போகர் சப்தகாண்டம் 3906 - 3910 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3906. உண்மையாம் யாக்கோபு முனிவர்தாமும் வுலகத்தில் இருந்ததுவும் போதுமென்று
நண்மையாம் சீஷவர்க்க மானபேர்க்கு நாதாந்த யாக்கோபு முனிவர்தாமும்
வண்மையாம் லோகமதை மறந்தேனப்பா வாகுடனே சமாதிக்குப் பின்னுஞ்செல்வேன்
எண்ணமுடன் சீஷருக்கு வாக்குரைத்து எழிலாக சமாதிக்குப் போவார்தாமே

விளக்கவுரை :


3907. போகவே யாக்கோபு முனிவர்தாமும் பொங்கமுடன் சமாதிக்குச் செல்வேனென்றும்
வாகடங்கள் விதிமுறைப்போல் தப்பாவண்ணம் வளமுடனே தாமறிந்த சித்துதாமும்
வேகமுடன் சமாதிதனி லிறங்கியேதான் வேதாந்த சித்தொளிவு சொரூபந்தன்னை
யோகமுடன் தானிருந்து முனிவர்தாமும் வுத்தமர்க்கு வசரீரிவுரைத்தார்பாரே 

விளக்கவுரை :

[ads-post]

3908. பாரேதான் யாக்கோபு சித்துதாமும் பாருலகில் இதுவரையிலிருந்தகோலம்
நேரேதான் சுகமறிந்த தேகந்தன்னை நேர்மையுடன் பிரிதிவினில் சேர்ப்பதற்கு
வீரேதான் விண்ணுலக வாசையற்று வேதாந்த யாக்கோபு சித்தருக்கு
சீரேதான் யுகமுடிவு காலமாச்சு சிறப்பான தேகமது மண்ணாய்ப்போமே   

விளக்கவுரை :


3909. மண்ணாகிப் போனாலும் காயகற்பம் மகத்தான தேகமிது வழியும்பாரு
திண்ணமுடன் நபிதானும் முடிவுநாளில் தீர்க்கமுடன் கேள்வியது கேட்கும்போது
எண்ணமதில் யாக்கோபு முனிவர்தாமும் எழிலாக வந்தும்மைக்காண்பேனென்று
நிண்ணயமாய் வாக்குரைத்தார் சித்துதாமும் நீடாழியுலகத்தின் மேன்மைதானே

விளக்கவுரை :


3910. நேர்மையா மின்னமொரு மார்க்கங்கேளு நேரான வகஸ்தியனார்க் குகந்தசீஷன்
பார்மனதாய் யுலகுதனில் பெயர்வகுத்த பண்பான சிவராஜயோகியென்பர்
தீர்மையுள்ள புலஸ்திரா மென்றசித்து திகழான சமாதிதனை சொல்வோம்பாரு
வார்மையுடன் சீனபதி மேற்கேயப்பா வளமான தென்பொதிகை சார்புமாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3901 - 3905 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3901. கோடியாஞ் சிலபேர்கள் ஞானவான்கள் குவலயத்தில் வெகுநாளாய்ப் பேருண்டாக
நாடியே சமாதியிடங் கிட்டிருந்து நாதாந்தப் பேரொளியின் சமாதிமுன்னே   
கூடியே வெகுகால மிருந்தாரங்கே கொற்றவர்கள் சமாதியிடந் தன்னிலேதான்
வாடியே கார்த்திருந்த சித்தர்தாமும் வண்மையுடன் வுபதேசம் பெற்றார்தானே

விளக்கவுரை :


3902. தானான யாக்கோபு முனிவர்தாமும் தகமையுட னுபதேசம் பின்னுஞ்சொல்வார்
கோனான குருதனையே மனதிலெண்ணி கொப்பெனவே தாமுறைப்பார் பின்னுஞ்சொல்வெவொம்
வேனான ரிஷிமுனிவர் சித்தருக்கு மேதினியில் உபதேசம் செய்துமேதான்
தேனான யாக்கோபு முனிவர்தாமும் தீர்க்கமுடன் முடிவுதன்னைக்கூறுவாரே

விளக்கவுரை :

[ads-post]

3903. கூறுவார் யாக்கோபு சித்துதாமும் குவலயத்தில் தேகமது இருந்துமென்ன
மாறுபடு பேதனங்கள் செய்துமென்ன மகத்தான வசியமுதல் கற்றுமென்ன
நீறுபுகழ் மோகனங்கள் அறிந்துமென்ன நீணிலத்தில் வாதமது செய்துமென்ன
தூறுடைய வஷ்டமா சித்துவித்தை துறைமுதலுங்கற்றுமென்ன வொன்றுங்காணே

விளக்கவுரை :


3904. காணவே பிரபஞ்ச வாழ்க்கையற்று காசினியிலிருந்தாலும் வொன்றுமில்லை
பூணவே நவகோடி திரவியங்கள் பூவுலகில் தேடியென்ன லாபமில்லை
நாணமுடன் வுலகுதனில் வாழ்ந்துமென்ன நாதாந்தப் பேரொளியைக் கண்டுமென்ன
வேணபடி யுலகமெலாம் ஒருகுடைக்கீழ் வுத்தமனே யாண்டாலும் ஒன்றுங்காணே

விளக்கவுரை :


3905. ஒன்றான தேகமது பொய்யேவாழ்வு ஓகோகோ நாதாக்கள் யாரிருந்தார்
குன்றான கல்லதுபோல் தேகந்தானும் குவலயத்தி லிருந்தாலும் ஒன்றுமில்லை
தன்றான தேகமது இரும்பானாலும் தாரிணியில் நில்லாது மெய்யேயாகும்
சென்றாலுங் காயமது போவதுண்மை சடலமழிந்து போகுவதும் வண்மைதானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3896 - 3900 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3896. காணவே யின்னம்வெகு வதிசயங்கள் கலியுகத்து மாண்பருக்கு மகிமைசொல்வேன்
பூணவே யான்வருகுங்காலந்தன்னில் புகழுடனே வந்தரங்கம் வெளிச்சங்காணும்
நாணவே நாதாக்கள் முனிவர்தாமும் நடுக்கமுடன் நபிதமக்கு வஞ்சியல்லோ
தோணவே யர்ச்சனைகள் மிகவுஞ்செய்து தோற்றமுடன் சமாதிக்கு முன்நிற்பாரே

விளக்கவுரை :


3897. முன்னின்று யாக்கோபு வருவதெப்போ மூதுலகில் சாபமது தவிர்ப்பதெப்போ
மன்னவர்கள் மாண்பரிடம் வினையைநீக்கி மானிலத்தில் வரங்கொடுக்கும் காலமெப்போ
சொன்னதொரு வாக்குமொழி பிசகாவண்ணம் தொல்லுலகில் மகிமையதை காண்பதெப்போ
நன்மையாய் நாதாந்த முனிவர்தாமும் நயமுடனே யாக்கோபை துதித்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

3898. துதித்ததொரு சித்தரெல்லாம் மெச்சவேதான் துரைராஜ சந்திரரும் யாக்கோபாரும்
மதித்திடவே சமாதிதனிலிருந்துமேதான் மார்க்கமுடன் ஜெகஜோதி பிரகாசம்போல
கதிப்புடனே சமாதிவிட்டு யேகியேதான்கனமான யாக்கோபு முனிவர்தாமும்
விதிப்படியே வாக்குரைகள் பொய்யாவண்ணம் விருப்பமுடன் நிறைவேற்றி வந்திட்டாரே

விளக்கவுரை :


3899. வந்ததொரு யாக்கோபு முனிவர்தாமும் வாகுடனே பகடுறைத்த மாந்தரெல்லாம்
சிந்தனையாய் மனங்கலங்கி மெய்நடுங்கி சிற்பரனார் யாக்கோபு வந்தாரென்று
தந்தமக்குள் பயந்துமல்லோ ஒடுக்கமாகி தாரிணியில் மயங்கிநிற்கும்போது
நிந்தனையாய் வந்ததொரு சாபத்தாலே நீணிலத்தில் எல்லவரும் குருடானாரே

விளக்கவுரை :


3900. குருடாய்ப் போனவர்கள் சிலதுமாண்பர் குவலயத்தி லழிந்தவர்கள் சிலதுமாண்பர்
திருடரா யொளித்தவர்கள் சிலதுமாண்பர் தீர்க்கமுடன் வாய்க்குளறி சிலதுமாண்பர்
இருளதனில் கண்ணொளிவு மயங்கியேதான் யிராக்காலம் தெரியாமப்போனபேர்கள்
வருடமாம் வெகுகாலம் இக்கோலந்தான் வதைபட்டு வழிந்தாரே கோடிபேரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3891 - 3895 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3891. தாமேதான் யாக்கோபு சித்துதாமும் சட்டமுடன் சமாதியிடம் பக்கல்வந்து 
போமேதான் முன்சென்ற சமாதிதன்னில் பொங்கமுடன் அடைவதற்கு முனிவர்தாமும்
நேமமுடன் குழிதனிலே இறங்கிநின்று நிஷ்டையென்னுஞ் சதாசிவத்தை மனதிலெண்ணி
தாமமுடன் அல்லாவுத்தவாலாவை சாங்கமுடன் மனந்தனிலே எண்ணினாரே

விளக்கவுரை :


3892. எண்ணியே யாக்கோபு முனிவர்தாமும் எழிலான சீஷனைத்தானழைத்து
வண்ணமுடன் வையகத்தைத் தான்மறந்து வாகுடனே சீஷனுக்கு வுரைத்தார்தாமும்
கண்ணான கண்மணியே சீஷபாலா காசினியை யான்மறந்தேன் பாறைதன்னை
திண்ணமுடன் மூடியல்லோ சமாதிதன்னை தீர்க்கமுடன் கார்த்திருக்க வென்றிட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

3893. என்றதொரு யாக்கோபு முனிவர்தாமும் எழிலான வார்த்தையது சொல்லக்கேட்டு
நன்றுடனே சீஷனவர் பாறைதன்னை நலமாக மூடியல்லோ பக்கல்நின்றார்
குன்றான யாக்கோபு வாக்குதத்தம் கூறுவார் சீஷனுக்கு வாசீர்தம்மை
வென்றிடவே ரிஷியாரும் மனதுவந்து விருப்பமுடன் முப்பத்து வாண்டுதானே

விளக்கவுரை :


3894. ஆண்டான முப்பது வருஷகாலம் வப்பனே சமாதிதனிலிருப்பேனென்றும்
மாண்டுமே தேகமது மண்ணிற்சென்று மறுபடியுஞ் சமாதியிட்டு வருவேனென்று
கூண்டுவிட்டு கூண்டடைந்த கதையைப்போல கொப்பெனவே மேதினியில் வருவேனென்று
ஆண்டகையாந் தனைநினைத்து முனிவர்தாமும் வன்புடனே தானுரைத்தார் வாக்குதாமே

விளக்கவுரை :


3895. வாக்கான வாக்கதுவுங் கூறியல்லோ வையகத்தில் யாக்கோபுயின்னஞ்சொல்வார்
தாக்கான சமாதிதனிலிருந்துமேதான் தண்மையுள்ள சீஷனுக்கு யின்னுஞ்சொல்வார்
நோக்கமுடன் சமாதிமுன்சென்றபோது நெடிதான கபடுரைத்த சீஷவர்க்கம்
ஆக்கமுடன் தாமுரைத்த சீஷரெல்லாம் அவனிதனில் குருடாக்க காண்பீர்தாமே

விளக்கவுரை :


Powered by Blogger.