3916. இருந்துமே சமாதியது
பூசைகொண்டு எழிலாக நான்வருகு நாளுமட்டும்
திருந்தவே என்சீஷா பிராணநாதா
தெருள்கலையில் தேர்ந்ததொரு சித்துபாலா
பொருந்தவே யுபதேசம்
மிகவுங்கேட்டு பொங்கமுடன் சமாதிதனிலிருந்துகொண்டு
வருந்தவே நான்வருகும்
நாளையெண்ணி வளமுடனே நீநினைத்து நிற்பீர்தானே
விளக்கவுரை :
3917. தானான என்சீஷா யின்னங்கேளு
தகமையுள்ள சித்தரமுனி யும்மைக்கண்டு
கோனான வுன்குருவு
யெங்கென்றாக்கால் கொற்றவனே சமாதியிடஞ் சென்றாரென்று
தேனான புலஸ்தியரும்
வருநாள்மட்டும் தேர்வேந்த சித்தருக்குப் பணிதிபூண்டு
மானான மனோன்மணியைத்
தொழுதுபோற்றி மலையோரஞ் சமாதியிட மிருக்கின்றேனே
விளக்கவுரை :
[ads-post]
3918. இருக்கிறேன் என்றுரைத்து யிதவுசொன்னால் எழிலான சித்தர்முனி பகடுரைப்பார்
வெருக்கவே புலஸ்தியரு
மடிந்தாரென்று விண்ணுலகில் மறுபடியுந் திரும்பாரென்று
பெருக்கமுடன் வகடுமிகக்
கூறுவார்கள் பேரான கர்மியென்ற சித்துதாமும்
உருக்கமுடன்
நீயுரைக்கும்போதேயப்பா வுத்தமர்கள் பழிகூறு சொல்லுவாரே
விளக்கவுரை :
3919. சொல்லுவார் அவர்களிடம்
வாய்பேசாதே சுந்தரனே சிவராஜ யோகபாலா
வெல்லுவாருந்தனிஞ் சூதுபேசி
வேகமுடன் கொள்வதற்கு மனமுங்கொள்வார்
புல்லுவார் தூரான
வார்த்தைகூறி புகழான வுச்சிதங்கள் மிகவுஞ்சொல்லி
அல்லலுடன் உந்தனிடஞ்
சூதுபேசி வப்பனே வதைசெய்ய எண்ணுவாரே
விளக்கவுரை :
3920. எண்ணுவார் தேரையர்
எந்தன்சீஷா எழிலான கண்மணியே யின்னஞ்சொல்வேன்
திண்ணமுடன் ஞானமதை
கேட்பார்போல தீர்க்கமுடன் ஞானோப தேசந்தன்னை
வண்ணமுடன் கரைகண்ட
சித்துபோலே வாரான எழுத்துக்கள் மாராட்டஞ்சொல்லி
நண்ணமுடன் ஜெகஜோதி
சொரூபங்காண நானுரைப்பேன் விதியதனை மகிழென்பாரே
விளக்கவுரை :