போகர் சப்தகாண்டம் 3756 - 3760 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3756 - 3760 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3756. தொடர்ந்துமே காவனத்தை விட்டுநீங்கி தோற்றமுடன் பொதிகைக்குச் செல்லும்போது
அடர்ந்த தொருகானாறு மலைகள்தாண்டி ஐயமுடன் பின்தொடர்ந்தார் ஆயிரம்பேர்
கடந்துமே மலைகுகைகள் விட்டுநீங்கி கடிதான பொதிகைமலை சாற்பில்சென்று
நடந்துமே கைலாசசட்டநாதர் நாதாந்தக்கூட்டமுடன் அமர்ந்திட்டாரே

விளக்கவுரை :


3757. இட்டாரே சட்டமுனி நாதர்தாமும் எழிலான குகையோரம் தன்னிற்சென்று
பட்டமரமொன்றதனைக் கண்டாரங்கே கண்டதுவும் பட்டமரம் துளிருண்டாகி
சட்டமுடன் இந்நாடு சமாதிபூண சாங்கமுடன் மலையோர மிதுதானென்று
வெட்டவெளிதனில் நின்று மயங்கும்போது வேதாந்த குருபரமும் வந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

3758. வந்திட்ட வேதாந்த ரிஷியார்தம்மை வாகுடனே சட்டமுனி யாருங்கண்டு
நொந்திட்ட மனதுடனே வியனங்கொண்டு நுணுக்கமுடன் சித்தொளிவைக் கண்ணிற்கண்டு
அந்தமுடன் என்சாமி குருவேயென்று வடிபணிந்து கைலாசசட்டநாதர்
சிந்தனையும் மிகத்தளர்ந்து மெய்மறந்து சீர்பாதந் தொட்டுமல்லோ பணிந்திட்டாரே

விளக்கவுரை :


3759. பணிந்திட்ட கைலாச சட்டர்தம்மை பரமகுரு வேதாந்த சித்துதாமும்
தணிவுடனே வார்த்தையது மிகவுஞ்சொல்லி வளமையுடன் சிலகாலம் இருக்கவென்று
அணியணியாய் சீஷவர்க்கம் பக்கல்நிற்க அங்ஙனவே சட்டிமுனி நாதர்தாமும்
துணிவுடனே வுபதேசம் மிகவுஞ்சொல்லி துப்புறவாய் சமாதிக்கு இடந்தந்தாரே

விளக்கவுரை :


3760. தந்தாரே வேதாந்த ரிஷியார்தாமும் தகமையுடன் சட்டமுனி நாதருக்கு
வந்துமே வுபதேசம் மிகவுஞ்சொல்லி வளமையுடன் சிலகாலமிருந்தபின்பு
சொந்தமுடன் தன்பக்கல் சமாதிபூண சுத்தமுடன் சட்டமுனிக் குபதேசித்து
இந்தவுலகினி லிருக்கநீதியில்லை யென்றுமே வேதரிஷி மறைந்திட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar