3691. தானான
காலாங்கிசொன்னமார்க்கம் தாரிணியில் பொய்யல்லால் மெய்யொன்றில்லை
வேனான எனதையர்கூறும்வார்த்தை
மேதினியில் யாவருக்குஞ் சத்தியந்தான்
பானான பராபரியை மனதிலெண்ணி பாடினேன்
போகரேழாயிரந்தான்
தேனான இந்நூல்தான்
நாலாங்காண்டம் தெளிவுடனே செப்பிவைத்தேன் மாந்தர்க்காமே
விளக்கவுரை :
3692. ஆமேதா னின்னமொரு
மார்க்கம்பாரு அப்பனே யாம்கண்டவரைக்குஞ் சொல்வோம்
போமேதான் சித்தரமுனி
ரிஷிகள்யாவும் பொங்கமுடன் சாத்திரங்கள் கட்டிவைத்தார்
வெமேதான் வெகுநூலின் கருவும்
வெளிப்படையாய் சொல்லவில்லை இந்நூல்போல
நாமேதான் கண்டமட்டுஞ்
சொல்லிவிட்டோம் நாதாந்த சித்தொளியி னருமைபாரே
விளக்கவுரை :
[ads-post]
3693. பாரேதான் கபிலமுனி
சித்துதாமும் பாருலகில் வெகுகாலமிருந்தாரென்று
நேரேதான் கவிவானர்
கட்டுவாக்கியம் நேர்மையுடன் கட்டிவைத்தார் வெகுநூல்தன்னில்
சீரேதான் காயாதி கற்பமுண்டு
சிலகாலம் பூமிதனிலிருந்தாரென்று
கூரேதான் சாத்திரங்கள்
சொன்னமார்க்கம் குவலயத்தில் மெய்யாக வுறுதிகாணே
விளக்கவுரை :
3694. காணவே கபிலமுனி சித்துதாமும்
கானகத்தில் சமாதியது பூண்டுமேதான்
வேணதொரு சீஷவர்க்கந்
தன்னோடொக்க விருப்பமுடன் கூட்டமதாய் கூடிக்கொண்டு
நாணவே ஞானோபதேசந்தன்னை
நாதாந்த சித்தொளிவு கபிலர்தாமும்
பூணவே யுபதேசம் செய்யும்போது
பொன்னடிக்குத் தெண்டனிட்டார் கோடியாமே
விளக்கவுரை :
3695. கோடியாஞ் சீஷவர்க்கம்
கபிலருக்கு கொப்பெனவே வஞ்சலிகள் மிகவுஞ்செய்து
நீடியே சீஷவர்க்கம்
விடையும்பெற்று நிலையான சமாதியிட மருகிற்சென்று
கூடியே கருவிகரணாதியெல்லாம்
குறிப்புடனே தானடக்கி கலைதான்மாறி
வாடியே முகந்தளர்ந்து
மனதுவாராய் மயக்கமுடன் கபிலருந்தான் குழிசென்றாரே
விளக்கவுரை :