித்து
நேரேதான் கோடிவரை யிருந்துமென்ன நேர்மையுள்ள தேகமது மண்ணாய்ப்போமே

விளக்கவுரை :


3700. மண்ணான தேகமது மரிக்காமற்றான் மானிலத்தில் சிலகாலமிருந்தார்சித்து
நண்ணவுடன் வூர்வனத்தை சுற்றவல்லோ நாதாந்த ரிஷியாரும் வனமேபோனார்
விண்ணமுடன் தட்சணயாகங்கள்செய்து வீரமுடன் காவனத்தேவந்துநின்று
குண்ணான மலைதேடி குகைகள்தேடி குருபரனார் ரிஷியொருவர் தனைக்கண்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3691 - 3695 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3691. தானான காலாங்கிசொன்னமார்க்கம் தாரிணியில் பொய்யல்லால் மெய்யொன்றில்லை
வேனான எனதையர்கூறும்வார்த்தை மேதினியில் யாவருக்குஞ் சத்தியந்தான்
பானான பராபரியை மனதிலெண்ணி பாடினேன் போகரேழாயிரந்தான்
தேனான இந்நூல்தான் நாலாங்காண்டம் தெளிவுடனே செப்பிவைத்தேன் மாந்தர்க்காமே

விளக்கவுரை :


3692. ஆமேதா னின்னமொரு மார்க்கம்பாரு அப்பனே யாம்கண்டவரைக்குஞ் சொல்வோம்
போமேதான் சித்தரமுனி ரிஷிகள்யாவும் பொங்கமுடன் சாத்திரங்கள் கட்டிவைத்தார்
வெமேதான் வெகுநூலின் கருவும் வெளிப்படையாய் சொல்லவில்லை இந்நூல்போல
நாமேதான் கண்டமட்டுஞ் சொல்லிவிட்டோம் நாதாந்த சித்தொளியி னருமைபாரே

விளக்கவுரை :

[ads-post]

3693. பாரேதான் கபிலமுனி சித்துதாமும் பாருலகில் வெகுகாலமிருந்தாரென்று
நேரேதான் கவிவானர் கட்டுவாக்கியம் நேர்மையுடன் கட்டிவைத்தார் வெகுநூல்தன்னில்
சீரேதான் காயாதி கற்பமுண்டு சிலகாலம் பூமிதனிலிருந்தாரென்று
கூரேதான் சாத்திரங்கள் சொன்னமார்க்கம் குவலயத்தில் மெய்யாக வுறுதிகாணே

விளக்கவுரை :


3694. காணவே கபிலமுனி சித்துதாமும் கானகத்தில் சமாதியது பூண்டுமேதான்
வேணதொரு சீஷவர்க்கந் தன்னோடொக்க விருப்பமுடன் கூட்டமதாய் கூடிக்கொண்டு
நாணவே ஞானோபதேசந்தன்னை நாதாந்த சித்தொளிவு கபிலர்தாமும்
பூணவே யுபதேசம் செய்யும்போது பொன்னடிக்குத் தெண்டனிட்டார் கோடியாமே

விளக்கவுரை :


3695. கோடியாஞ் சீஷவர்க்கம் கபிலருக்கு கொப்பெனவே வஞ்சலிகள் மிகவுஞ்செய்து
நீடியே சீஷவர்க்கம் விடையும்பெற்று நிலையான சமாதியிட மருகிற்சென்று
கூடியே கருவிகரணாதியெல்லாம் குறிப்புடனே தானடக்கி கலைதான்மாறி
வாடியே முகந்தளர்ந்து மனதுவாராய் மயக்கமுடன் கபிலருந்தான் குழிசென்றாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3686 - 3690 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3686. இறங்கியே போம்போது வனேகசீஷர் எழிலான கூட்டமது நிற்கும்போது
உறங்கியே தானிருந்து பாசமற்று வுத்தமருங் கண்மூடி லகித்துக்கொண்டு
திறமுடனே தன்னறிவு இருக்கும்போது தீரமுடன் விசாரணைக்குச் சரியதாக
குரங்குடைய மனமதுவும் கியாபகத்தில் குறிப்புடனே சொக்கியல்லோ குழிசென்றாரே

விளக்கவுரை :


3687. சென்றாரே யோர்கடிகை தன்னில்நேரம் செம்மையுடன் கொங்கணரு மறையும்போது
நன்றான சீஷவர்க்க மாயிரம்பேர் நலமுடனே கிட்டிருந்து வேதஞ்சொன்னார்
வென்றிடவே தேகமது மண்ணால்மூடி மேன்மையுடன் கல்பாறைகொண்டுசாத்தி
இன்றுமுதல் ஓராண்டு பூசைமார்க்கம் யருளுடனே நடத்தவென்ன முடிவுமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

