3951. ஏகவே பொதிகைமலை கடலோரந்தான்
எழிலான தீவுதனில் சமாதிதன்னை
பாகமுடன் படுகுழிகள்
வெட்டினார்பார் பாங்குடனே நீரோடும் பாங்குமட்டும்
ஏகமுடன் சமாதியது
கட்டினார்கள் எழிலான தன்வந்திரி பகவானுக்கு
சாகமுடன் குழிதனிலே
இறங்கினாராம் சட்டமுடன் திரைகொண்டுமூடினாரே
விளக்கவுரை :
3952. மூடினார் சீஷவர்க்கம்
ஆயிரம்பேர் மூதுவரைக்காணாமல் மறைந்தார்சித்து
நாடியே சீஷரெல்லாம்
சமாதிபக்கல் நலமுடனே கார்த்திருந்தார் கும்பலாக
வாடியே சீஷரெல்லா
மிருக்கும்போது மகத்தான தன்வந்திரி பகவான்தானும்
தேடியே சீஷருக்கு
சொல்வார்பாரு தெளிவுடனே கேட்டிருங்கள் மாணாக்காளே
விளக்கவுரை :
[ads-post]
3953. கேட்கவே தன்வந்திரி
பகவான்தானும் கிருபையுடன் சீஷருக்குக்கூறினார்பார்
நீட்கமுடன் வறுபது
வாண்டுமட்டும் நிலையான சமாதிதனிலிருப்பேனென்றும்
வேட்கமுடன்
அசரீரிவாக்குதானும் வீரமுடன் கூறினார் பகவான்தானும்
தீட்கமுடன் சீஷவர்க்கம்
கேட்டிருந்தார் திறைகோடி வறைகோடி காலமாச்சே
விளக்கவுரை :
3954. ஆச்சப்பா
யான்வருகுங்காலந்தன்னில் அவனிதனி லதிசயங்கள் மிகநடக்கும்
மூச்சடங்கிப் போனதொரு
தேகந்தானும் மூதுலகில் வருவதற்கு முன்னதாக
ஏச்சலுடன் அதிசயங்கள்
மிகநடக்கும் எழிலான பொதிகைமலை சார்புதன்னில்
கூச்சலுடன் தேவாதி
ரிஷிகளெல்லாம் கொற்றவனார் வருங்காலந் தானுமாச்சே
விளக்கவுரை :
3955. தானுமே ரிஷிக்கூட்ட
முனிவர்தாமும் தன்வந்திரி பகவானும் வருநாளாச்சு
வானுலகு தேவரெல்லாம்
வருந்தியல்லோ வருணமழைப் புஷ்பமது பொழிந்தாரங்கே
தானுலகு ராஜாதிராஜரெல்லாம்
காணிக்கைகொண்டுவந்து பகவானுக்கு
தேனமுது கனிவுடனே புட்பதீபம்
தேர்வேந்த பகவானுக்கொடு சென்றாரே
விளக்கவுரை :