போகர் சப்தகாண்டம் 3601 - 3605 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3601 - 3605 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3601. உரைத்தாரே முன்னோர்சொல் நூல்களெல்லாம் உத்தமர்கள் பாடிவிட்டார் அனுமாரைத்தான்
நிரைத்தாரே தேவனென்றும் கர்த்தனென்றும் நிலையான இதிகாச புராணமெல்லாம்
பரைத்தாரே சிரஞ்சீவிப் பட்டமென்றும் பாருலகில் வரம்பெற்ற ஆஞ்சனென்றும்
வரைத்தாரே மிருகமென்ற கூட்டந்தன்னை வலுவான மிருகமென்றும் வசனித்தாரே

விளக்கவுரை :


3602. வசனித்தார் மிருகமென்ற அனுமார்தானும் வன்மையுள்ள வானரமாங்கூட்டந்தன்னில்
புஜவீரபராக்கிரம வீரனான புனிதமுள்ள ஆஞ்சனேய ஜாதிகண்டீர் 
சதகோடி வானரமாய் ஆஞ்சநேயன் தாரணியில் தேவனாயிருப்பாரானால்
குசமுடைய ஸ்ரீராமர் பக்கல்நின்று குவலயத்தில் மிகயுத்தம் செய்தார்தானே

விளக்கவுரை :

[ads-post]

3603. தானான ஸ்ரீராமர்க்குதவியாக தாரிணியில் வெகுயுத்தம்செய்துமென்ன 
கோனான ஸ்ரீராமர் மாண்டுபோனார் குவலயத்தில் வானரங்களெல்லாம் மாண்டார்
பானான பாருலகில் ஆஞ்சனேயர் படைக்கூட்டம் தன்னுடனே மண்ணாய்ப்போனார்
தேனான யெனதையர் காலாங்கிநாதர் தெளிவுடனே எந்தனுக்கு உரைத்தார்தாமே

விளக்கவுரை :


3604. வுரைத்தாரே காலாங்கி சொற்படிக்கி வுத்தமனே யடியேனுந்தாள்வணங்கி
வரைக்கமலம் பதாம்புயத்தைக் கரத்தில்தொட்டு வாகுடனே யானுரைப்பேன் இன்னுங்கேளிர்
முறைக்கவே ராமருடன் ஆஞ்சநேயர் மூதுலகில் இறந்ததொரு கதைமெய்யாச்சு
திரைக்கவே வுலகுதனில் இருந்தார்யார்தான் திரளுடனே மண்கூறாய்ப் போனார்தாமே

விளக்கவுரை :


3605. போனாரே சாத்திரங்கள் புராணந்தன்னில் புகழான வனுமாரைக் கற்பகாலம்
வானோர்கள் முதலான பேர்களெல்லாம் வையகத்தில் சிரஞ்சீவி பட்டம்பெற்றோன்
ஏனோதான் வீணாக மாண்டாரென்று எழிலான வார்த்தைதன்னை நம்பாமற்றான்
கானான தேவர்முனி ரிஷிகூட்டங்கள் கட்டுரைத்த வாக்கியமும் பொய்யாப்போச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar