போகர் சப்தகாண்டம் 3601 - 3605 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3601. உரைத்தாரே முன்னோர்சொல் நூல்களெல்லாம் உத்தமர்கள் பாடிவிட்டார் அனுமாரைத்தான்
நிரைத்தாரே தேவனென்றும் கர்த்தனென்றும் நிலையான இதிகாச புராணமெல்லாம்
பரைத்தாரே சிரஞ்சீவிப் பட்டமென்றும் பாருலகில் வரம்பெற்ற ஆஞ்சனென்றும்
வரைத்தாரே மிருகமென்ற கூட்டந்தன்னை வலுவான மிருகமென்றும் வசனித்தாரே

விளக்கவுரை :


3602. வசனித்தார் மிருகமென்ற அனுமார்தானும் வன்மையுள்ள வானரமாங்கூட்டந்தன்னில்
புஜவீரபராக்கிரம வீரனான புனிதமுள்ள ஆஞ்சனேய ஜாதிகண்டீர் 
சதகோடி வானரமாய் ஆஞ்சநேயன் தாரணியில் தேவனாயிருப்பாரானால்
குசமுடைய ஸ்ரீராமர் பக்கல்நின்று குவலயத்தில் மிகயுத்தம் செய்தார்தானே

விளக்கவுரை :

[ads-post]

3603. தானான ஸ்ரீராமர்க்குதவியாக தாரிணியில் வெகுயுத்தம்செய்துமென்ன 
கோனான ஸ்ரீராமர் மாண்டுபோனார் குவலயத்தில் வானரங்களெல்லாம் மாண்டார்
பானான பாருலகில் ஆஞ்சனேயர் படைக்கூட்டம் தன்னுடனே மண்ணாய்ப்போனார்
தேனான யெனதையர் காலாங்கிநாதர் தெளிவுடனே எந்தனுக்கு உரைத்தார்தாமே

விளக்கவுரை :


3604. வுரைத்தாரே காலாங்கி சொற்படிக்கி வுத்தமனே யடியேனுந்தாள்வணங்கி
வரைக்கமலம் பதாம்புயத்தைக் கரத்தில்தொட்டு வாகுடனே யானுரைப்பேன் இன்னுங்கேளிர்
முறைக்கவே ராமருடன் ஆஞ்சநேயர் மூதுலகில் இறந்ததொரு கதைமெய்யாச்சு
திரைக்கவே வுலகுதனில் இருந்தார்யார்தான் திரளுடனே மண்கூறாய்ப் போனார்தாமே

விளக்கவுரை :


3605. போனாரே சாத்திரங்கள் புராணந்தன்னில் புகழான வனுமாரைக் கற்பகாலம்
வானோர்கள் முதலான பேர்களெல்லாம் வையகத்தில் சிரஞ்சீவி பட்டம்பெற்றோன்
ஏனோதான் வீணாக மாண்டாரென்று எழிலான வார்த்தைதன்னை நம்பாமற்றான்
கானான தேவர்முனி ரிஷிகூட்டங்கள் கட்டுரைத்த வாக்கியமும் பொய்யாப்போச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3596 - 3600 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3596. வுருக்கியந்த வங்கத்தை மூவேழுவட்டம் ஒன்றான சாத்திலே வுரைத்தபின்புயெடுத்து
தருக்கிசைந்த வோட்டில்வைத்து தாளகமுங்கூட்டி தனித்தடுப்பிலேத்தியே நாயுருவிக்கப்பால்
நெருங்கியதை வறுத்துவங்கம்நீராக்கிப்பின்பு நீன்குமரிச்சாற்றிலே
யொருசாம மரைத்ததிரிக்கிசைந்த குகைக்குளிட்டு யெருவில்வைத்து சேவலின் படமாக நாலிலிடலாமே

விளக்கவுரை :


3597. சேவலின் புடமாக தினமும்ரெண்டு வட்டந்திரமாக சாற்றிலரைத்திருவதுநாளையிலே
யேவலுறுபுடம் நாற்பத்தொண்ணு குறையாமலிடவே செந்தூரம் முருக்கம்பூநிறமாம்
ஆவலுறுவெள்ளிதனை ஒருகளஞ்சியுருகி அதுதெளிவில் பணவிடைசெந்தூரமதை
கொடுக்கநீ வலுமையாக மாற்றேழரையுங்காணும் நிமலனார் திருவாணை நிசங்கவரையிதுவே

