போகர் சப்தகாண்டம் 3811 - 3815 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3811. பாரேதான் சமாதியிடஞ் சென்றாரப்பா பான்மையுடன் குழிதனிலே இறங்கிநின்று
நேரேதான் கும்பகத்திலிருந்துகொண்டு நேர்மையுடன் கண்ணிரண்டும்மூடியல்லோ
சீரேதான் கரங்குவித்து தலைநிமிர்ந்து சிறப்பான நாதாந்த சித்துதாமும்
கூரவே கற்பாறைதனையெடுத்து குறிப்புடனே சமாதிதனை மூடிட்டாரே

விளக்கவுரை :


3812. மூடிட்ட சமாதிதனி லதிசயங்கள் மூதுலகில் கேட்பதற்கு வளமைசொல்வார்
நாடிட்ட நான்வருகும் நாளைதன்னில் நலமான வதிசயங்கள் மிகநடக்கும்
பாடிட்ட பார்லோகம் இருண்டுபோகும் பகலிரவு பகலாகத் தோற்றும்பாரு
கூடிட்ட மிருகமெல்லாம் ஞானம்பேசும் குறிப்பான பட்சிகள்தான் பேசும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

3813. பேசுகையில் கமலமுனி வருவாரென்று பேரான பட்சிகளும் மிகவேகூறும்
வீசுபுகழ் தேவரெல்லாம் புஷ்பமாரி மாதினியில் பொழிவதுபோல் தோன்றும்பாரு
மாசுடைய ஞானமது ஜோதிவீசும் மகத்தான நட்சத்திரம் அதிரும்பாரு 
ஏசுடைய சீஷவர்க்க மானபேர்கள் எழிலான சமாதிமுன்னே நிற்பார் பாரே  

விளக்கவுரை :


3814. பாரேதான் சீஷவர்க்கம் நிற்கும்போது பாங்கான குருடனவன் கண்திறப்பான்
நேரேதான் மனக்கண்ணு யவனுக்குண்டாய் நீணிலத்தில் நடப்பதெல்லாம் முன்னேசொல்வான்
சீரேதான் சப்பானிவூமைதானும் சிறப்பான ரூபமதை மாற்றிக்கொள்வார்
வேரேதான் சப்பானிவூமையாவான் வீரான வூமையவன் சப்பானியாமே 

விளக்கவுரை :


3815. ஆமேதான் இன்னம்வெகுவதிசயங்கள் தானடக்கும் அறிந்துபாரு
நாமேதான் சொன்னபடி பிரளயங்காணும் நலமான ராசாதிராசரெல்லாம்
போமேதான் பிரளயத்தில் மாண்டுபோவார் பொங்கமுடன் வாரிதியும் வற்றிப்போகும்
தாமேதா னசுராக்கள் கூட்டந்தானும் தாரணியில் சமாதியிடங் காண்பார்பாரே 

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3806 - 3810 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3806. அடங்கியே சமாதிதனில் ஒடுக்கமாகி அவனிதனில் ஆசைதனை விட்டொழித்து
தடங்கண்டு சீனபதிசமாதிபூண்டு தாரிணியில் இருக்குமந்த காலந்தன்னில்
உடங்கொண்டு எந்தனையம் சமாதிக்கேக வுத்தமனார் தாமுரைத்தார் எந்தனுக்கு
படமுடனே யவர்பக்கல் யானுஞ்சென்று பாரினிலே வாசையெல்லாம் மறந்திட்டேனே

விளக்கவுரை :


3807. மறந்திட்டேன் லோகாசைதனை வெறுத்து மார்க்கமுடன் அவர்பக்கல் சமாதிபூண்டேன்
திறந்திட்டார் ஞானோபதெசமெல்லாம் தீர்க்கமுடன் யான்கேட்டு சமாதிகொண்டேன்
குறந்திட்ட தேகமது நிலைநில்லாது கொப்பெனவே சீஷவர்க்கா நீயுமப்பா
பறந்திட்ட பூமிதனை விட்டொழித்து பாங்குடனே சமாதியிடஞ் சேருவீரே

