3796. பயந்திட்டு நடுநடுங்கி
நிற்கும்போது பாருலகில் சப்தமது யின்னுமாச்சு
நயந்திடவே குழிதனிலே
பாறைதன்னை நயமுடனே மூடவென்று வாக்குண்டாச்சு
தயவுடனே சீஷரெல்லாம்
மௌனங்கொண்டு தாரிணியிலினி சும்மாயிருக்கலாகா
வியந்துமே கற்பாறை
தனையெடுத்து விருப்பமுடன் சமாதியது மூடிட்டாரே
விளக்கவுரை :
3797. மூடியே நிற்குமந்ர காலந்தன்னில் முசியாமல் கமலமுனி சித்துதாமும்
நாடியே சீஷவர்க்கம்
யாவுங்கேட்க நளினமுடன் அசரீரி வாக்குறைப்பார்
தேடியே சமாதிதனி லிருபதாண்டு
தேற்றமுடன் யானிருந்து வருகும்போது
வாடியதோர் பயிரெல்லாஞ்
செழித்திருக்கும் வளமையுடன் பட்சிமுதல் பேசும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
3798. பேசுமே மிருகமெல்லாஞ்
ஞானங்கூறும் பேரான மலைதனிலே சோதிகாணும்
ஏசுவின்றன் சீஷரெல்லாம்
எதிர்நிற்பார்கள் எழிலான குருடரெல்லாங் கண்திறப்பார்
மாசில்லா நிலவதுவும் சூரியன்போல்
மானிலத்தில் ஊமையவன் பேசுவான்பார்
தேசிபுகழ சப்பானி
நடப்பான்பாரு தேசத்தில் மகிமையது மிகவுண்டாமே
விளக்கவுரை :
3799. உண்டான வதிசயங்க ளின்னங்கேளு
வுத்தமனே தானடக்கும் மகிமைகோடி
கண்டாலும் லோகமது இருளடைந்து
கதிரோனுங் கண்மறந்து நிற்பான்பாரு
அண்டமுட நட்சத்திரங்கள்
அதிரல்காணும் அவனியெலாம் கிடுகிடுத்து யிடியுமுண்டாம்
கொண்டல்வண்ண மேகமது
கர்ச்சிக்கும்பார் குவலயத்தில் தேவர்முனி காணலாமே
விளக்கவுரை :
3800. காணலாம் தேவாதிதேவர்தானும்
காசினியில் கண்ணுக்குத் தோற்றுவார்பார்
வேணபடி ராட்சத
பூதங்களெல்லாம் வேடிக்கையாகவல்லோ கீதம்பாடும்
தோணவே பலபலவாம்
தெய்வம்யாவும் தொல்லுலகில் கண்ணுக்குத் தோற்றலாகும்
வேணபடி வதிசயங்கள்
மிகவாய்க்காணும் விண்ணுலகு தத்தளிக்குஞ் சேடனாமே
விளக்கவுரை :