விளக்கவுரை :

[ads-post]

3598. இதுதனிலுஞ் சுறுக்கான இன்னமொருவகைகேளு இந்நிலத்தில் ஆதிமருந்து ஆவரையின்பட்டை
சதிராக கொண்டுவந்து வுணர்த்தி ஒருபானைதனிலிட்டு பாதாள அஞ்சனத்தில் தயிலமதைவாங்கி
இறிக்கியதை யிம்மிவைத்துக்கொண்டு மேலானகோழிமுட்டை வெண்கருவையதிலே
மதுவாக வுரைத்ததையுமாட்டிரேத் துவசமாகச் செய்தபின்பு அருதாரம்வாங்கே  

விளக்கவுரை :


3599. வாங்கியந்த அரிதாரக்கட்டிதனில் தயிலம்வாகாகவேயுரைத்து வெய்யிலிலேவைத்தால்
பாங்கான செந்தூரமாகுமதையெடுத்து பசுமையாயாறவைத்து வெள்ளியொருகளஞ்சி
யேங்கவே யுருக்கியதில் பணவிடைசெந்தூரம் யேற்கையாய் கொடுக்க மாற்றேழுகுறையாது
நீங்காதே சூதமுனியுரைத்த வகையெல்லாம் நிசமாகும் கண்டறிந்து தேறிநீபாரே

விளக்கவுரை :


3600. பாரேதான் இன்னமொரு கருமானங்கேள் பாலகனே யருண்மைந்தா சொல்வேனப்பா
நேரேதான் அனுமாரின் உற்பவத்தை நேரான மாணாக்கன் அறியவென்று
சீரேதான் வாய்வினிட தனயனென்றும் சிறப்பான நூலெல்லாம் சொன்னார்கண்டீர்
கூரேதான் கவிவானர் எல்லாங்கூடி குவலயத்தில் கட்டுறைதான் உரைத்தார்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3591 - 3595 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3591. தாமான சாத்திரங்கள் சொன்னதெல்லாம் தகமையுடன் பொய்யாச்சு பொன்னுலோகம்
நாமேதான் சொன்னபடி வடிவேலர்தாமும் நாட்டிலோ யிருந்தாரோ யில்லைகண்டீர்
வேமேதான் பூலோகம்தன்னை விட்டுவிடுபட்டு தேகமது மண்ணாய்ப்போச்சு
போமேதான் மண்கூறுமண்ணாய்ப்போச்சு பூவுலகில் இருந்தாராம் காணோம்பாரே

விளக்கவுரை :


3592. உண்டாகும் கெந்தகத் தயிலவகைக்கேளு வுன்னியஞானிபண்டம் பத்துதானெடுத்து
மிரண்டாதி வெள்ளற்றிலிட்டாவியென்று வெண்கருவைநீக்கி மஞ்சள்கருவாகவெடுத்து
தீண்டாத சட்டியிலே யிட்டடுப்பிலேற்றி தனிவாகயெரிமூட்டி தாவியினாலிருக்கப்
பண்டாதிய ருளாலேவருந்தயிலந்தன்னை பண்பாகவெடுக்க பின்னை கெந்தகத்தை வாங்கே

விளக்கவுரை :

[ads-post]

3593. கெந்தகத்தின் மூன்றுபங்கில் பசுவின்பாலில் கெந்தம்விட முன்போலசுத்திசெய்தெடுத்து
துஞ்சாதே பொடியாக்கி சீலைதனில்பரப்பி திரியாகத்திரித்து வண்டத்தயிலத்தைவைத்து
பந்தமாய் அனல்மூட்டி தலைகீழாய்பிடித்து பாத்திரத்தை கீழ்வைத்து
பாங்காக யேந்திவந்துசேர்த்து தயிலத்தையொன்றிலேயடைத்தால் வாகாகப் பின்னுமதில் வகைபகருவாமே

