3781. தானான மோட்சவழிக் கிடமேதேடி சதாகாலமிருப்பதுவே சாயுச்சியந்தான்
வேனான எனதையர் சொற்படிக்கி
கொற்றவனே இரண்டுமுறை சமாதிகண்டேன்
தேனான சீடர்களே
நீங்களுந்தான் தெரிந்திருந்து பவக்கடலை சாரவேண்டாம்
மானான வையகத்தில்
சிலநாள்தங்கி மார்க்கமென்னும் மோட்சவழி சேருவீரே
விளக்கவுரை :
3782. சேருவீர் என்றதுமே சட்டநாதர்
செம்மலுடன் பூலோகவாசைவிட்டு
பாருள்ளே மறுபடியுஞ்
சமாதிக்கேக பட்சமுடன் சீஷருக்குத் தாமுரைத்து
சீருடனே சமாதிக்குள்
பிரவேசமாகி சிறப்புடனே சமாதிதனை மூடுமென்று
தூருடனே சமாதியது
திறக்கவேண்டாம் துப்புறவாய் தேகமது மண்ணாய்ப்போமே
விளக்கவுரை :
[ads-post]
3783. போமேதான் சடலமது
மண்ணாய்ப்போகும் பொங்கமுடன் திறக்காமல் என்றுசொல்லி
ஏகுமே சட்டரிட வாக்குதப்பி
எழிலான சமாதியது திறக்கவேண்டாம்
ஆகுமே தேகமது வழிந்துபோகும்
வப்பனே யான்வருக மாட்டேனென்றார்
சாகுமே தேகமது சதாகாலந்தான்
சட்டமுடனிருந்தாலும் பலங்காணேணே
விளக்கவுரை :
3784. காணேணே காயாதி கற்பந்தன்னை
கருவாக யான்கொண்டபடியினாலே
வீணாக தேகமது யழியாதப்பா
மேதினியில் வெகுகால மிருக்கலாகும்
பூணாத சமாதியது மூடியல்லோ
பொங்கமுடன் சதாகாலமிருக்கவேண்டும்
தோணாது வுலகமது முடிவுகாலம்
தோற்றமுடன் வருகுவதும் வுண்மையாமே
விளக்கவுரை :
3785. உண்மையா யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் வுத்தமரே மாணாக்க ரறியவென்று
வன்மையாங் கமலரென்ற
முனிவரப்பா வரைகோடி வெகுகால மிருந்தசித்து
நண்மையாந்
திரைகடலேழுஞ்சுத்தி நாட்டிலுள்ள வளப்பமெல்லாம் கண்டாராய்ந்து
தன்மையுடன் சீனபதி
தந்துமல்லோ தாக்கான பதிதேடி யமர்ந்திட்டாரே
விளக்கவுரை :