போகர் சப்தகாண்டம் 3716 - 3720 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3716. சித்தான கபிலமுனி சொன்னவாக்கு சிறப்புடனே சமாதிக்குச் சென்றபின்பு
முத்தான வதிசயங்கள் என்னவென்றால் மூதுலகில் யான்வரும்வேளைதன்னில்
பத்தியுடன் பாறைமேல் எழுதும்பண்ணம் பாரினிலே இருளதுவும் மிகவுண்டாகி
சுத்தியே சூரியனார் கண்மறைத்து துப்புறவாய் மூன்றுநாளிருக்கும்பாரே

விளக்கவுரை :


3717. பாரேதான் இருளதுவும் மிகவுமாகி பாரினிலே சத்தவொளி மிஞ்சலாகி
நேரேதான் வானுலகில் தன்னிற்றோற்றும் நேரான தேவரெல்லாங் காணலாகும்
சீரேதான் கிறிஸ்துவிட நாளைப்போல தேசமெல்லாம் விருளாகி வதீதங்காட்டும்
ஊரேதான் காண்பதுவு மில்லையப்பா வுத்தாரப்படியாக நடக்குந்தானே

விளக்கவுரை :

[ads-post]

3718. தானான சமாதிக்குப்பின்னாலப்பா பட்சமுடன் தூதாட்கள் நாலுபேர்கள்
கோனான குருசொன்ன வாக்குபோல கொற்றவர்கள் எந்தனுக்கு முன்னதாக
பானான பராபரத்தின் உத்தாரந்தான் பதமுடனே முந்நிற்பார் தேவர்வாக்கு
தேனான மனோன்மணியாள் சித்தரூபி தேற்றமுடன் எதிர்நிற்பாள் திண்ணமாமே

விளக்கவுரை :


3719. திண்ணமுடன் சமாதியது வெடித்தபின்பு திறமுடனே யடியேனும் வெளியில்வந்து
வண்ணமுடன் வதிசயங்கள் மிகவுண்டாகும் வாகுடனே சிலகால மிருந்துமேதான்
நண்ணமுடன் வரும்போது லோகமெல்லாம் நளினமுடன் வதிசயங்கள் தானடக்கும்
குண்ணமுடன் நமனாரும் என்னைவந்து கூப்பிட்டுப் போவாரென்று உரைத்தார்தாமே

விளக்கவுரை :


3720. என்றபடி தாமுரைத்த வண்ணம்போல எழிலாகத் தானடைந்து சிலதுகாலம்
வென்றிடவே கபிலமுனி சித்துதாமும் வேகமுடன் மண்ணுக்கே இரையுமானார்
தென்றிசையில் சதுரகிரி பக்கலாக தேற்றமுடன் சமாதிக்கு இடமுங்கண்டு
அன்றிடமாம் சமாதியது மிகவும்பூண்டு அங்ஙனமே மண்ணாகப் போனார்தாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3711 - 3715 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3711. ஆச்சப்பா பொய்யான வாழ்வைநம்பி அப்பனே சமாதிக்குப்போகவேண்டாம்
மூச்சப்பா ஷணநேரம் வாழ்வதாகும் மூதுலகில் யாதொன்றும் வருவதில்லை
ஏச்சப்பா வுலகத்தார்க் கேச்சேயாகும் எழிலான சடலமது நிலைதானில்லை
பாச்சலுடன் வாழ்வனைத்தும் இப்படியேயாகும் பாங்குடனே சமாதிக்குப் போகாநன்றே

விளக்கவுரை :


3712. நன்றான வாழ்வல்ல வென்றுசொல்லி நாதாந்த சித்துபரம்சொன்னபோது
குன்றியே கபிலமுனி தாமுங்கேட்டு கொப்பெனவே மறுவிடையுங் கூறலுற்றார்
வென்றிடவே கபிலமுனி விடையுங்கேட்டு விருப்பமுடன் சீஷவர்க்கந்தனையழைத்து
தென்றிசைக்கு சிலகாலம் யானும்சென்று செவ்வையுடன் கொஞ்சநாள் சமாதிபூணே

விளக்கவுரை :

[ads-post]

3713. பூணவே எந்தனுக்கு விருப்பமுண்டு புகழாக எந்தனிட பக்கல்நீங்கள்
தோணவே எல்லாருங் கிட்டிருந்து குறையோடு சமாதிக்கு வருகவென்று
வேணபடி வார்த்தையது மிகவும்பேசி விடைபெற்று தென்துரை வந்துமேதா
வாணலுடன் மலையோரக் குகைகள்கண்டு வளமுடனே சிலகால மிருந்தார்தாமே

விளக்கவுரை :


3714. இருந்தாரே சமாதிக்குள் சிலதுகாலம் எழிலாக தானிருக்கும்வேளைதன்னில்
பொருந்தமுடன் சமாதியது இடமுங்கண்டு பொங்கமுடன் சமாதியது குழிதான்வெட்டி
குருந்த மரமொன்றுமங்கே வைக்கச்செய்தார் கொற்றவர்கள் அப்படியே செய்துவைத்தார்
வருந்தியே தவசுடனேபூண வாகுடனே கபிலரங்கே நினைத்தார்தாமே

விளக்கவுரை :


3715. நினைக்கவே கபிலர்முனி சித்துதாமும் நீடாழிகாலம்வரை சமாதிபூண்டு
புனைப்புடனே சீஷர்களைத் தாமழைத்து புகழுடனே கூறலுற்றார் வண்ணங்கேளிர்
தினைப்புடனே முப்பத்து மூன்றுவாண்டு தீரமுடனிருப்பதற்கு எண்ணங்கொண்டு
சுனைப்புடனே வாக்கதுவுங் கூறலுற்றார் சீரான கபிலமுனி சித்துதாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3706 - 3710 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3706. நீதியாம் இந்நூல்போல் யாருஞ்சொல்லார் நீணிலத்தில் யாம்கண்டவரைக்கும் சொல்வோம்
சோதியுடன் ரிஷியாருஞ் சமாதிபோக தோற்றமுடன் யாகமது செய்யும்போது
வாதியாங் கமலமுனி சித்துதாமும் வளமையுடன் தாமிருந்து வரமுங்கேட்டு
ஆதியாங் குபரனார் வாக்குபோல அங்ஙனவே சிலகால மிருந்தார்தானே

விளக்கவுரை :


3707. இருந்தாரே கமலமுனி சித்துதாமும் எழிலாக ரிஷியினிட மிருக்கும்போது
பொருந்தவே ரிஷியாரும் அன்புகூர்ந்து பொங்கமுடன் சமாதிக்கு இடமுஞ்சொல்லி
குருந்தமுடன் உபதேசம் யாவும்கூர்ந்து குவலயத்தில் சிலகாலம் காட்சிகாண
வருந்தியே குபரனார் யாகவானும் வரமதுவும் கொடுத்தாரே புண்ணியவானே

விளக்கவுரை :

[ads-post]

3708. புண்ணியனாஞ் சிலகால மங்கிருந்து பொங்கமுடன் யாகமது முடிந்தபின்பு
திண்ணமுடன் சமாதிக்குப் போகவென்று திட்டமுடன் வரமதுவுங் கொடுத்தபின்பு
வண்ணமுடன் கபிலமுனி சித்துதாமும் வளமுடனே பின்னுமே சமாதிக்கேக
எண்ணமுடன் தன்மனதில் நினைக்கும்போது எழிலான சித்துமுனி கூறுவாரே

விளக்கவுரை :


3709. கூறுவார் வையகந்தனிலிருந்து கொத்தவனே பலனொன்றுமில்லையப்பா
தேறுவார் மானிலத்தில் சிவயோகம்பூண்டு திறமுடனே கருவிகரணாதியெல்லாம்
மீறுவார் தாமதிகம் பெற்றுக்கொண்டு மிக்கான சமாதிக்குப் போய்தானென்ன
ஆறுவார் பிறவியால் என்னலாபம் வப்பனே யொன்றில்லை கண்டிலேனே

விளக்கவுரை :


3710. கண்டிலேன் சமாதிக்குப் போய்தானென்ன காலனுக்கு வுட்படுவது வுண்மையாகும்
வண்டினம் மதுவையுண்டு செனனமாண்டு வையகத்திலிருப்பதினால் லாபமென்ன
தண்டகத்து முனிவரெல்லாம் மாண்டுபோனார் தாரிணியில் ஒருவருந்தான் இல்லைகண்டீர்
பண்டிதங்கள் சொன்னபடி யாதொன்றில்லை பாரினிலே எப்போதும் பொய்வாழ்வாச்சே 

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3701 - 3705 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3701. கண்டாரே கபிலமுனி சித்துதாமும் காட்டகத்தே குபரனார் தம்மைத்தானும்
தெண்டமுடன் வஞ்சலிகள் மிகவுஞ்செய்து தேவாதி தேவனே யென்றுசொல்லி
கொண்டனைத்து மவர்பாதந் தொட்டுமேதான் கொப்பெனவே யென்றனக்கு வுபதேசங்கள்
அண்டிவந்த எந்தனையும் வாதரித்து அய்யனே கெதியென்று வணங்கிட்டாரே

விளக்கவுரை :


3702. வணங்கியதோர் எந்தனுக்கு குருபரனார்தாமும் வாகுடனே வபயஸ்தந்தான்கொடுத்து
இணங்கவே யெந்தனது யாகந்தன்னில் எழிலுடனே நீரிருந்து நடத்திவந்தால்
குணங்குடியார் மஸ்தானின் சாகிபோல குவலயத்திலுந்தனுக்கு வரமுந்தந்து
மணமுடனே வாக்களித்து ரிஷியார்தாமும் வகுப்புடனே வுபதேசம் செய்தார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

3703. தாமான வுபதேசம் செய்துமல்லோ சதாகோடி காலமிருப்பதற்கு
பூமான சித்தொளிவு முனிவர்தாமும் பூதலத்தில் வெகுகாலம் கற்பமுண்டு
காமான ஞானோபதேசமெல்லாம் கருத்துடனே எந்நாளும் உறுதிகொண்டு
வேமான மாகவேதான் விரும்பிகித்து விவரமுடன் போதித்தார் முனிவருக்கே

விளக்கவுரை :


3704. முனியான கபிலமுனி சித்துதாமும் குருபரனார் ரிஷியார்பக்கல்
கனிவுடனே தானிருந்தார் சிலதுகாலம் காணாத காட்சியெல்லாம் கண்ணில்கண்டார்
பனிமதி சூழ்சடை பூண்டரிஷியார்தாமும் பாரினிலே பாகமது செய்யும்போது
தொனிவுடனே சாமரங்கள் வாத்தியங்கள் தொல்லுலகில் வனந்தமதைக் கண்டோம்தானே

விளக்கவுரை :


3705. தானான வதிசயங்கள் மெத்தவுண்டு தாக்கான குருபரனார் தன்றன்பக்கல்
பானான ரிஷிமுனிவர் கூட்டத்தார்கள் பண்புடனே ரிஷியினிட பக்கல்தன்னில்
தேனான சாஸ்திரத்தில் சொன்னநீதி தெளிவாகச் சொல்லிவிட்டேன் மாந்தர்க்காக
பானான பராபரியை மனதிலெண்ணி பாடிவைத்தேன் பண்புள்ள நீதியாமே

விளக்கவுரை :


Powered by Blogger.