3786. அமர்ந்தாரே அலைகடலினோரமப்பா
அங்குள்ள கற்பாறைதன்னிலேதான்
சுமர்ந்திடவே பிரதமையா
மொன்றுதானும் சீலமுடன் மலைதனையே சுமந்துகொண்டு
தமர்ந்திடவே மலைதனிலே
குகைதானுண்டு தடாகமுண்டு கானாறுவதிலேவுண்டு
கமர்ந்திடவே கமலமுனி
சித்துதாமும் கருவாக சுனையோர மிருந்திட்டாரே
விளக்கவுரை :
3787. இருக்கவே கமலமுனி
சித்துதாமும் எழிலான சிவயோகந்தன்னில்நிற்க
வருகவே மலைதனிலே சீஷவர்க்கம்
வளமாக நூறுபேர் கூடிவந்தார்
பொருக்கவே கமலமுனி
வருகிற்சென்று பொங்கமுடன் சாஷ்டாங்கம் சரணஞ்செய்தார்
தருக்கவே கமலமுனி
சித்துதாமும் தயவுடனே யாரென்று கேட்டார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
3788. கேட்டதொரு விடைதனக்கு
வுத்தாரமென்றார் கெவனமுடன் கமலமுனி சொன்னதற்கு
மீட்டமுடன் சீஷவர்க்கம்
நூறுபேரும் நேர்மையுடன் குருதனக்குக் கூறலுற்றார்
தாட்டிகமாய் மலைதனிலே
வந்தசித்து தாரணியி லபுரூபசித்துவென்று
நாட்டமுடன் நாங்களெல்லாந்
தம்மைக்கண்டு நலமுடனே சுகம்பெறவே வந்திட்டோமே
விளக்கவுரை :
3789. வந்தோமே சித்தொளிவின் பதாம்புயத்தை வாகுடனே கண்டுதெரிசிப்பதற்கு
அந்தமுடன் வந்ததொரு
எங்களைத்தான் வாதரிக்க வேண்டுமென்றுவடிபணிந்து
எந்தவிதந்
தன்னிலேதான்எங்களுக்கு எழிலான வுபதேசஞ் செய்வீரென்று
முந்தவே குகைதேடி வந்தோமையா
முன்னின்று கார்க்கவென வகுத்திட்டாரே
விளக்கவுரை :
3790. வகுத்திட்ட சீஷருக்கு
கமலர்தாமும் வளம்பெறவே ஞானோபதேசம்சொல்வார்
தொகுத்திட்ட மலைதனிலே
இருந்துகொண்டு தோற்றமுடன் சமாதிக்கு இடமுஞ்சொல்லி
பகுத்திட்ட மாகவேதான்
சமாதிபூண்டு பட்சமுடன் தாமுரைத்தார் சீஷருக்கு
விகுத்திட்ட மாகவல்லோ
கமலர்தாமும் பேரான சமாதியிடம் நின்றார்பாரே
விளக்கவுரை :