3688. ஆச்சப்பா சப்தமது சொன்னார்பாரு அப்பனே முப்பதுயவாண்டுபின்பு
பேச்சப்பா யாருக்குஞ்சொல்லவேண்டாம் பேரான சமாதியைத் திறந்துபாரு
மூச்சப்பா யிருந்தாக்கால் பின்னும்யானும் மூதுலகில் நான்வருவேன் என்றுசொல்லி
ஏச்சப்பா மூச்சடங்கிப்போனாலுந்தான் எழிலான சமாதியது மூடென்றாரே

விளக்கவுரை :


3689. மூடியே கொங்கணரு மாண்டாரென்று மூதுலகில் பேராகிப்பேரின்பத்தில்  
கூடியே கூட்டுமிட்டுப் பேசிக்கொண்டு பேருலகில் நகைசெய்வா ரிந்தவாழ்வு
தேடியே பேரின்ப நிலையும்பொய்யே தெளிவான தொன்றுமிலை வையகத்தில்
நாடியே பார்த்தாக்கால் எல்லாம்பொய்யே நாதாக்கள் வாழ்வதும் இப்படிதானாச்சே

விளக்கவுரை :


3690. இப்படிதான் உலகமெல்லாம் பொய்வாழ்வப்பா எழிலுடனே இருந்தவர்கள் யாருமில்லை
எப்படிதான் நம்புவது தேகந்தன்னை எழிலாக மாண்டார்கள் வையகத்தில்
செப்பவே தேகமது மண்ணாய்ப்போச்சு தேசமதிலிருந்தவர்களாருமில்லை
ஒப்புடனே யாம்கண்ட வரைக்குஞ்சொன்னோம் வுத்தமனே காலாங்கி கடாட்சந்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3681 - 3685 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3681. செய்யவே தந்தேனான் சுவாமிநாதா ஜெகதலத்தில் உந்தனுட கீர்த்திகண்டு
எய்யதொரு சமாதிபுரம் யாகம்செய்தேன் வுத்தமனே எந்தனுக்கு கிருபைசெய்து
பெய்யவே மழையதனை வருட்சித்தேதான் பேரான வுலகுதனில் கீர்த்தியோங்க
தய்யதொரு கிருபையினா லுந்தனுக்கு துரைராஜ சுந்தரனே வரமீவாயே   

விளக்கவுரை :


3682. வரமெனக்குக் கொடுத்தல்லோ புண்ணியவானே வரமுடனே ஞானோபதேசஞ்செய்து
புரம்விட்டு எந்தனுட பதிபோகத்தான் பொங்கமுடன் வாழ்த்துதல் கூறுமென்ன
கரமெடுத்து கைபிடித்து கொங்கணார்க்கு கர்த்தாவாம் ரிஷியாரும் விடைகொடுத்து
தரமுடனே யனுப்பிவிட்டார் சாபந்தீர்ந்து சாங்கமுடன் கொங்கணரும் வந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

3683. வந்திட்ட கொங்கணரைக் கௌதமரும்பார்த்து வண்மையுடன் ரெண்டாவது யாகஞ்செய்து
தந்திட்ட வரமதுவும் பெற்றுவந்த தகமையுள்ள கொங்கணர்க்குப் பின்னுஞ்சொல்வார்
முந்திட்ட சமாதியது சிலதுகாலம் முதன்மையுடன் தாமிருந்தீர் மைந்தாநீயும்   
பந்திட்ட மாகவல்லோ வுலகுதன்னில் பரிவுடனே சிகால மிருவென்றாரே

விளக்கவுரை :


3684. என்றுமே கோடான வுற்பதங்கள் எழிலாகக் கற்பித்தார் கொங்கணர்க்கு   
வென்றிடவே சித்தர்முனி காணாப்போக்கு வேணதொரு வதிசயங்கள் யாவுஞ்சொல்லி
துன்றிடவே பிரணாய கற்பந்தன்னை துறையோடும் முறையோடும் சொல்லிப்பின்பு
நன்றுடனே தேகமதைப் போக்கடிக்க நல்லவழியும் உபாயமது வருள்செய்தாரே

விளக்கவுரை :


3685. செய்யவே கொங்கணரு முனிவர்தாமும் செயலான பாக்கியமும் ஆசையற்று
பையவே உலகமதில் கற்பகோடிகாலம் பண்புடன்தானிருந்தாலு மென்னலாபம்
மெய்யதுவும் தானழிந்து போகுமல்லால் மேதினியில் யாதொன்றும் கண்டதில்லை
எய்யவே தேகமது நில்லாது யென்று நிலையவே சமாதிக்கு இறங்கிட்டாரே   

விளக்கவுரை :


Powered by Blogger.