3711. ஆச்சப்பா பொய்யான
வாழ்வைநம்பி அப்பனே சமாதிக்குப்போகவேண்டாம்
மூச்சப்பா ஷணநேரம்
வாழ்வதாகும் மூதுலகில் யாதொன்றும் வருவதில்லை
ஏச்சப்பா வுலகத்தார்க்
கேச்சேயாகும் எழிலான சடலமது நிலைதானில்லை
பாச்சலுடன் வாழ்வனைத்தும்
இப்படியேயாகும் பாங்குடனே சமாதிக்குப் போகாநன்றே
விளக்கவுரை :
3712. நன்றான வாழ்வல்ல
வென்றுசொல்லி நாதாந்த சித்துபரம்சொன்னபோது
குன்றியே கபிலமுனி
தாமுங்கேட்டு கொப்பெனவே மறுவிடையுங் கூறலுற்றார்
வென்றிடவே கபிலமுனி
விடையுங்கேட்டு விருப்பமுடன் சீஷவர்க்கந்தனையழைத்து
தென்றிசைக்கு சிலகாலம்
யானும்சென்று செவ்வையுடன் கொஞ்சநாள் சமாதிபூணே
விளக்கவுரை :
[ads-post]
3713. பூணவே எந்தனுக்கு
விருப்பமுண்டு புகழாக எந்தனிட பக்கல்நீங்கள்
தோணவே எல்லாருங்
கிட்டிருந்து குறையோடு சமாதிக்கு வருகவென்று
வேணபடி வார்த்தையது
மிகவும்பேசி விடைபெற்று தென்துரை வந்துமேதா
வாணலுடன் மலையோரக்
குகைகள்கண்டு வளமுடனே சிலகால மிருந்தார்தாமே
விளக்கவுரை :
3714. இருந்தாரே சமாதிக்குள்
சிலதுகாலம் எழிலாக தானிருக்கும்வேளைதன்னில்
பொருந்தமுடன் சமாதியது
இடமுங்கண்டு பொங்கமுடன் சமாதியது குழிதான்வெட்டி
குருந்த மரமொன்றுமங்கே
வைக்கச்செய்தார் கொற்றவர்கள் அப்படியே செய்துவைத்தார்
வருந்தியே தவசுடனேபூண
வாகுடனே கபிலரங்கே நினைத்தார்தாமே
விளக்கவுரை :
3715. நினைக்கவே கபிலர்முனி
சித்துதாமும் நீடாழிகாலம்வரை சமாதிபூண்டு
புனைப்புடனே சீஷர்களைத்
தாமழைத்து புகழுடனே கூறலுற்றார் வண்ணங்கேளிர்
தினைப்புடனே முப்பத்து
மூன்றுவாண்டு தீரமுடனிருப்பதற்கு எண்ணங்கொண்டு
சுனைப்புடனே வாக்கதுவுங்
கூறலுற்றார் சீரான கபிலமுனி சித்துதாமே
விளக்கவுரை :