விளக்கவுரை :


3594. கருவாக யிந்தவகை பார்த்தெடுத்த பேர்கள் அகங்கார நிறத்துடனே மாற்று குறைந்திருந்து தானால்
வுருவாகவே யிந்ததயிலமதில் பொன்னைவுள்ளாக்கி யெடுத்துவைத்து ஒருதிரந்தானுக்க
திருவாக நிறம்பசுமையாகமாத்தேறும் செப்பினோம் பின்னுமதில் செப்பவகைகேளு
துருவான சொரிசிரங்கு நோயானார் தனக்கு துளசியிலைத்தனில் கொடுத்து தொகுத்துநீபாரே

விளக்கவுரை :


3595. தொகுத்துநீ பார்க்கவென்றால் வங்கவகைதனிலே சித்தியுள்ள செந்தூரம் சொல்வேன்கேளு
வகுத்தபடி வருஷம் நூற்றிருபதும் சென்றுவளமாகநிற்குமந்த வேம்பிடபழத்தை
வெகுத்தமுடன் கொண்டுவந்து யிடித்ததில் சாரெடுத்து வெறுப்பில்லாதே விரும்பிவைத்து
பகுத்ததிலே இன்னுமொரு பாத்திரத்தில்வாங்கி பாங்காக கருத்தவங்க முருக்கியிதில்சாயே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3586 - 3590 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3586. தானான வின்னமொரு கருமானங்கேள் தாரணியில் மானிடர்கள் அறியவென்று
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் குருவினது கடாட்சத்தாலே
தேனான வடிவேலர் சுப்பராயர் தேசத்தில் பிறந்ததோர்வன்மையாவும்
பானான சாத்திராயுத்தம்பார்த்து பகருகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்றே

விளக்கவுரை :


3587. பிழைக்கவே வடிவேலர் தம்மைத்தானும் பெரான வுலகில்தேவனென்றும்
வழக்கமுடன் சாத்திரங்கள் இதிகாசங்கள் வளமாகப்பாடிவைத்தார் வினயம்யாவும்
முழக்கமுடன் வடிவேலர் முருகன்தானும் முற்பிறப்பில் பஞ்தாக்கியனாக
தழக்கமுடன் பிறந்ததாய் சாத்திரங்கள் தாரிணியில் கவிவானர் கட்டினாரே  

விளக்கவுரை :

[ads-post]

3588. கட்டினார் வடிவேலர் முருகன்தானும் காசினியில் ஆறுமுக சொரூபமாகி
திட்டமுடன் பள்ளியிலே யோதும்போது தீரமுடன் அரிநமோவென்றுகூறி
இட்டமுடன் சொல்லெனவே பிரமன்தானும் எழிலான வடிவேலர் சொல்வேனென்றார்
சட்டமுடன் அரிக்குத்தான் பரியஞ்சொன்னால் சாங்கமுடன் யானுரைப்பேன் சத்தியவானே

விளக்கவுரை :


3589. சத்தியமாய் சொல்லுகையில் இந்திரன்தானும் சந்தோஷமாகவல்லோ தாமழைத்து
வெத்தியுடன் அசுரர்களைத்தான்ஜெயிக்க விருப்பமுடன் தானழைத்துசென்றபோது
புத்தியுடன் பகவானை நமஸ்கரித்து புகழாக அரக்கர்களை சங்கரித்து
நித்தியமுஞ் சூரசங்காரனாக நீணிலத்தில் வெகுகால மிருந்திட்டாரே

விளக்கவுரை :


3590. இருந்திட்டார் வள்ளிதனை சிறையெடுத்து எழிலான கலவதனிலிருந்தாரென்று
பொருந்தவே வுலகுதனில் சாமியாக பொங்கமுடன் வீற்றிருந்தார் சதாகாலந்தான்
வருந்தியே கோடிமனு பேர்களெல்லாம் வையகத்தில் மகாதேவனென்றுசொல்லி
திருந்தியே நமஸ்கரித்து தலைகுனிந்து திகழுடனே கோடியுகமிருந்தார்தாமே

விளக்கவுரை :


Powered by Blogger.