3936. அறியவே அகஸ்தியனார்
செய்தநூலாம் அகண்டமெனும் பெருங்கடலுக்கொப்பதாகும்
முறியாமல் தன்வந்திரி
செய்தநூலை மூன்றுலட்சங் கிரந்தமென வகுக்கலாகும்
சரியொத்த நூல்களுமே
பாடிவைத்தார் சரியாக வகத்தியரும் அருபோற்சொன்னார்
தெரியவே லோகாதிமாண்பருக்கு
தோற்றமுடன் பாடிவைத்தார் நூல்கள்தாமே
விளக்கவுரை :
3937. பாடிவைத்த மூன்றுலட்சங்
கிரந்தந்தன்னை பாரினிலே வெகுகோடி சித்தர்தாமும்
நாடியே மிகப்பார்த்துக்
கண்டாராய்ந்து நலமுடனே பதினெண்பேர் சித்தரெல்லாம்
கூடியே வெகுநூல்கள்
செய்தார்பாரு குவலயத்தில் எவராலும் சொல்லப்போமோ
தேடியே தன்வந்திரி
பகவான்தானும் தீர்க்கமுடன் சமாதிக்கு எண்ணினாரே
விளக்கவுரை :
[ads-post]
3938. எண்ணினார்
காயாதிகற்பங்கொண்டு எழிலாகத் தாமிருந்தார் வுலகுதன்னில்
நண்ணமுடன் சீஷவர்க்க
மனேகம்பேர்கள் நாடினார் தன்வந்திரி பகவான்தன்னை
வண்ணமுடன் வெகுகால
மிருந்தசித்து வளமையுடன் சதுராதி மார்க்கமெல்லாம்
கண்ணபிரான் தானறிந்த
சொரூபசித்து காசினியில் அவர்போலுஞ் சொல்லப்போமோ
விளக்கவுரை :
3939. சொல்லவே சீடருக்கு
ஞானமார்க்கம் செப்பினார் சரிகைகிரி யோகமெல்லாம்
வெல்லவே விடகம்பம்
பிரிதிமார்க்கம் வேதாந்த ஆகடியம் சௌபாக்கியந்தான்
புல்லவே சோபனமா
மதிசண்டமார்க்கம் புகழான சுககர்மம் திரிதிபாதை
மெல்லவே சூலமொடு
கண்டபத்திரம் மேதினியில் நேர்மையுடன் யிரைத்தார்பாரே
விளக்கவுரை :
3940. பாரேதான் விருத்தியுடன்
துரூபம்யாவும் பாங்கான வியாகர்தம் அரிஷ்ணவேதம்
சீரேதான் வச்சிரமாஞ்
சித்தியோகம் சிறப்பான விதியாக மனந்தங்கோடி
நேரேதான்
விரியாகம்பதிகம்யாவும் நேர்மையுடன் சிவகண்டஞ்சித்தபோதம்
தீரேதான் யாத்திரங்கள்
சுவாணகர்மம் சித்தமுடன் சிவசுப்பிமம் பிரம்மம்தானே
விளக்கவுரை :