விளக்கவுரை :

[ads-post]

3808. சேரவென்று சொல்லுகையில் புஜண்டர்தாமும் சிறப்புடனே கமலமுனி கூறலுற்றார்
தீரமுடன் வுலகுதனில் பதினாறாண்டு திறமுடனே யானிருந்து வருவேனென்று
கூறவே கமலமுனி சித்துதாமும் கொப்பெனவே தானுரைக்க சீஷரெல்லாம்
பாரமுடன் சித்தொளிவில் பக்கம்நின்று பாங்குடனே வெகுகாலம் பணிசெய்தாரே

விளக்கவுரை :


3809. செய்தாரே கமலமுனி ரிஷியாருக்கு சிறப்புடனே பணிவிடைகள் மிகவுஞ்செய்து
மெய்யான சீஷவர்க்கங் கூடியிருந்து மேதினியில் சித்தொளிக்கு பணிகள்செய்து
பையவே பதினாறு வாண்டுமட்டும் பாருலகில் கூடிருந்தார் சீஷர்தாமும் 
மெய்யாக தேகமது வருந்தியேதான் மேதினியில் வெகுகாலம் கார்த்தார்தாமே

விளக்கவுரை :


3810. கார்த்தாரே சீஷவர்க்கம் அனந்தம்பேரும் காசினியில் சித்தொளிவு நாதருக்கு
பூர்த்தியாய் பதினாறு வாண்டுமாச்சு பொங்கமுடன் சீஷர்களை தாமழைத்து
நேர்த்தியுடன் சமாதிக்குச் செல்வதற்கு நேர்மையுடன் காலமது நெருங்கிப்போச்சு
சாத்திரத்தி லுள்ளபடி தப்பாவண்ணம் தகமையுடன் போகுகின்றேன் வண்மைபாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3801 - 3805 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3801. சேடனாம் ஆதியென்ற சேடர்தானும் திடுக்கிட்டு மெய்மறந்து மனந்தளர்ந்து
கூடலுடன் கமலமுனி குவலயத்தில் கொப்பெனவே வருவதற்கு நாளுமாச்சு
தேடவே சீஷாதி சீஷரெல்லாம் திடுக்கிட்டு மெய்மறந்து சமாதிபக்கல்
நாடவே சமாதியது முன்னே நிற்க நலமான பாறையது வெடிக்கலாச்சே

விளக்கவுரை :


3802. வெடித்தபின்பு கமலமுனி சித்துதாமும் விருப்பமுடன் புஜண்டரைத்தான் பனதிலெண்ணி
அடிப்படையி லிருந்துமல்லோ சித்துதாமும் அவனியிலே பாறையது வெடித்தபின்பு
நடிப்புடனே ஜெகஜோதி மின்னல்போல நாதாந்த சித்தொளியும் வெளியில்வந்து
துடிப்புடனே சீஷவர்க்கந் தன்னைக்கண்டு தீர்க்கமுடன் தாமுரைத்தார் அதீதமாமே

விளக்கவுரை :

[ads-post]

3803. அதிகமாங் கமலமுனி சித்துதாமும் வன்பாக சீஷவர்க்கந் தன்னைநோக்கி
பதீதமுள்ள வதிசயங்கள் சொன்னதெல்லாம் பாருலகில் நடந்ததுண்டோ சீஷமாரே
கதீதமுடன் மெய்யாச்சு எந்நாதர் காசினியில் யாவற்றும் கண்டோம்நாங்கள்
பதீதமுடன் குருசொன்ன வாக்குபோல பூவுலகில் நடந்தேறிப் போச்சென்றாரே

விளக்கவுரை :


3804. போச்சென்று சொல்லுகையில் புகழான புஜண்டரைத்தான் நினைத்துமல்லோ
மாச்சலுடன் சிலகாலம் பூமிதன்னில் மகாகற்பமுண்டுமல்லோ வாசிபூண்டு
ஏச்சலில்லா வையகத்தில் சித்துதாமும் எழிலாக சிலகால மிருந்தாரங்கே
பாச்சலுடன் மறுபடியும் சமாதிக்கேக பாங்குடனே புஜண்டரைத்தான் நினைத்தார்தானே

விளக்கவுரை :


3805. தானான கமலமுனி நினைத்தபோது தகமையுள்ள புஜண்டரிஷி தன்னைக்கேட்டு
பானான கமலமுனி நாதருக்கு பாங்குடனே யசரீரி வாக்குதந்தார்
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனே துவாபரயுகத்திலப்பா
தேனான சீனபதி சமாதிதன்னில் தெரிசினைகள் தான்கொடுத்து அடங்கினாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3796 - 3800 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3796. பயந்திட்டு நடுநடுங்கி நிற்கும்போது பாருலகில் சப்தமது யின்னுமாச்சு
நயந்திடவே குழிதனிலே பாறைதன்னை நயமுடனே மூடவென்று வாக்குண்டாச்சு
தயவுடனே சீஷரெல்லாம் மௌனங்கொண்டு தாரிணியிலினி சும்மாயிருக்கலாகா
வியந்துமே கற்பாறை தனையெடுத்து விருப்பமுடன் சமாதியது மூடிட்டாரே

விளக்கவுரை :


3797. மூடியே நிற்குமந்ர காலந்தன்னில் முசியாமல் கமலமுனி சித்துதாமும்
நாடியே சீஷவர்க்கம் யாவுங்கேட்க நளினமுடன் அசரீரி வாக்குறைப்பார்
தேடியே சமாதிதனி லிருபதாண்டு தேற்றமுடன் யானிருந்து வருகும்போது
வாடியதோர் பயிரெல்லாஞ் செழித்திருக்கும் வளமையுடன் பட்சிமுதல் பேசும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

3798. பேசுமே மிருகமெல்லாஞ் ஞானங்கூறும் பேரான மலைதனிலே சோதிகாணும்
ஏசுவின்றன் சீஷரெல்லாம் எதிர்நிற்பார்கள் எழிலான குருடரெல்லாங் கண்திறப்பார்
மாசில்லா நிலவதுவும் சூரியன்போல் மானிலத்தில் ஊமையவன் பேசுவான்பார்
தேசிபுகழ சப்பானி நடப்பான்பாரு தேசத்தில் மகிமையது மிகவுண்டாமே

விளக்கவுரை :


3799. உண்டான வதிசயங்க ளின்னங்கேளு வுத்தமனே தானடக்கும் மகிமைகோடி
கண்டாலும் லோகமது இருளடைந்து கதிரோனுங் கண்மறந்து நிற்பான்பாரு  
அண்டமுட நட்சத்திரங்கள் அதிரல்காணும் அவனியெலாம் கிடுகிடுத்து யிடியுமுண்டாம்
கொண்டல்வண்ண மேகமது கர்ச்சிக்கும்பார் குவலயத்தில் தேவர்முனி காணலாமே

விளக்கவுரை :


3800. காணலாம் தேவாதிதேவர்தானும் காசினியில் கண்ணுக்குத் தோற்றுவார்பார்
வேணபடி ராட்சத பூதங்களெல்லாம் வேடிக்கையாகவல்லோ கீதம்பாடும் 
தோணவே பலபலவாம் தெய்வம்யாவும் தொல்லுலகில் கண்ணுக்குத் தோற்றலாகும்
வேணபடி வதிசயங்கள் மிகவாய்க்காணும் விண்ணுலகு தத்தளிக்குஞ் சேடனாமே

விளக்கவுரை :


Powered by Blogger.