3911. ஆச்சப்பா புலிப்பாணி
பாலாகேளு வன்பான யெனதையர் காலாங்கிதானும்
மூச்சடங்கிச் சீனபதி
யிருந்தபோது மூதுலகில் வளமையெல்லாஞ் சொன்னார்முன்பு
பாச்சலுடன் பொதிகைமலைச்
சார்புதன்னில் பாங்கான கடலோரம் பூமிவட்டம்
கூச்சலுடன் சித்தர்முனி
ரிஷிகளோடு குவலயத்தில் சமாதிக்கு வந்தார்தானே
விளக்கவுரை :
3912. வந்தாரே சீஷனார் தெறையரொடு
வளமாக சீனபதிகடலோரந்தான்
அந்தமுடன் பொதிகைமலை
குண்ணின்பக்கம் வகஸ்தியனார் சீஷனது பாலன்தானும்
சொந்தமுடன் சமாதிதனி
லிறங்கவென்று சுத்தமுள்ள புலஸ்தியருங் கூறலுற்றார்
வந்தவழி போவதுவே
வுண்மையென்று வளமுடனே சமாதியிடந் தேடினாரே
விளக்கவுரை :
[ads-post]
3913. தேடியே சமாதியிட
மருகிற்சென்று திறளான சீஷவர்க்கக் கூட்டத்தோடு
நாடியே சமுசார வாழ்க்கையற்று
நாதாந்தப்பேரொளியைக்கண்டுதேர்ந்து
கூடியே குவலயத்தில்
நேர்மையெல்லாங் கொற்றவனார் தான்வெறுத்து சமாதிக்கேக
நீடியே புலஸ்தியரும் சீஷர்தம்மை
நீட்சியுடன் தாமழைத்துக் கூறுவாரே
விளக்கவுரை :
3914. கூறுவார் வாய்திறந்து
சீஷவர்க்கம் குவலயத்தின் மகிமையெல்லாங் கண்டாராய்ந்தேன்
சீருடனே சிற்றின்ப
வாழ்க்கையற்று சீரான பேரின்ப நிலையைக்காண
நேருடனே வுலகுதனை யான்மறந்து
நேர்மையுடன் காயமதைநிலைநிறுத்தி
பாருள்ளே சமாதிதனி
லிருப்பேனென்று பட்சமுடன் சீஷருக்கு வுரைத்தார்பாரே
விளக்கவுரை :
3915. பாரேதான் தேரையர் மைந்தாகேளு
பாரினிலே சமாதிக்குப் போரேன்யானும்
சீரேதான் இருபத்துவாண்டு
தானும்சிறப்புடனே சமாதிதனிலிருப்பேனென்று
நேரேதான்
சமாதிதனிலிருந்துகொண்டு நேர்மையுடன் அசரீரிவாக்குசொல்வேன்
தீரேதான்
யான்வருகுங்காலமட்டும் தீர்க்கமுடன் சமாதியிட மிருந்திடாயே
விளக்கவுரை :