போகர் சப்தகாண்டம் 3901 - 3905 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3901 - 3905 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3901. கோடியாஞ் சிலபேர்கள் ஞானவான்கள் குவலயத்தில் வெகுநாளாய்ப் பேருண்டாக
நாடியே சமாதியிடங் கிட்டிருந்து நாதாந்தப் பேரொளியின் சமாதிமுன்னே   
கூடியே வெகுகால மிருந்தாரங்கே கொற்றவர்கள் சமாதியிடந் தன்னிலேதான்
வாடியே கார்த்திருந்த சித்தர்தாமும் வண்மையுடன் வுபதேசம் பெற்றார்தானே

விளக்கவுரை :


3902. தானான யாக்கோபு முனிவர்தாமும் தகமையுட னுபதேசம் பின்னுஞ்சொல்வார்
கோனான குருதனையே மனதிலெண்ணி கொப்பெனவே தாமுறைப்பார் பின்னுஞ்சொல்வெவொம்
வேனான ரிஷிமுனிவர் சித்தருக்கு மேதினியில் உபதேசம் செய்துமேதான்
தேனான யாக்கோபு முனிவர்தாமும் தீர்க்கமுடன் முடிவுதன்னைக்கூறுவாரே

விளக்கவுரை :

[ads-post]

3903. கூறுவார் யாக்கோபு சித்துதாமும் குவலயத்தில் தேகமது இருந்துமென்ன
மாறுபடு பேதனங்கள் செய்துமென்ன மகத்தான வசியமுதல் கற்றுமென்ன
நீறுபுகழ் மோகனங்கள் அறிந்துமென்ன நீணிலத்தில் வாதமது செய்துமென்ன
தூறுடைய வஷ்டமா சித்துவித்தை துறைமுதலுங்கற்றுமென்ன வொன்றுங்காணே

விளக்கவுரை :


3904. காணவே பிரபஞ்ச வாழ்க்கையற்று காசினியிலிருந்தாலும் வொன்றுமில்லை
பூணவே நவகோடி திரவியங்கள் பூவுலகில் தேடியென்ன லாபமில்லை
நாணமுடன் வுலகுதனில் வாழ்ந்துமென்ன நாதாந்தப் பேரொளியைக் கண்டுமென்ன
வேணபடி யுலகமெலாம் ஒருகுடைக்கீழ் வுத்தமனே யாண்டாலும் ஒன்றுங்காணே

விளக்கவுரை :


3905. ஒன்றான தேகமது பொய்யேவாழ்வு ஓகோகோ நாதாக்கள் யாரிருந்தார்
குன்றான கல்லதுபோல் தேகந்தானும் குவலயத்தி லிருந்தாலும் ஒன்றுமில்லை
தன்றான தேகமது இரும்பானாலும் தாரிணியில் நில்லாது மெய்யேயாகும்
சென்றாலுங் காயமது போவதுண்மை சடலமழிந்து போகுவதும் வண்மைதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar