3706. நீதியாம் இந்நூல்போல்
யாருஞ்சொல்லார் நீணிலத்தில் யாம்கண்டவரைக்கும் சொல்வோம்
சோதியுடன் ரிஷியாருஞ்
சமாதிபோக தோற்றமுடன் யாகமது செய்யும்போது
வாதியாங் கமலமுனி
சித்துதாமும் வளமையுடன் தாமிருந்து வரமுங்கேட்டு
ஆதியாங் குபரனார் வாக்குபோல
அங்ஙனவே சிலகால மிருந்தார்தானே
விளக்கவுரை :
3707. இருந்தாரே கமலமுனி
சித்துதாமும் எழிலாக ரிஷியினிட மிருக்கும்போது
பொருந்தவே ரிஷியாரும்
அன்புகூர்ந்து பொங்கமுடன் சமாதிக்கு இடமுஞ்சொல்லி
குருந்தமுடன் உபதேசம்
யாவும்கூர்ந்து குவலயத்தில் சிலகாலம் காட்சிகாண
வருந்தியே குபரனார்
யாகவானும் வரமதுவும் கொடுத்தாரே புண்ணியவானே
விளக்கவுரை :
[ads-post]
3708. புண்ணியனாஞ் சிலகால
மங்கிருந்து பொங்கமுடன் யாகமது முடிந்தபின்பு
திண்ணமுடன் சமாதிக்குப்
போகவென்று திட்டமுடன் வரமதுவுங் கொடுத்தபின்பு
வண்ணமுடன் கபிலமுனி
சித்துதாமும் வளமுடனே பின்னுமே சமாதிக்கேக
எண்ணமுடன் தன்மனதில்
நினைக்கும்போது எழிலான சித்துமுனி கூறுவாரே
விளக்கவுரை :
3709. கூறுவார் வையகந்தனிலிருந்து கொத்தவனே பலனொன்றுமில்லையப்பா
தேறுவார் மானிலத்தில்
சிவயோகம்பூண்டு திறமுடனே கருவிகரணாதியெல்லாம்
மீறுவார் தாமதிகம்
பெற்றுக்கொண்டு மிக்கான சமாதிக்குப் போய்தானென்ன
ஆறுவார் பிறவியால் என்னலாபம்
வப்பனே யொன்றில்லை கண்டிலேனே
விளக்கவுரை :
3710. கண்டிலேன் சமாதிக்குப்
போய்தானென்ன காலனுக்கு வுட்படுவது வுண்மையாகும்
வண்டினம் மதுவையுண்டு
செனனமாண்டு வையகத்திலிருப்பதினால் லாபமென்ன
தண்டகத்து முனிவரெல்லாம்
மாண்டுபோனார் தாரிணியில் ஒருவருந்தான் இல்லைகண்டீர்
பண்டிதங்கள் சொன்னபடி
யாதொன்றில்லை பாரினிலே எப்போதும் பொய்வாழ்வாச்சே
விளக்கவுரை :