போகர் சப்தகாண்டம் 3696 - 3700 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3696 - 3700 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3696. சென்றாரே கபிலமுனி சித்துதாமும் செம்மையுடன் சமாதிதனி லிறங்கியேதான்
நின்றுமே மூச்சதனை வுள்ளடக்கி நிலஐயான படுபள்ளந்தன்னிற்சென்று
வென்றிடவே தாம்படுத்தார் பள்ளமீதில் மேதினியில் பாறைதனை மூடச்சொல்லி
இன்றுமுதல் இருபத்து ஆண்டுரெண்டும் எழிலாக சமாதிக்கு பூசைபாரே

விளக்கவுரை :


3697. கார்க்கவே சீஷவர்க்க மெல்லோருக்கும் கருத்துடனே தாமுரைத்தார் கபிலர்தாமும்
நீர்க்கமுடன் சீஷவர்க்கக் கூட்டத்தார்கள் திகழுடனே குருவினது வாக்குபோல
பார்க்கவே சமாதியது பூசைதானும் பாருலகில் செய்துவந்தார் ஆண்டுமட்டும்
ஏர்க்கமுடன் ரெண்டுபத்து வாண்டுபோக எழிலாக சமாதியிடஞ் சூழ்ந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

3698. சூழவே சமாதிக்கு கெடுவுமாகி சுந்தரமாஞ் சீஷவர்க்கமாயிரம்பேர்
தாழவே சமாதியிட பக்கல்நின்று சட்டமுடன் சிவபூசை செய்யும்போது
நீழவே கற்பாறை தான்வெடித்து நேரான கபிலமுனி சித்துதாமும்
ஆழவே சொரூபமுடன் கபிலர்தாமும் அங்ஙனவே வெளியான வதிதம்பாரே

விளக்கவுரை :


3699. பாரேதான் கபிலமுனி சித்துதாமும் பண்புடனே வதிசயங்களெல்லாங்கண்டு
தீரேதான் ஜெகதலத்தில் மாந்தர்தம்மை தீர்க்கமுடன் தான்பார்த்துக் கூறலுற்றார்
தேரேதான் காயாதி கற்பங்கொண்டு தெளிவுடனே பூமிதனி லிருந்தார்சித்து
நேரேதான் கோடிவரை யிருந்துமென்ன நேர்மையுள்ள தேகமது மண்ணாய்ப்போமே

விளக்கவுரை :


3700. மண்ணான தேகமது மரிக்காமற்றான் மானிலத்தில் சிலகாலமிருந்தார்சித்து
நண்ணவுடன் வூர்வனத்தை சுற்றவல்லோ நாதாந்த ரிஷியாரும் வனமேபோனார்
விண்ணமுடன் தட்சணயாகங்கள்செய்து வீரமுடன் காவனத்தேவந்துநின்று
குண்ணான மலைதேடி குகைகள்தேடி குருபரனார் ரிஷியொருவர் தனைக்கண்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar