போகர் சப்தகாண்டம் 3761 - 3765 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3761 - 3765 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3761. மறைந்துமே போகையிலே விருட்சந்தானும் மறுபடியும் துளிரதுவு மொடுங்கியேதான்
குறைந்துமே பச்சைமரம் பட்டுப்போச்சு குவலயத்தில் பேராச்சு மகிமைதானும்
திறைந்துமே சமாதியது மூடலாச்சு திண்மையுள்ள சட்டமுனி மயங்கிநின்று
முறைந்துமே விசனமது மிகவாய்க்கொண்டு முடிவணங்கி சமாதிதனைப் பணிந்திட்டாரே

விளக்கவுரை :


3762. பணிந்துமே சிலகாலஞ் சென்றபின்பு பாரினிலே சட்டமுனி நாதர்தாமும்
துணிந்துமே சமாதிக்குப் பின்னுஞ்செல்ல துறையான சீஷவர்க்கந்தனையழைத்து
அணியணியாய் என்முன்னே சுற்றிருங்கள் வப்பனே வதிசயங்கள் பிறக்கலாகும்
மணிபோன்ற ஓசையது கேட்கும்பாரு மகத்தான சமாதியிட பீடந்தானே

விளக்கவுரை :

[ads-post]

3763. தானான சமாதியிட பீடந்தன்னில் தண்மையுள்ள சீஷவர்க்க மாயிரம்பேர்
தேனான மணிபோலே சீஷவர்க்கம் தெளிவாக முன்நிற்க வேண்டுமென்பார்
மானான வையகத்தில் வதிசயங்கள் மார்க்கமுடன் தான்காண்பீர் வதிதமெத்த
பானான பராபரியாள் கண்ணில்தோற்றும் பாருலகி லிருந்துவந்து மூடிப்போமே

விளக்கவுரை :


3764. மூடிப்போம் பகல்தனிலே பரிதிகாணார் மூவேழு மண்டலமும் இருளாய்போகும்
நாடியே சித்தர்முனி நடுங்குவார்கள் நாதாந்த சித்தொளிவு சொரூபங்காணார்
கூடியே கூட்டமிட்டு வார்த்தைபேசி குவலயத்தி லிவர்போல சித்துண்டோசொல்
வாடியே மதிகலங்க மனமும்பொங்கி வையகத்தில் மதிமயங்கி நிற்பார்தாமே

விளக்கவுரை :


3765. நிற்பாரே சமாதியிட நடுமையத்தில் நிலையான தேகமதை தானிறுத்தி
கற்போன்ற காயமதை மூச்சடங்கி காசினி எல்லவரும் பிரமித்தேங்க
தற்பரமாஞ் சொரூபமதை வுள்ளடக்கி தாரிணியில் சமாதிக்குள் தானிறங்கி
சிற்பரனைத் தியானித்து மனதிலேதான் சின்மயத்திலிருந்துகொண்டு ஜெபித்திட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar