போகர் சப்தகாண்டம் 3776 - 3780 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3776 - 3780 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3776. பாரப்பா மானிலத்தி லிருந்துமென்ன பாங்குடனே மாளிகைதான் கட்டியென்ன
நெரப்பா வுலகுதனை யாண்டுமென்ன நேர்மையுடன் சிவயோகஞ்செய்துமென்ன
சூரப்பா பலநூலுங் கற்றுமென்ன கொற்றவனாய் மதியூகியானாலென்ன
வேரேதான் காயாதி கற்பங்கொண்டு விருப்பமுடன் இருந்தென்ன லாபங்காணே

விளக்கவுரை :


3777. காணேணே லாபமொன்று பார்த்ததில்லை காசினியில் ஆசைக்கோர் அளவுமில்லை
பூணாரம் பூண்டென்ன காயத்திற்கு புகழான தேகமது நிலைநில்லாது  
வீணான வுலகுதனிலாசைகொண்டு விருப்பமுடன் கெட்டவர்கள் கோடாகோடி
தோணாத கருவெல்லாம் தோன்றச்செய்து தொல்லுலகில் இறந்தவர்கள் கோடியாமே

விளக்கவுரை :

[ads-post]

3778. கோடியாம் யுகாந்தவரை காலமப்பா கொற்றவனே யிருந்தாலும் ஒன்றுமில்லை
நாடியே பராபரத்தை நண்ணலொப்பாம் நலமுடனே பாரினிலே இருந்துகொண்டு
தேடியே நாள்வருகுகுங் காலமட்டும் தேசமதில் பவக்கடலை நீக்கியேதான்
ஓடியே பலவழியிற் சென்றுநீதான் வுத்தமனே புனிதனாயிருந்துகொள்ளே  

விளக்கவுரை :


3779. கொள்ளவே நன்னிலையி லிருந்துகொண்டு கொடும்பாசந் தனையகற்றி
குவலயத்தில் விள்ளவே பாசமென்ற கயத்தைநீக்கி வேதாந்தநுட்பத்தின் செயலுங்கண்டு
மெள்ளவே கும்பகத்தி லிருந்துகொண்டு மேலான சிவயோகந் தன்னிற்சென்று 
வுள்ளபடி யாத்தும் கந்தனாகி வுலகுதனில் சிலகால மிருந்திடாயே

விளக்கவுரை :


3780. இருந்தாலும் தேகமது நிலைநில்லாது எலிலான தேகமது மண்ணாய்ப்போகும் 
குருந்தவே காயாதி கொண்டிட்டாலும் கொப்பெனவே மண்ணோடே மண்ணாய்ப்போகும்
பொருந்தவே நானிருந்தேன் கோடிகாலம் பொங்கமுடன் காட்சிகளு மனேகங்கண்டேன்
வருந்தியே பராபரத்தை மனதிலுண்ணி வாகுடனே காண்பதுவே மோட்சந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar