போகர் சப்தகாண்டம் 3791 - 3795 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3791. பாரேதான் சீஷவர்க்கந்தனையழைத்து பாங்குடனே கமலமுனி கூறும்வண்ணம்
நேரேதான் தேகமதை மறந்தேனப்பா நேர்மையுடன் பாசபந்த மற்றேனென்றார்
சீருடனே வுயிர்த்தோழனிழந்தேனென்றார் சிறப்பான சீஷவர்க்கமறந்தேனென்றார்
தஈரேதான் பாருலகு மறந்தேனென்றார் தீரமுடன் மூவாசை யற்றேன்தானே  

விளக்கவுரை :


3792. தானான பேரின்ப நிலையில்நின்று சார்பான சிற்றின்ப நிலைமறந்தேன்  
தேனான எனதையர் புஜண்டரப்பா குருவினதுவாக்கு பிசகாதுவண்ணம்
பானான மனோன்மணியை மனதிலுண்ணி பாருலகில் வாக்குமுறை கூறலுற்றார்
தேனான என்குருவே புஜண்டநாதர் தேற்றமுடன் சமாதிக்குப் போரென்றானே

விளக்கவுரை :

[ads-post]

3793. போகின்றேன்ன யகத்தையான்மறந்து பொங்கமுடன் சமாதிதனிலிறங்கவேதான்
சாகின்ற சமாதியது யடியேன்தானும் சட்டமுடன் சிலாகாலமிருப்பதற்கு
நோகின்றேன் எனதையர் புஜண்டநாதர் நோக்கமுடன் அடியேனுஞ்சமாதிபூண
யாகின்ற யடியேனும் நினைக்குங்காலம் பட்சசுடன் ஆதரிக்க வேண்டும்பாரே

விளக்கவுரை :


3794. வேண்டியே கமலமுனி சித்துதாமும் வேதாந்த புஜண்டரைத்தான் நினைத்துமல்லோ
கூண்டுடனே காயமது யழியாமற்றான் கொப்பெனவே சமாதிதனி லிறங்கும்போது
தூண்டியே சீஷர்களை தாமழைத்து துப்புறவாய் கூறலுற்றார் கமலர்தாமும்
மாண்டுமே சீனபதிதன்னிலப்பா மகத்தான சமாதிதனி லிறங்கிட்டேனே

விளக்கவுரை :


3795. இட்டேனே நெடுங்கால மிருபதாண்டு எழிலான சமாதிதனிலிருப்பேனென்று
சட்டமுடன் அசரீரி வாக்குண்டாச்சு சதானந்த சீஷரெல்லாங் காதில்கேட்டார்
திட்டமுடன் இருபதாண்டு பின்பு தீரமுடன் மேதினியில் வருவேனென்று
கட்டான வாக்கியமும் பிறக்கலாச்சு கருவான சீஷரெல்லாம் பயந்திட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3786 - 3790 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3786. அமர்ந்தாரே அலைகடலினோரமப்பா அங்குள்ள கற்பாறைதன்னிலேதான்
சுமர்ந்திடவே பிரதமையா மொன்றுதானும் சீலமுடன் மலைதனையே சுமந்துகொண்டு
தமர்ந்திடவே மலைதனிலே குகைதானுண்டு தடாகமுண்டு கானாறுவதிலேவுண்டு
கமர்ந்திடவே கமலமுனி சித்துதாமும் கருவாக சுனையோர மிருந்திட்டாரே

விளக்கவுரை :


3787. இருக்கவே கமலமுனி சித்துதாமும் எழிலான சிவயோகந்தன்னில்நிற்க
வருகவே மலைதனிலே சீஷவர்க்கம் வளமாக நூறுபேர் கூடிவந்தார்
பொருக்கவே கமலமுனி வருகிற்சென்று பொங்கமுடன் சாஷ்டாங்கம் சரணஞ்செய்தார்
தருக்கவே கமலமுனி சித்துதாமும் தயவுடனே யாரென்று கேட்டார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

3788. கேட்டதொரு விடைதனக்கு வுத்தாரமென்றார் கெவனமுடன் கமலமுனி சொன்னதற்கு
மீட்டமுடன் சீஷவர்க்கம் நூறுபேரும் நேர்மையுடன் குருதனக்குக் கூறலுற்றார்
தாட்டிகமாய் மலைதனிலே வந்தசித்து தாரணியி லபுரூபசித்துவென்று
நாட்டமுடன் நாங்களெல்லாந் தம்மைக்கண்டு நலமுடனே சுகம்பெறவே வந்திட்டோமே

விளக்கவுரை :


3789. வந்தோமே சித்தொளிவின் பதாம்புயத்தை வாகுடனே கண்டுதெரிசிப்பதற்கு
அந்தமுடன் வந்ததொரு எங்களைத்தான் வாதரிக்க வேண்டுமென்றுவடிபணிந்து
எந்தவிதந் தன்னிலேதான்எங்களுக்கு எழிலான வுபதேசஞ் செய்வீரென்று
முந்தவே குகைதேடி வந்தோமையா முன்னின்று கார்க்கவென வகுத்திட்டாரே

விளக்கவுரை :


