3806. அடங்கியே சமாதிதனில்
ஒடுக்கமாகி அவனிதனில் ஆசைதனை விட்டொழித்து
தடங்கண்டு சீனபதிசமாதிபூண்டு
தாரிணியில் இருக்குமந்த காலந்தன்னில்
உடங்கொண்டு எந்தனையம்
சமாதிக்கேக வுத்தமனார் தாமுரைத்தார் எந்தனுக்கு
படமுடனே யவர்பக்கல்
யானுஞ்சென்று பாரினிலே வாசையெல்லாம் மறந்திட்டேனே
விளக்கவுரை :
3807. மறந்திட்டேன் லோகாசைதனை
வெறுத்து மார்க்கமுடன் அவர்பக்கல் சமாதிபூண்டேன்
திறந்திட்டார்
ஞானோபதெசமெல்லாம் தீர்க்கமுடன் யான்கேட்டு சமாதிகொண்டேன்
குறந்திட்ட தேகமது
நிலைநில்லாது கொப்பெனவே சீஷவர்க்கா நீயுமப்பா
பறந்திட்ட பூமிதனை
விட்டொழித்து பாங்குடனே சமாதியிடஞ் சேருவீரே
விளக்கவுரை :
[ads-post]
3808. சேரவென்று சொல்லுகையில்
புஜண்டர்தாமும் சிறப்புடனே கமலமுனி கூறலுற்றார்
தீரமுடன் வுலகுதனில்
பதினாறாண்டு திறமுடனே யானிருந்து வருவேனென்று
கூறவே கமலமுனி சித்துதாமும்
கொப்பெனவே தானுரைக்க சீஷரெல்லாம்
பாரமுடன் சித்தொளிவில்
பக்கம்நின்று பாங்குடனே வெகுகாலம் பணிசெய்தாரே
விளக்கவுரை :
3809. செய்தாரே கமலமுனி ரிஷியாருக்கு சிறப்புடனே பணிவிடைகள் மிகவுஞ்செய்து
மெய்யான சீஷவர்க்கங்
கூடியிருந்து மேதினியில் சித்தொளிக்கு பணிகள்செய்து
பையவே பதினாறு வாண்டுமட்டும்
பாருலகில் கூடிருந்தார் சீஷர்தாமும்
மெய்யாக தேகமது
வருந்தியேதான் மேதினியில் வெகுகாலம் கார்த்தார்தாமே
விளக்கவுரை :
3810. கார்த்தாரே சீஷவர்க்கம்
அனந்தம்பேரும் காசினியில் சித்தொளிவு நாதருக்கு
பூர்த்தியாய் பதினாறு
வாண்டுமாச்சு பொங்கமுடன் சீஷர்களை தாமழைத்து
நேர்த்தியுடன் சமாதிக்குச்
செல்வதற்கு நேர்மையுடன் காலமது நெருங்கிப்போச்சு
சாத்திரத்தி லுள்ளபடி
தப்பாவண்ணம் தகமையுடன் போகுகின்றேன் வண்மைபாரே
விளக்கவுரை :