போகர் சப்தகாண்டம் 3921 - 3925 of 7000 பாடல்கள்
3921. என்பாரே பொய்சூது கபடுதந்திர
மெழிலான வுன்குருவை தூறுபேசி
வன்பான வார்த்தைகளு
மிகவுரைத்து வளமான சமாதிக்கு யிடங்கள் தேடி
இன்பமுடன் மெய்போலே
பொய்யுங்கூறி எழிலாக வுந்தனுக்கு புகழ்ச்சிசொல்வார்
தென்பாக மகிழாதே சீஷபாலா
நேர்மையுடன் எப்போதும் புகழ்வாய்நில்லே
விளக்கவுரை :
3922. நிற்கையிலே புலஸ்தியரா
முனிவர்தாமும் நீடான சமாதிதனிலிருந்துகொண்டு
அற்புதங்கள் மிகவுரைப்பார்
சீஷருக்கு வன்பான மகிமைகளு மெத்தவுண்டு
தற்பரனார் புலஸ்தியரும்
வருகும்போது தாரிணியில் அதிசயங்கள் மிகநடக்கும்
கற்பாறையானதொரு பொதிகைதானும்
கடல்தனிலே யதிரலுடன் யரையும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
3923. அதிருமே நான்வருகுங்
காலந்தன்னில் ஆகாய கோடையிடிபோலேசத்தம்
சதிரான பொதிகைமலைச்
சுழலுண்டாகும் சப்தரிஷி தவமுனிகள் நடுங்குவார்கள்
மதிலோட கோட்டைமுதல்
அலங்கம்யாவும் மாறியே தலைகீழாய்க் கவிழ்ந்துபோகும்
உதிருமே வானத்து
மீன்களெல்லாம் வுத்தமனே வதிரலது காணும்பாரே
விளக்கவுரை :
3924. பாரேதான் சத்தசாகரமும்
பொங்கும் பாரினிலே தேர்வேந்த ராஜரெல்லாம்
நேரேதான் போர்முகத்தில்
நிற்பார்பாரு நேர்மையுடன் திசைமாறி தேவரெல்லாம்
வேரேதா னவரவர்கள்
பதிகள்கெட்டு மேதினியில் அரகநிலையாள்வான்பாரு
கூரேதான் வாக்கதுவும்
பொய்யாதப்பா குணமான தேரைரிஷி சொல்லக்கேளே
விளக்கவுரை :
3925. சொல்லவே தேரமுனி
சித்துகேளும் சுகரான புலஸ்தியரும் வருநாளாச்சு
புல்லவே சமாதியது
திறப்பதற்கு புகழான புலஸ்தியரும் வருநாளாச்சு
வெல்லவே மேதினியில்
சித்துதாமும் வேதாந்த ஞானப்பிரகாசத்தோடு
நல்லதொரு சமாதிதனில்
பாரைதானும் நலமுடனே தான்வெடித்து வருகலாச்சே
விளக்கவுரை :