3790. வகுத்திட்ட சீஷருக்கு கமலர்தாமும் வளம்பெறவே ஞானோபதேசம்சொல்வார்
தொகுத்திட்ட மலைதனிலே இருந்துகொண்டு தோற்றமுடன் சமாதிக்கு இடமுஞ்சொல்லி
பகுத்திட்ட மாகவேதான் சமாதிபூண்டு பட்சமுடன் தாமுரைத்தார் சீஷருக்கு
விகுத்திட்ட மாகவல்லோ கமலர்தாமும் பேரான சமாதியிடம் நின்றார்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3781 - 3785 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3781. தானான மோட்சவழிக் கிடமேதேடி சதாகாலமிருப்பதுவே சாயுச்சியந்தான்
வேனான எனதையர் சொற்படிக்கி கொற்றவனே இரண்டுமுறை சமாதிகண்டேன்
தேனான சீடர்களே நீங்களுந்தான் தெரிந்திருந்து பவக்கடலை சாரவேண்டாம்
மானான வையகத்தில் சிலநாள்தங்கி மார்க்கமென்னும் மோட்சவழி சேருவீரே

விளக்கவுரை :


3782. சேருவீர் என்றதுமே சட்டநாதர் செம்மலுடன் பூலோகவாசைவிட்டு
பாருள்ளே மறுபடியுஞ் சமாதிக்கேக பட்சமுடன் சீஷருக்குத் தாமுரைத்து
சீருடனே சமாதிக்குள் பிரவேசமாகி சிறப்புடனே சமாதிதனை மூடுமென்று
தூருடனே சமாதியது திறக்கவேண்டாம் துப்புறவாய் தேகமது மண்ணாய்ப்போமே

விளக்கவுரை :

[ads-post]

3783. போமேதான் சடலமது மண்ணாய்ப்போகும் பொங்கமுடன் திறக்காமல் என்றுசொல்லி
ஏகுமே சட்டரிட வாக்குதப்பி எழிலான சமாதியது திறக்கவேண்டாம்
ஆகுமே தேகமது வழிந்துபோகும் வப்பனே யான்வருக மாட்டேனென்றார்
சாகுமே தேகமது சதாகாலந்தான் சட்டமுடனிருந்தாலும் பலங்காணேணே

விளக்கவுரை :


3784. காணேணே காயாதி கற்பந்தன்னை கருவாக யான்கொண்டபடியினாலே
வீணாக தேகமது யழியாதப்பா மேதினியில் வெகுகால மிருக்கலாகும்
பூணாத சமாதியது மூடியல்லோ பொங்கமுடன் சதாகாலமிருக்கவேண்டும்
தோணாது வுலகமது முடிவுகாலம் தோற்றமுடன் வருகுவதும் வுண்மையாமே

விளக்கவுரை :


3785. உண்மையா யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வுத்தமரே மாணாக்க ரறியவென்று
வன்மையாங் கமலரென்ற முனிவரப்பா வரைகோடி வெகுகால மிருந்தசித்து
நண்மையாந் திரைகடலேழுஞ்சுத்தி நாட்டிலுள்ள வளப்பமெல்லாம் கண்டாராய்ந்து
தன்மையுடன் சீனபதி தந்துமல்லோ தாக்கான பதிதேடி யமர்ந்திட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3776 - 3780 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3776. பாரப்பா மானிலத்தி லிருந்துமென்ன பாங்குடனே மாளிகைதான் கட்டியென்ன
நெரப்பா வுலகுதனை யாண்டுமென்ன நேர்மையுடன் சிவயோகஞ்செய்துமென்ன
சூரப்பா பலநூலுங் கற்றுமென்ன கொற்றவனாய் மதியூகியானாலென்ன
வேரேதான் காயாதி கற்பங்கொண்டு விருப்பமுடன் இருந்தென்ன லாபங்காணே

விளக்கவுரை :


3777. காணேணே லாபமொன்று பார்த்ததில்லை காசினியில் ஆசைக்கோர் அளவுமில்லை
பூணாரம் பூண்டென்ன காயத்திற்கு புகழான தேகமது நிலைநில்லாது  
வீணான வுலகுதனிலாசைகொண்டு விருப்பமுடன் கெட்டவர்கள் கோடாகோடி
தோணாத கருவெல்லாம் தோன்றச்செய்து தொல்லுலகில் இறந்தவர்கள் கோடியாமே

விளக்கவுரை :

[ads-post]

3778. கோடியாம் யுகாந்தவரை காலமப்பா கொற்றவனே யிருந்தாலும் ஒன்றுமில்லை
நாடியே பராபரத்தை நண்ணலொப்பாம் நலமுடனே பாரினிலே இருந்துகொண்டு
தேடியே நாள்வருகுகுங் காலமட்டும் தேசமதில் பவக்கடலை நீக்கியேதான்
ஓடியே பலவழியிற் சென்றுநீதான் வுத்தமனே புனிதனாயிருந்துகொள்ளே  

விளக்கவுரை :


3779. கொள்ளவே நன்னிலையி லிருந்துகொண்டு கொடும்பாசந் தனையகற்றி
குவலயத்தில் விள்ளவே பாசமென்ற கயத்தைநீக்கி வேதாந்தநுட்பத்தின் செயலுங்கண்டு
மெள்ளவே கும்பகத்தி லிருந்துகொண்டு மேலான சிவயோகந் தன்னிற்சென்று 
வுள்ளபடி யாத்தும் கந்தனாகி வுலகுதனில் சிலகால மிருந்திடாயே

விளக்கவுரை :


3780. இருந்தாலும் தேகமது நிலைநில்லாது எலிலான தேகமது மண்ணாய்ப்போகும் 
குருந்தவே காயாதி கொண்டிட்டாலும் கொப்பெனவே மண்ணோடே மண்ணாய்ப்போகும்
பொருந்தவே நானிருந்தேன் கோடிகாலம் பொங்கமுடன் காட்சிகளு மனேகங்கண்டேன்
வருந்தியே பராபரத்தை மனதிலுண்ணி வாகுடனே காண்பதுவே மோட்சந்தானே

விளக்கவுரை :


Powered by Blogger.