போகர் சப்தகாண்டம் 3896 - 3900 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3896 - 3900 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3896. காணவே யின்னம்வெகு வதிசயங்கள் கலியுகத்து மாண்பருக்கு மகிமைசொல்வேன்
பூணவே யான்வருகுங்காலந்தன்னில் புகழுடனே வந்தரங்கம் வெளிச்சங்காணும்
நாணவே நாதாக்கள் முனிவர்தாமும் நடுக்கமுடன் நபிதமக்கு வஞ்சியல்லோ
தோணவே யர்ச்சனைகள் மிகவுஞ்செய்து தோற்றமுடன் சமாதிக்கு முன்நிற்பாரே

விளக்கவுரை :


3897. முன்னின்று யாக்கோபு வருவதெப்போ மூதுலகில் சாபமது தவிர்ப்பதெப்போ
மன்னவர்கள் மாண்பரிடம் வினையைநீக்கி மானிலத்தில் வரங்கொடுக்கும் காலமெப்போ
சொன்னதொரு வாக்குமொழி பிசகாவண்ணம் தொல்லுலகில் மகிமையதை காண்பதெப்போ
நன்மையாய் நாதாந்த முனிவர்தாமும் நயமுடனே யாக்கோபை துதித்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

3898. துதித்ததொரு சித்தரெல்லாம் மெச்சவேதான் துரைராஜ சந்திரரும் யாக்கோபாரும்
மதித்திடவே சமாதிதனிலிருந்துமேதான் மார்க்கமுடன் ஜெகஜோதி பிரகாசம்போல
கதிப்புடனே சமாதிவிட்டு யேகியேதான்கனமான யாக்கோபு முனிவர்தாமும்
விதிப்படியே வாக்குரைகள் பொய்யாவண்ணம் விருப்பமுடன் நிறைவேற்றி வந்திட்டாரே

விளக்கவுரை :


3899. வந்ததொரு யாக்கோபு முனிவர்தாமும் வாகுடனே பகடுறைத்த மாந்தரெல்லாம்
சிந்தனையாய் மனங்கலங்கி மெய்நடுங்கி சிற்பரனார் யாக்கோபு வந்தாரென்று
தந்தமக்குள் பயந்துமல்லோ ஒடுக்கமாகி தாரிணியில் மயங்கிநிற்கும்போது
நிந்தனையாய் வந்ததொரு சாபத்தாலே நீணிலத்தில் எல்லவரும் குருடானாரே

விளக்கவுரை :


3900. குருடாய்ப் போனவர்கள் சிலதுமாண்பர் குவலயத்தி லழிந்தவர்கள் சிலதுமாண்பர்
திருடரா யொளித்தவர்கள் சிலதுமாண்பர் தீர்க்கமுடன் வாய்க்குளறி சிலதுமாண்பர்
இருளதனில் கண்ணொளிவு மயங்கியேதான் யிராக்காலம் தெரியாமப்போனபேர்கள்
வருடமாம் வெகுகாலம் இக்கோலந்தான் வதைபட்டு வழிந்தாரே கோடிபேரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar