3931. போகின்றேன் தேரைமுனி
சித்துகேளும் பொங்கமுடன் வையகத்தை யான்மறந்தேன்
சாகின்ற சடலமது
யிருந்துமென்ன சதாகாலம் நேமநிஷ்டை கொண்டுமென்ன
தாகின்ற பொன்மணியின்
ஜோதிபோலுஞ் சதாகாலம் எப்போதும் துலங்கவேண்டும்
வேகின்ற நெஞ்சமதை
யிதங்கவைத்து வேகமுடன் சதாநித்தம் பணியநன்றே
விளக்கவுரை :
3932. பணியவே பதாம்புயத்தை
நண்ணவேண்டும் பாங்கான மோட்சமதைக் கருதவேண்டும்
அணியவே மறுபடியுஞ்
சமாதிக்காக வப்பனே யான்கொண்ட வுறுதிதன்னை
துணிவுடனே என்சீஷர்
சித்துபாலா துனையாக நீயிருந்து செல்லுமட்டும்
கணிவுடனே வுபதேசம்
பெற்றுமல்லோ காசினியில் இருப்பவனே சித்துவாமே
விளக்கவுரை :
[ads-post]
3933. சித்தான சித்துமுனி
தேரையாகேள் சிறப்புடனே சமாதிக்குப் போறேனப்பா
புத்தான மண்மீதில்
வருவதில்லை புகழான தேகமதை மறந்துவிட்டேன்
சத்தமது தானடங்கி
மண்ணாப்போறேன் சாகின்ற தேகமது விழலாய்ப்போச்சே
பத்தியுடன் வுகுவரை
முடிவுநாளில் பாலகனே எந்தனையுங் காணலாமே
விளக்கவுரை :
3934. காணலா மின்னமொரு மார்க்கம்சொல்வேன் காசினியில் தன்வந்திரியென்றசித்து
நீணவே கிரேதாயினுகத்திலப்பா
நீடான விஷ்ணுவவதாரங்கொண்ட
பூணவே தன்வந்திரியான சித்து
புகழான மகாவிஷ்ணுவவதாரத்தால்
வேணவே மேதினியில் சித்துமாகி
வேதாந்த தன்வந்திரியென்னலாச்சே
விளக்கவுரை :
3935. என்னவே தன்வந்திரி
யென்றசித்து எழிலான காயாதிகற்பங்கொண்டு
தென்பொதிகை தனிற்சென்று
மேறுதன்னில் தேற்றமுடன் அகத்தியனார் தன்னைகண்டு
வண்பான
சாத்திரங்களுள்ளாராய்ந்து அவர்கள்மீதில் பட்சம்வைத்து வன்புகூர்ந்து
சொன்னமொழி தப்பாமல்
நயங்கள்பேசி சூட்சாதி சூசமெல்லா மறிந்தார்தாமே
விளக்கவுரை :