போகர் சப்தகாண்டம் 3466 - 3470 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3466. ஆச்சேதான் இன்னமொரு வயனஞ்சொல்வேன் அப்பனே ஜெபமுனியாம் ரிஷிகள்தாமும்
பேச்சேதான் பேசாமல் சிலதுகாலம் பேருலகில் மண்மீது இருந்திட்டாராம்
மூச்சடங்கி சிலகாலம் பிணம்போல்தாமும் மூர்ச்சையது போலிருந்தால் சித்துதாமும்
நேச்சலுடன் சமாதிதனிலிருந்தாரென்று நீணிலத்தில் பேராச்சு சிவயோகிக்கே

விளக்கவுரை :


3467. யோகத்தை சாதிக்க வெகுகாலந்தான் வுலகத்திலிருந்தாராம் தேகத்தோடே
தேகத்தை தான்மறந்து அவருமாண்டார் தேகமது மண்ணோடு மண்ணுமாச்சு
போகத்திலிருந்தவரு மாண்டுபோனார் பொங்கமுடன் தேகமது நிலையேயில்லை
யாகத்தை செய்துமல்லோ செயமுனிவர்தாமும் யாக்கதனை யொழித்தாரே வுலகில்தானே

விளக்கவுரை :

[ads-post]

3468. தானான யாகமது கூறப்போமோ தாரணியில் அற்புதங்கள் மிகவுஞ்செய்தார்
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தானிருக்குங்காலந்தன்னில்
பானான செயமுனியும் பாரிலேதான் பாடினார் வெகுகோடி கருக்கநூலாம்  
தேனான தேகமதை நிறுத்தவென்று செப்பினார் பலநூலும் பண்பதாமே

விளக்கவுரை :


3469. பண்பான நூல்களிலே தேகம்நிற்கும் பாரினிலே வெகுகால மிருக்கலாகும்
திண்பான சமுசார வாழ்க்கைதன்னில் திகழுடனே காயாதிகற்பகாலம்
நண்பான குடிவாழ்க்கை தனிலிருந்து நலமுடனே வெகுகால மாண்டார்தாமும்
பண்பான லோகத்தில் எல்லாம்பொய்யாம் காசினியில் மாண்டார்கள் இப்படியேதானே

விளக்கவுரை :


3470. தாமான கிரேதாயினுகத்திலப்பா தாரிணியில் அஷ்டபாலரிருந்திட்டாராம்
கோமானாம் கிரேதாயின் ராசன்தானும் கொற்றவனும் ராஜ்ஜியத்தை யாண்டபோது
பாமான வஷ்டபாலர் எட்டுபேரும் பாரினிலே சாகாத வரங்கொண்டார்போல்  
நாமான மிருந்தவரை யநேகம்பார்த்தோம் நலமுடனே ஒருவருந்தான் இல்லைகாணே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3461 - 3465 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3461. ஆச்சென்ற பெரும்பாதைத் தன்னிற்சென்றால் அப்பனே தத்துவங்கள் தொண்ணூற்றாறும்
மாச்சலுடன் மானிலத்தில் காணார்சித்தர் மனக்கண்ணாலே யொருவர்காண்பார் கண்டீர்
மூச்சடங்கி யோகங்கள் செய்தபேர்கள் மூதுலகில் ஒருபாகங் கண்டதில்லை
பேச்சலுடன் வெறுபேச்சுப்பேசியல்லோ பேருலகில் வெந்தரெல்லாம் மண்ணானாரே

விளக்கவுரை :


3462. மண்ணானார் ஒருவருந்தான் மண்டலத்தில் மகிட்சியுடன் வாழ்ந்தவர்களாருமில்லை
திண்ணமுடன் இறந்தவர்கள் எழுந்ததுண்டோ தேசத்தில் கட்டுமொழி யென்னலாகும்
நன்னமுடன் நாதாந்தச் சித்துவெல்லாம் நலமுடனே வேதாந்தம்பேசியேதான்
எண்ணமுடன் வெகுகோடி மனதிலெண்ணி ஏற்றமுடன் மாண்டதுவும் உண்மையாமே

விளக்கவுரை :

[ads-post]

3463. உண்மையாம் வெகுகோடி நூல்கள்தாமும் வுற்பனமும் விற்பனமுஞ் சொன்னார்பாரு
கண்மையுடன் மார்க்கண்ட நாயர்தாமும் காசினியில் வெகுகாலமிருந்தாரென்று
வண்மையுடன் அவர்கூறும் சாத்திரத்தில் வயதுபதினாரென்று கூறினார்பார்
திண்மையுடன் அவருமல்லோ மண்ணின்மாண்டார் தேசத்திலிருந்ததுண்டோ பொய்யுமாச்சே

விளக்கவுரை :


3464. பொய்யான சாத்திரங்கள் உளவுஞ்சொல்லி பூதலத்திலிருந்ததுண்டோ கண்டதுண்டோ
மெய்யான வார்த்தையைப்போல வினயஞ்சொல்லி மேதினியில் கட்டுமொழி சொன்னார்கண்டீர்
துய்யமுடன் மேதினியில் தருமராஜன் துப்புரவாய் மேனியுடன் கைலாயத்தில்
பையவே சென்றெழுந்து போனாரென்று பாரினிலே இதுவுமொரு கதையுமாச்சே

விளக்கவுரை :


3465. கதையான கவிவாணர் கட்டுரைத்த கதைதனையே மேதினியில் மெய்யென்றெண்ணி
பதைபதைத்து வச்சிராங்கம் பாண்டியன்தான் பாரினிலே வெகுகோடி தவசிருந்தான்
கெதையுடனே யீசனிடஞ்சென்றுமேதான் கீர்த்தியுடன் பேருலகில் வந்தானென்று
புகையொத்த மனப்போலக் கினவுகண்டு பூதலத்தில் நடந்தமொழி பொய்யுமாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3456 - 3460 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3456. ஆமேதான் கியாழமதை யுண்டபோது அப்பனே காயாதி தேகந்தானும்
நாமேதான் சொன்னபடிக் கிச்சைசெய்தால் நலமான செந்தூரமேனியூறும்
போமேதான் கியாழமது காயாதிக்குப் பொங்கமுடன் அனுபானமென்னலாகும்
தாமேதான் இன்னமொரு வயனஞ்சொல்வேன் தகமையுடன் கேட்பவனே சீஷனாமே

விளக்கவுரை :


3457. சீஷனாம் மானிடர்க்கு சொல்வேன்பாரு சிறப்பான காயாதிகற்பத்துக்கு
பாஷமென்ற பசுமூலி யுண்டைதன்னை பட்சமுடன் நெய்தேனுங் கூடச்சேர்த்து
கோஷமென்ற சர்க்கரையைப் பாகுசெய்து கொப்பெனவே சூரணத்தைப்போட்டுக்கிண்டி
தோஷமது நீங்கியல்லோ மைந்தாகேளு துப்புரவாய் லேகியம்போல் கிண்டிடாயே

விளக்கவுரை :

[ads-post]

3458. கிண்டியே லேகியத்தை பதனம்பண்ணு கீர்த்தியுடன் வாரத்துக்கிரண்டுமுறைதானும்
தொண்டமுடன் அம்பாளைப் பூசித்தேதான் தேசிக்காய் தானளவுகொண்டபோது
கொண்டவுடன் காயாதிதேகந்தானும் கொற்றவனே கற்றூணாமென்னலாகும்
அண்டர்முனி தேவாதி ரிஷிகள்தாமும் வன்புடனே லேகியத்தை கொள்வார்பாரே

விளக்கவுரை :


3459. பாரேதான் காயாதிகற்பவுண்டை பாரினிலே கொண்டவர்க்கு பலனைக்கேளிர்
நேரேதான் ஏழானைப்பலனுண்டாகும் நேர்மையுடன் மானிலத்தில் இருக்கலாம்பார்
சீரேதான் சிவயோகந் தன்னிற்சென்றால் சின்மயத்தின் அஷ்டாங்கங் காணலாகும்
வேரேதான் காண்பதுவும் வொன்றுமில்லை வேதாந்தச் சுடரொளியைக்காணலாமே

விளக்கவுரை :


3460. காணலாம் ஞானவொளிப் பிரகாசந்தான் கடிதான யேழுவகைத் தோற்றந்தானும்
பூணலாம் தேகாதி காயத்துக்கு பூட்டலாம் வேதாந்தத் தாயின்சாரம்
பாணமுடன் ஞானவுபசாரந்தன்னை பார்வையுடன் மனக்கண்ணால் காணலாகும்
நாணமுடன் பரவெளியைக்கண்டபோது நாதாந்தச் சித்தர்களி லொருவனாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3451 - 3455 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3451. போட்டபின்பு பில்லைதனை பதனம்பண்ணு பொங்கமுடன் நாதாக்கள் சொற்படிக்கி
தேட்டமுடன் பில்லைதனை பதனம்பண்ணி தெளிவான காயாதிகற்பவுண்டை
நீட்டமுடன் காயகற்ப செந்தூரத்தை நீணிலத்தில் கொண்டதொரு ஞானிகட்கு
மூட்டமுடன் கருவாதி மூலியுண்டை முனையான சிலும்புதனில் வைத்துக்கேளே

விளக்கவுரை :


3452. கேளேதான் சிலும்புதனில் மூலியுண்டை கிருபையுடன் தான்வைத்து சொல்லக்கேளு
பாளேதான் போகாமல் அக்கினியைப்போடு பாகமுடன் சிலும்பிதனைக் குடித்தபோது
நாளேதான் நாதாக்கள் சொற்படிக்கு நலமான புகையதுவுங் கபாலந்தன்னில்
சூளேதான் புகையதுவும் மேலேநோக்கி சுருக்குடனே லாகிரியைச் காட்டும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

3453. பாரேதான் சிலும்புதனில் புகையெழும்பி பண்பான லாகிரியை மீட்டும்போது
நேரேதான் காயாதிகற்ப செந்தூரந்தான் நீடாழிக்காலம்வரை பழுதுறாது
கூரேதான் நவகோடி ரிஷிகள்தாமும் குறிப்பான சித்தர்முனி யனேகம்பேர்
சீரேதான் இப்படியே சொல்லாமற்றான் சீரான செந்தூரங் கொடுத்தார்காணே

விளக்கவுரை :


3454. காணவே காயாதிசெந்தூரத்தை காசினியில் இப்படியே கெடுத்தார்தாமும்
தோணவே காயாதிகற்பத்துக்கு துறைகோடி முறைகோடி தொந்தங்கோடி
பூணவே யிப்புகையைச் செய்யாவிட்டால் புகழான செந்தூரங் கெட்டுப்போகும்
வாணவே காயாதிகொண்டபேர்க்கு வளமுடனே லாகிரிகள் வேண்டும்பாரே

விளக்கவுரை :


3455. வேண்டியதோர் கருமானம் இன்னஞ்சொல்வேன் விருப்பமுடன் காயாதிகொண்டபேர்கள்
தூண்டியே முன்சொன்ன சூரணத்தை துப்புரவாய் கியாழமது செய்துகொண்டு
தாண்டியே யாவின்பால் சீனிதானும் சட்டமுடன் தூள்போட்டு கியாழஞ்செய்து   
தீண்டியே விஷம்போக வந்திசந்தி திறமாக குடிப்பதுவே யமுர்தமாமே

விளக்கவுரை :


Powered by Blogger.