3686. இறங்கியே போம்போது வனேகசீஷர்
எழிலான கூட்டமது நிற்கும்போது
உறங்கியே தானிருந்து
பாசமற்று வுத்தமருங் கண்மூடி லகித்துக்கொண்டு
திறமுடனே தன்னறிவு
இருக்கும்போது தீரமுடன் விசாரணைக்குச் சரியதாக
குரங்குடைய மனமதுவும்
கியாபகத்தில் குறிப்புடனே சொக்கியல்லோ குழிசென்றாரே
விளக்கவுரை :
3687. சென்றாரே யோர்கடிகை
தன்னில்நேரம் செம்மையுடன் கொங்கணரு மறையும்போது
நன்றான சீஷவர்க்க
மாயிரம்பேர் நலமுடனே கிட்டிருந்து வேதஞ்சொன்னார்
வென்றிடவே தேகமது
மண்ணால்மூடி மேன்மையுடன் கல்பாறைகொண்டுசாத்தி
இன்றுமுதல் ஓராண்டு
பூசைமார்க்கம் யருளுடனே நடத்தவென்ன முடிவுமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
3688. ஆச்சப்பா சப்தமது
சொன்னார்பாரு அப்பனே முப்பதுயவாண்டுபின்பு
பேச்சப்பா
யாருக்குஞ்சொல்லவேண்டாம் பேரான சமாதியைத் திறந்துபாரு
மூச்சப்பா யிருந்தாக்கால்
பின்னும்யானும் மூதுலகில் நான்வருவேன் என்றுசொல்லி
ஏச்சப்பா
மூச்சடங்கிப்போனாலுந்தான் எழிலான சமாதியது மூடென்றாரே
விளக்கவுரை :
3689. மூடியே கொங்கணரு மாண்டாரென்று மூதுலகில் பேராகிப்பேரின்பத்தில்
கூடியே கூட்டுமிட்டுப்
பேசிக்கொண்டு பேருலகில் நகைசெய்வா ரிந்தவாழ்வு
தேடியே பேரின்ப
நிலையும்பொய்யே தெளிவான தொன்றுமிலை வையகத்தில்
நாடியே பார்த்தாக்கால்
எல்லாம்பொய்யே நாதாக்கள் வாழ்வதும் இப்படிதானாச்சே
விளக்கவுரை :
3690. இப்படிதான் உலகமெல்லாம்
பொய்வாழ்வப்பா எழிலுடனே இருந்தவர்கள் யாருமில்லை
எப்படிதான் நம்புவது
தேகந்தன்னை எழிலாக மாண்டார்கள் வையகத்தில்
செப்பவே தேகமது
மண்ணாய்ப்போச்சு தேசமதிலிருந்தவர்களாருமில்லை
ஒப்புடனே யாம்கண்ட
வரைக்குஞ்சொன்னோம் வுத்தமனே காலாங்கி கடாட்சந்தானே
விளக்கவுரை :