போகர் சப்தகாண்டம் 3771 - 3775 of 7000 பாடல்கள்
3771. உண்டாகு மிவ்வளவு
மகிமைதானும் வுத்தமனே சட்டமுனி சமாதிதன்னில்
திண்டான வதிசயங்கள்
சொல்லப்போமோ திகவான சமாதிக்கு வுள்ளதாக
நண்புடனே வதிசயங்கள்
மிகநடக்கும் நாதாந்த சித்தொளிவின் மகிமையப்பா
கண்பான சித்துமுனி சட்டநாதர்
காசினியில் வருவதற்கு நாளுமாச்சே
விளக்கவுரை :
3772. ஆச்சப்பா சட்டமுனி
வருகுங்காலம் வப்பனே பதினாறு வாண்டுமாச்சு
பேச்சப்பா சொன்னபடி
திருஷ்டாந்திரங்கள் பேருலகில் நடந்துவர கண்டார்தாமும்
மூச்சடங்கிப் போனதொரு
தேகந்தானும் முன்போல வருவதற்குநாளுமாகி
பாச்சலுடன் சட்டமுனி
நாதர்தாமும் பாறையென்ற புத்ததுவும் வெடிக்கலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
3773. வெடித்தபின்பு கைலாச சட்டநாதர் மேன்மையுடன் மேதினியில் வந்தாரங்கே
நடிக்கவே நாதாந்த
கூட்டத்தார்கள் நன்மையுடன் கிட்டிவைத்து நமஸ்கரித்து
துடிப்புடனே கைலாச
சட்டர்தம்மை தொழுதிரங்கி தெண்டனிட்டு வணக்கங்கூற
கடிப்பிடிவோன் முரசோடு
வாத்தியங்கள் கருத்துடனே தானகைத்து தொழுதிட்டாரே
விளக்கவுரை :
3774. தொழுதுமே சீஷவர்க்க
மாயிரம்பேர் தோறாமல் மணிவிடைக்கு முன்னேநின்று
பழுதுபடாத் திருமேனி
தன்னைப்பார்த்து பட்சமுடன் தானுரைத்தார் சீஷரெல்லாம்
வழுவுவதும் நேராத மேனிதன்னை
வளமுடனே தான்பார்த்து பிரமைகொண்டு
புழுகுடனே வாசனைகள்
கையிலேந்தி பொன்னடிக்கு வர்ச்சனைகள் செய்திட்டாரே
விளக்கவுரை :
3775. செய்யவே
சீஷவர்க்கமாயிரம்பேர் சிறப்பான கெதியெமக்கு என்னவென்று
பையவே தொழுதிறங்கி
கேட்கும்போது பட்சமுள்ள கைலாசர் கூறலுற்றார்
மெய்யான தேகமதை நம்பவேண்டாம்
மேதினியில் இரந்தாலும் லாபமென்ன
துய்யசெம்பொன் கோடிமிக
வைத்திட்டாலும் துப்பரவாய் வொன்றுவரக் காணேன்பாரே
விளக்கவுரை :