3956. சென்றாரே சமாதியிட
பக்கந்தன்னில் சிறப்புடனே சித்தர்முனி நிற்கும்போது
குன்றான பொதிகைமலை கும்பமுனி
குவலயத்தில் அதிசயத்தை பார்க்கவெண்ணி
தென்திசையில் மலையைவிட்டு
பகவான்தன்னை தேற்றமுடன் காண்பதற்கு முனிவர்தாமும்
வென்றிடவே சமாதியிட
பக்கந்தன்னில் வேதாந்த சித்தொளிவும் வந்திட்டாரே
விளக்கவுரை :
3957. வந்ததொரு சேதிதன்னை
நந்திகேட்டு வண்மையுடன் தன்வந்திரி பகவான்தன்னை
சிந்தையிலே நற்சீடன்
என்றறிந்து சீரான பகவானைக் காணவென்று
பந்தமுடன் நற்சீடன்
என்றுசொல்லி பாரினிலே கண்டுநெடுநேரமாச்சு
அந்தமுடன் சமாதிவிட்டு
வருதலுக்கு வன்மையான நந்தீசர் வந்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
3958. இட்டாரே நந்தீசர் முனிவர்தாமும் எழிலான சமாதியிட பக்கந்தன்னில்
விட்டகுறை இருந்ததினால்
பின்னுங்காண விருப்பமுடன் வருவதற்கு வந்தாரல்லோ
பட்டதொரு தன்வந்திரி
பகவான்தனை பட்சமுடன் காணுகைக்கு நந்திதாமும்
கிட்டியே சமாதியிட
வலப்பக்கந்தான் கிருபையுடன் காண்பதற்கு நின்றார்பாரே
விளக்கவுரை :
3959. பாரேதான் அசுவினியாம்
விசுவனியாந்தேவர் பட்சமுடன் தன்வந்திரி பகவான்தன்னை
நேரேதான் சமாதியிடங்
காணவென்று நேர்மையுடன் சென்றாராம் சமாதிபக்கல்
கூரேதான் சித்துவரும்
நாளுமாச்சு குவலயத்தில் சித்தரெல்லாம் கும்பாய்நிற்க
சீரேதான் புவிமீதில்
அதிசயங்கள் சிறப்புடனே தான்நடக்கும் மகிமைதானே
விளக்கவுரை :
3960. தானான வறுபதுவாண்டுதன்னில்
தாக்கான சமாதியின் பக்கல்தன்னில்
மானான குருடர் சப்பானிதானும்
மகத்தான வூமைமுதல்பேசுவான்பார்
தேனான தன்வந்திரி
பகவான்தானும் தேற்றமுடன் சமாதிவிட்டு வெளியேவந்தார்
பானான பகவானும் பாரின்மீதில்
பரமவொளி சொரூபமாய் வந்திட்டாரே
விளக்கவுரை :