3801. சேடனாம் ஆதியென்ற
சேடர்தானும் திடுக்கிட்டு மெய்மறந்து மனந்தளர்ந்து
கூடலுடன் கமலமுனி
குவலயத்தில் கொப்பெனவே வருவதற்கு நாளுமாச்சு
தேடவே சீஷாதி சீஷரெல்லாம்
திடுக்கிட்டு மெய்மறந்து சமாதிபக்கல்
நாடவே சமாதியது முன்னே நிற்க
நலமான பாறையது வெடிக்கலாச்சே
விளக்கவுரை :
3802. வெடித்தபின்பு கமலமுனி
சித்துதாமும் விருப்பமுடன் புஜண்டரைத்தான் பனதிலெண்ணி
அடிப்படையி லிருந்துமல்லோ
சித்துதாமும் அவனியிலே பாறையது வெடித்தபின்பு
நடிப்புடனே ஜெகஜோதி
மின்னல்போல நாதாந்த சித்தொளியும் வெளியில்வந்து
துடிப்புடனே சீஷவர்க்கந் தன்னைக்கண்டு
தீர்க்கமுடன் தாமுரைத்தார் அதீதமாமே
விளக்கவுரை :
[ads-post]
3803. அதிகமாங் கமலமுனி
சித்துதாமும் வன்பாக சீஷவர்க்கந் தன்னைநோக்கி
பதீதமுள்ள வதிசயங்கள்
சொன்னதெல்லாம் பாருலகில் நடந்ததுண்டோ சீஷமாரே
கதீதமுடன் மெய்யாச்சு
எந்நாதர் காசினியில் யாவற்றும் கண்டோம்நாங்கள்
பதீதமுடன் குருசொன்ன
வாக்குபோல பூவுலகில் நடந்தேறிப் போச்சென்றாரே
விளக்கவுரை :
3804. போச்சென்று சொல்லுகையில்
புகழான புஜண்டரைத்தான் நினைத்துமல்லோ
மாச்சலுடன் சிலகாலம்
பூமிதன்னில் மகாகற்பமுண்டுமல்லோ வாசிபூண்டு
ஏச்சலில்லா வையகத்தில்
சித்துதாமும் எழிலாக சிலகால மிருந்தாரங்கே
பாச்சலுடன் மறுபடியும்
சமாதிக்கேக பாங்குடனே புஜண்டரைத்தான் நினைத்தார்தானே
விளக்கவுரை :
3805. தானான கமலமுனி நினைத்தபோது
தகமையுள்ள புஜண்டரிஷி தன்னைக்கேட்டு
பானான கமலமுனி நாதருக்கு
பாங்குடனே யசரீரி வாக்குதந்தார்
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனே துவாபரயுகத்திலப்பா
தேனான சீனபதி சமாதிதன்னில்
தெரிசினைகள் தான்கொடுத்து அடங்கினாரே
விளக்கவுரை :