3701. கண்டாரே கபிலமுனி
சித்துதாமும் காட்டகத்தே குபரனார் தம்மைத்தானும்
தெண்டமுடன் வஞ்சலிகள்
மிகவுஞ்செய்து தேவாதி தேவனே யென்றுசொல்லி
கொண்டனைத்து மவர்பாதந்
தொட்டுமேதான் கொப்பெனவே யென்றனக்கு வுபதேசங்கள்
அண்டிவந்த எந்தனையும்
வாதரித்து அய்யனே கெதியென்று வணங்கிட்டாரே
விளக்கவுரை :
3702. வணங்கியதோர் எந்தனுக்கு
குருபரனார்தாமும் வாகுடனே வபயஸ்தந்தான்கொடுத்து
இணங்கவே யெந்தனது
யாகந்தன்னில் எழிலுடனே நீரிருந்து நடத்திவந்தால்
குணங்குடியார் மஸ்தானின்
சாகிபோல குவலயத்திலுந்தனுக்கு வரமுந்தந்து
மணமுடனே வாக்களித்து
ரிஷியார்தாமும் வகுப்புடனே வுபதேசம் செய்தார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
3703. தாமான வுபதேசம் செய்துமல்லோ
சதாகோடி காலமிருப்பதற்கு
பூமான சித்தொளிவு
முனிவர்தாமும் பூதலத்தில் வெகுகாலம் கற்பமுண்டு
காமான ஞானோபதேசமெல்லாம்
கருத்துடனே எந்நாளும் உறுதிகொண்டு
வேமான மாகவேதான்
விரும்பிகித்து விவரமுடன் போதித்தார் முனிவருக்கே
விளக்கவுரை :
3704. முனியான கபிலமுனி
சித்துதாமும் குருபரனார் ரிஷியார்பக்கல்
கனிவுடனே தானிருந்தார்
சிலதுகாலம் காணாத காட்சியெல்லாம் கண்ணில்கண்டார்
பனிமதி சூழ்சடை
பூண்டரிஷியார்தாமும் பாரினிலே பாகமது செய்யும்போது
தொனிவுடனே சாமரங்கள்
வாத்தியங்கள் தொல்லுலகில் வனந்தமதைக் கண்டோம்தானே
விளக்கவுரை :
3705. தானான வதிசயங்கள்
மெத்தவுண்டு தாக்கான குருபரனார் தன்றன்பக்கல்
பானான ரிஷிமுனிவர்
கூட்டத்தார்கள் பண்புடனே ரிஷியினிட பக்கல்தன்னில்
தேனான சாஸ்திரத்தில்
சொன்னநீதி தெளிவாகச் சொல்லிவிட்டேன் மாந்தர்க்காக
பானான பராபரியை மனதிலெண்ணி
பாடிவைத்தேன் பண்புள்ள நீதியாமே
விளக்கவுரை :