3906. உண்மையாம் யாக்கோபு
முனிவர்தாமும் வுலகத்தில் இருந்ததுவும் போதுமென்று
நண்மையாம் சீஷவர்க்க
மானபேர்க்கு நாதாந்த யாக்கோபு முனிவர்தாமும்
வண்மையாம் லோகமதை
மறந்தேனப்பா வாகுடனே சமாதிக்குப் பின்னுஞ்செல்வேன்
எண்ணமுடன் சீஷருக்கு
வாக்குரைத்து எழிலாக சமாதிக்குப் போவார்தாமே
விளக்கவுரை :
3907. போகவே யாக்கோபு
முனிவர்தாமும் பொங்கமுடன் சமாதிக்குச் செல்வேனென்றும்
வாகடங்கள் விதிமுறைப்போல்
தப்பாவண்ணம் வளமுடனே தாமறிந்த சித்துதாமும்
வேகமுடன் சமாதிதனி
லிறங்கியேதான் வேதாந்த சித்தொளிவு சொரூபந்தன்னை
யோகமுடன் தானிருந்து
முனிவர்தாமும் வுத்தமர்க்கு வசரீரிவுரைத்தார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
3908. பாரேதான் யாக்கோபு
சித்துதாமும் பாருலகில் இதுவரையிலிருந்தகோலம்
நேரேதான் சுகமறிந்த
தேகந்தன்னை நேர்மையுடன் பிரிதிவினில் சேர்ப்பதற்கு
வீரேதான் விண்ணுலக வாசையற்று
வேதாந்த யாக்கோபு சித்தருக்கு
சீரேதான் யுகமுடிவு
காலமாச்சு சிறப்பான தேகமது மண்ணாய்ப்போமே
விளக்கவுரை :
3909. மண்ணாகிப் போனாலும்
காயகற்பம் மகத்தான தேகமிது வழியும்பாரு
திண்ணமுடன் நபிதானும்
முடிவுநாளில் தீர்க்கமுடன் கேள்வியது கேட்கும்போது
எண்ணமதில் யாக்கோபு
முனிவர்தாமும் எழிலாக வந்தும்மைக்காண்பேனென்று
நிண்ணயமாய் வாக்குரைத்தார்
சித்துதாமும் நீடாழியுலகத்தின் மேன்மைதானே
விளக்கவுரை :
3910. நேர்மையா மின்னமொரு மார்க்கங்கேளு நேரான வகஸ்தியனார்க் குகந்தசீஷன்
பார்மனதாய் யுலகுதனில்
பெயர்வகுத்த பண்பான சிவராஜயோகியென்பர்
தீர்மையுள்ள புலஸ்திரா
மென்றசித்து திகழான சமாதிதனை சொல்வோம்பாரு
வார்மையுடன் சீனபதி
மேற்கேயப்பா வளமான தென்பொதிகை சார்புமாச்சே
விளக்கவுரை :