போகர் சப்தகாண்டம் 3961 - 3965 of 7000 பாடல்கள்
3961. வந்தாரே பகவானும் பூமிமீதில்
வன்மையுடன் சீஷவர்க்கந்தன்னைக்கண்டு
சிந்தனையாய் சீஷவர்க்கம்
தன்னைநோக்கி சிறப்புடனே வுபதேசம் மிகவாய்ச்செய்து
தந்தமக்கு வரமதுவும்
பகவான்தானும் தன்மையுடன் தான்கொடுத்து வாசீர்மித்து
வந்தனையாய் வுலகினுட
மகிமைதன்னை வாகுடனே தான்கேட்டார் பகவான்தானே
விளக்கவுரை :
3962. தானேதான் கேட்கையிலே
சீஷவர்க்கம் தகமையுடன் வுத்தாரம் கூறுகின்றார்
தேனான தெள்ளமுர்தம்
எந்தன்கோவே தேற்றமுடன் நாமுரைப்போம் பகவானுக்கு
பானான குருடர் சப்பானியாரும்
பாங்குடனே கண்திறந்து நடக்கலாச்சு
வேனான வுலகுதனில்
தங்கள்வார்த்தை வேணபடி யதிசயங்கள் கண்டோம்தாமே
விளக்கவுரை :
[ads-post]
3963. கண்டோமே என்றதுமே
சீஷர்தாமும் கருத்துடனே தாமுரைப்பார் பகவான்தானும்
அண்முலகளந்ததொரு ஆதிபாலன்
அல்லவருங் கேட்டிருகந்கத் தாமுரைப்பார்
விண்ணுலகிலிருந்துமென்ன
சீஷன்மாரே வினோதவகைமகிமையெல்லாங் கண்டுமென்ன
சண்டமாருதமான காயகற்பம்
சட்டமுடன் கொண்டென்ன ஒன்றுங்காணே
விளக்கவுரை :
3964. காணவே காயாதிக்கொண்டுமென்ன
கலியுகத்தில் கோடிவரை யிருந்துமென்ன
வேணபடி வேதநூல் செய்துமென்ன
விட்டகுறை யிருந்தென்ன போயுமென்ன
பூணவே சமுசார வாழ்க்கையற்று
பூவுலகி லிருந்தென்ன மடிந்துமென்ன
தோணவே சின்மயத்தை
கடந்துமென்ன தொல்லையெல்லா மற்றாலும் ஒன்றுங்காணே
விளக்கவுரை :
3965. ஒன்றான தேகமது பொய்யேவாழ்வு
வுத்தமனே லோகத்திலொன்றுமில்லை
பன்றான பொய்களவு யாவுமுண்டு
பாரினில் விசுவாசம் அருளுமில்லை
குன்றான விசுவாச
மருள்கொண்டாலும் குவலயத்தி லொன்றுமில்லை பாழுபாழே
தன்றான வையகத்து
வாழ்க்கையெல்லாம் தாரிணியில் இப்படியே மேவலாச்சே
விளக்கவுரை :