போகர் சப்தகாண்டம் 3946 - 3950 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3946 - 3950 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3946. பார்க்கவே எனதையர் காலாங்கிநாதர் பட்சமுடன் எந்தனுக்கு வுரைத்தசேதி
தீர்க்கமுடன் யானுமல்லோ குளிகைகொண்டு தேசாதி தேசமெலாம் தான்திரிந்து
ஏர்க்கமுடன் லோகவதிசயத்தையெல்லாம் எழிலாகத்தான்பார்த்து கண்டாறாய்ந்து
மார்க்கமுடன் பாடிவைத்த சத்தகாண்டம் மகத்தான நடுக்காண்ம் இதுதானாமே

விளக்கவுரை :


3947. நடுவான காண்டமிது ஏழாயிரந்தான் நலமான காவியத்துக்கினைவேருண்டோ
வடுவான தன்வந்திரி பகவான்தானும் மார்க்கமுடன் சமாதிக்கு ஏகவெண்ணி
அடுமையாமானதொரு சீஷவர்க்கம் வன்புடனே தானகைத்தார் வதீதமார்க்கம்
படுகுழியில் சமாதிதனில் செல்லவென்று பண்புடனே தாமுரைத்தார் பகவான்தானே

விளக்கவுரை :

[ads-post]

3948. தானான தன்வந்திரி பகவான்தானும் தன்மையுடன் சீஷருக்குத் தாமுரைப்பார்
தேனான கண்மணியே சீஷவர்க்கம் தெளிவுடனே எள்ளவருங் கேட்டிருங்கள்
பானான பேரின்பமிசையாசைவிட்டேன் பாங்கான சமுசார வாழ்க்கையற்றேன்
மானாம மனோன்மணியை மனதிலெண்ணி வையகத்தினாசையெல்லாம் மறந்திட்டேனே

விளக்கவுரை :


3949. மறந்திட்டேன் காயாதி கற்பங்கொண்டு மானிலத்தில் சிலகாலமிருக்கவென்று
துறந்திட்டேன் சமாதிக்குச் சிலதுகாலம் தொல்லுலகையான்மறந்து மண்ணிற்சென்று
கறந்திட்ட பாலதுபோல் வடிவமாகி காசினியில் மறுபடியும் வருவேனென்று
உறமுடனே ஞானோபதேசந்தன்னை வுண்மையுடன் போதித்தார் சீடர்க்காமே

விளக்கவுரை :


3950. போதித்த நாள்முதலாய் பகவான்தானும் பொங்கமுடன் மேருகிரிதன்னிற்சென்று
ஆதித்தன் காணாத வதீதகாடு அங்ஙனவே சென்றாராம் பகவான்தானும்
சாதித்து மனதுறுதிகொண்டுமல்லோ சட்டமுடன் சீஷவர்க்கங்கூட்டத்தோடு
பாதிமதி சடையணிந்த தம்பிரான்போல் பதிதனக்கு ஏகினார் பகவான்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar