3941. தானான பிரம்மமொடு
வயிந்திரபேதம் தாக்கான வைகிருது யொக்கத்தானும்
பானான யோகமது இருபத்தேழும்
பாகமுடன் பாலித்தார் சீடருக்கு
கோனான தன்வந்திரி
பகவான்தானும் குவலயத்தில் சீடர்மேல் பட்சம்வைத்து
தேனான யோகமென்ற
மார்க்கந்தன்னை தெளிவுடனே தாமுரைத்தார் தன்வந்திரியாமே
விளக்கவுரை :
3942. அமேதான் பலமுடனே பாவமுந்தானும் வப்பனே கெவனமுடன் கைதுளையுமாகும்
வேமேதான் காசியுடன்
வனசிவமுமாகும் வெட்டவெளி பத்திரையாம் சகுனியிடமாகும்
தாமேதான் சதுடரதம்
நாகலமுமாகும் தாக்கான கிமஸ்துவுடன் கரணமாகும்
போமேதான் கரணமது
பதினொன்றாகும் பேர்காண போகத்துக்கு உறுதியாச்சே
விளக்கவுரை :
[ads-post]
3943. ஆச்சப்பா ராசியது
சொல்வேன்பாரு வப்பனே மேடமுடன் ரிஷபமாகும்
மாச்சலுடன் மிதுனமது
கடகந்தானும் மகத்தான சிங்கமது கன்னியாகும்
வீச்சப்பா துலாவுடனே
விருச்சிகந்தான் விரைவான தனுசுடன் மகரமாகும்
பாச்சலுடன் கும்பமது மீனமாகும்
பாங்கான ராசியது பனிரண்டுமாமே
விளக்கவுரை :
3944. ரெண்டுடனே துலாராசி
மெத்தநன்று எழிலுடனே கன்னிசிங்கமிருந்தால்நன்று
பண்டான சாத்திரங்கள்
யாவுமல்லோ பாங்குடனே கண்டறிந்து சித்துயோகன்
கண்டாலும் விடுவார்கள்
சித்துதான் காசினியில் தன்னோடே சேர்த்துக்கொள்வார்
உண்டான பொருளெல்லாம்
அவர்க்கேயோதி வுத்தமனே சீடர்களாய்ச் செய்வார்தானே
விளக்கவுரை :
3945. செய்தாரே தன்வந்திரி
பகவான்தானும் செயலான பாக்கியமும் நூலுந்தந்தார்
உய்யவே சீஷவர்க்கங்கண்டாராய்ந்து
வுத்தமனே தேடினதோர் ஆயிரம்பேர்
கையவே சீஷவர்க்கமாயிரம்பேர்
நலமுடனே விட்டகுறை யுள்ளபேர்கள்
துய்யவே தேர்ந்தெடுத்தோர்
இவர்களாகும் துரைராஜ சுந்தரனே சொல்வேன்பாரே
விளக்கவுரை :