போகர் சப்தகாண்டம் 3766 - 3770 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3766 - 3770 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3766. இருந்தாரே மூச்சடங்கி மூணுநாளும் எழிலான சிவானந்த வமுர்தம்பூண்டு
பொருந்தியே காயமதை மண்ணிற்சாய்த்து பொங்கமுடன் மேற்பதவி பெறவேயெண்ணி
வருந்தியே சீஷர்களை தாமழைத்து வசனித்தார் உபதேசம் அனேகங்கோடி
திருந்தியே தாமுறைத்து பாறைமூட திகழான புத்திமதி யோதிட்டாரே

விளக்கவுரை :


3767. ஓதவே சீஷவர்க்கமாயிரம்பேர் ஓகோகோ நாதாந்த சித்துதாமும்
நீதமுடன் பின்னுமவர் சமாதிபூண்டு நீனிலத்தில் மண்ணோடே காயந்தன்னை
தோடமுடன் உள்ளங்கி இருப்பதற்கு தொல்லுலகில் பாசமதை சுட்டறுத்து
வேதமுனி வேதாந்த வாக்குபோல வீரமுடன் தாமறைந்தார் சித்துதாமே  

விளக்கவுரை :

[ads-post]

3768. சித்தான சட்டமுனி நாதர்தாமும் சிறப்புடனே மண்ணதனில் மறைந்தபோது
புத்தான மண்ணதுவும் மூடியல்லோ பொங்கமுடன் தான்சமைந்து வளர்ந்திருக்கும்
முத்தான பூசையது மிகநடக்கும் மூதுலகில் சட்டமுனி சமாதியென்றும் 
நித்தமுடன் பூசையது மிகநடக்கும் நேர்மையுடன் அதிசயங்கள் காணலாமே 

விளக்கவுரை :


3769. காணலா மசரீரி வாக்குண்டாச்சு காசினியில் பதினாறு வருடமட்டும்
பூணமாஞ் சமாதிதனி லிருப்பேனென்றும் புகழான வாக்கியமும் கேட்கலாச்சு
தோணவே திரிகால பூசைமார்க்கம் தொல்லுலகில் சீஷவர்க்கம் செய்வார்பாரு
வேணவே கீதங்கள் வாத்தியங்கள் விருப்பமுட னெய்பவர்கள் அனந்தமாமே

விளக்கவுரை :


3770. அனந்தமாம் அமாவாசை பருவந்தன்னில் வப்பனே யாண்டுக்கு ஒருநாளப்பா
அனந்தமாஞ் சிலம்பொலியி னோசைகேட்கும் அப்பனே நடுச்சாம வேளைதன்னில்
அனந்தமாம் வேதமுறை கோஷ்டந்தானும் அவனியெலாங் கிடுகிடுத்து வதிரலுண்டாம்
அனந்தமாஞ் சமாதியது சுழலுண்டாகும் வப்பனே கோழ்டமது மிகவுண்டாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar