போகர் சப்தகாண்டம் 3586 - 3590 of 7000 பாடல்கள்
3586. தானான வின்னமொரு
கருமானங்கேள் தாரணியில் மானிடர்கள் அறியவென்று
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனார் குருவினது கடாட்சத்தாலே
தேனான வடிவேலர் சுப்பராயர்
தேசத்தில் பிறந்ததோர்வன்மையாவும்
பானான
சாத்திராயுத்தம்பார்த்து பகருகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்றே
விளக்கவுரை :
3587. பிழைக்கவே வடிவேலர் தம்மைத்தானும் பெரான வுலகில்தேவனென்றும்
வழக்கமுடன் சாத்திரங்கள்
இதிகாசங்கள் வளமாகப்பாடிவைத்தார் வினயம்யாவும்
முழக்கமுடன் வடிவேலர்
முருகன்தானும் முற்பிறப்பில் பஞ்தாக்கியனாக
தழக்கமுடன் பிறந்ததாய்
சாத்திரங்கள் தாரிணியில் கவிவானர் கட்டினாரே
விளக்கவுரை :
[ads-post]
3588. கட்டினார் வடிவேலர்
முருகன்தானும் காசினியில் ஆறுமுக சொரூபமாகி
திட்டமுடன் பள்ளியிலே
யோதும்போது தீரமுடன் அரிநமோவென்றுகூறி
இட்டமுடன் சொல்லெனவே
பிரமன்தானும் எழிலான வடிவேலர் சொல்வேனென்றார்
சட்டமுடன் அரிக்குத்தான்
பரியஞ்சொன்னால் சாங்கமுடன் யானுரைப்பேன் சத்தியவானே
விளக்கவுரை :
3589. சத்தியமாய் சொல்லுகையில்
இந்திரன்தானும் சந்தோஷமாகவல்லோ தாமழைத்து
வெத்தியுடன்
அசுரர்களைத்தான்ஜெயிக்க விருப்பமுடன் தானழைத்துசென்றபோது
புத்தியுடன் பகவானை
நமஸ்கரித்து புகழாக அரக்கர்களை சங்கரித்து
நித்தியமுஞ் சூரசங்காரனாக
நீணிலத்தில் வெகுகால மிருந்திட்டாரே
விளக்கவுரை :
3590. இருந்திட்டார் வள்ளிதனை
சிறையெடுத்து எழிலான கலவதனிலிருந்தாரென்று
பொருந்தவே வுலகுதனில்
சாமியாக பொங்கமுடன் வீற்றிருந்தார் சதாகாலந்தான்
வருந்தியே கோடிமனு
பேர்களெல்லாம் வையகத்தில் மகாதேவனென்றுசொல்லி
திருந்தியே நமஸ்கரித்து
தலைகுனிந்து திகழுடனே கோடியுகமிருந்தார்தாமே
விளக்கவுரை :