போகர் சப்தகாண்டம் 3921 - 3925 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3921. என்பாரே பொய்சூது கபடுதந்திர மெழிலான வுன்குருவை தூறுபேசி
வன்பான வார்த்தைகளு மிகவுரைத்து வளமான சமாதிக்கு யிடங்கள் தேடி
இன்பமுடன் மெய்போலே பொய்யுங்கூறி எழிலாக வுந்தனுக்கு புகழ்ச்சிசொல்வார்
தென்பாக மகிழாதே சீஷபாலா நேர்மையுடன் எப்போதும் புகழ்வாய்நில்லே

விளக்கவுரை :


3922. நிற்கையிலே புலஸ்தியரா முனிவர்தாமும் நீடான சமாதிதனிலிருந்துகொண்டு
அற்புதங்கள் மிகவுரைப்பார் சீஷருக்கு வன்பான மகிமைகளு மெத்தவுண்டு
தற்பரனார் புலஸ்தியரும் வருகும்போது தாரிணியில் அதிசயங்கள் மிகநடக்கும்
கற்பாறையானதொரு பொதிகைதானும் கடல்தனிலே யதிரலுடன் யரையும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

3923. அதிருமே நான்வருகுங் காலந்தன்னில் ஆகாய கோடையிடிபோலேசத்தம்  
சதிரான பொதிகைமலைச் சுழலுண்டாகும் சப்தரிஷி தவமுனிகள் நடுங்குவார்கள்
மதிலோட கோட்டைமுதல் அலங்கம்யாவும் மாறியே தலைகீழாய்க் கவிழ்ந்துபோகும்
உதிருமே வானத்து மீன்களெல்லாம் வுத்தமனே வதிரலது காணும்பாரே

விளக்கவுரை :


3924. பாரேதான் சத்தசாகரமும் பொங்கும் பாரினிலே தேர்வேந்த ராஜரெல்லாம்
நேரேதான் போர்முகத்தில் நிற்பார்பாரு நேர்மையுடன் திசைமாறி தேவரெல்லாம்
வேரேதா னவரவர்கள் பதிகள்கெட்டு மேதினியில் அரகநிலையாள்வான்பாரு
கூரேதான் வாக்கதுவும் பொய்யாதப்பா குணமான தேரைரிஷி சொல்லக்கேளே

விளக்கவுரை :


3925. சொல்லவே தேரமுனி சித்துகேளும் சுகரான புலஸ்தியரும் வருநாளாச்சு
புல்லவே சமாதியது திறப்பதற்கு புகழான புலஸ்தியரும் வருநாளாச்சு 
வெல்லவே மேதினியில் சித்துதாமும் வேதாந்த ஞானப்பிரகாசத்தோடு
நல்லதொரு சமாதிதனில் பாரைதானும் நலமுடனே தான்வெடித்து வருகலாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3916 - 3920 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3916. இருந்துமே சமாதியது பூசைகொண்டு எழிலாக நான்வருகு நாளுமட்டும்
திருந்தவே என்சீஷா பிராணநாதா தெருள்கலையில் தேர்ந்ததொரு சித்துபாலா
பொருந்தவே யுபதேசம் மிகவுங்கேட்டு பொங்கமுடன் சமாதிதனிலிருந்துகொண்டு
வருந்தவே நான்வருகும் நாளையெண்ணி வளமுடனே நீநினைத்து நிற்பீர்தானே

விளக்கவுரை :


3917. தானான என்சீஷா யின்னங்கேளு தகமையுள்ள சித்தரமுனி யும்மைக்கண்டு
கோனான வுன்குருவு யெங்கென்றாக்கால் கொற்றவனே சமாதியிடஞ் சென்றாரென்று
தேனான புலஸ்தியரும் வருநாள்மட்டும் தேர்வேந்த சித்தருக்குப் பணிதிபூண்டு
மானான மனோன்மணியைத் தொழுதுபோற்றி மலையோரஞ் சமாதியிட மிருக்கின்றேனே

விளக்கவுரை :

[ads-post]

3918. இருக்கிறேன் என்றுரைத்து யிதவுசொன்னால் எழிலான சித்தர்முனி பகடுரைப்பார்
வெருக்கவே புலஸ்தியரு மடிந்தாரென்று விண்ணுலகில் மறுபடியுந் திரும்பாரென்று
பெருக்கமுடன் வகடுமிகக் கூறுவார்கள் பேரான கர்மியென்ற சித்துதாமும்
உருக்கமுடன் நீயுரைக்கும்போதேயப்பா வுத்தமர்கள் பழிகூறு சொல்லுவாரே  

விளக்கவுரை :


3919. சொல்லுவார் அவர்களிடம் வாய்பேசாதே சுந்தரனே சிவராஜ யோகபாலா
வெல்லுவாருந்தனிஞ் சூதுபேசி வேகமுடன் கொள்வதற்கு மனமுங்கொள்வார்
புல்லுவார் தூரான வார்த்தைகூறி புகழான வுச்சிதங்கள் மிகவுஞ்சொல்லி
அல்லலுடன் உந்தனிடஞ் சூதுபேசி வப்பனே வதைசெய்ய எண்ணுவாரே 

விளக்கவுரை :


3920. எண்ணுவார் தேரையர் எந்தன்சீஷா எழிலான கண்மணியே யின்னஞ்சொல்வேன்
திண்ணமுடன் ஞானமதை கேட்பார்போல தீர்க்கமுடன் ஞானோப தேசந்தன்னை
வண்ணமுடன் கரைகண்ட சித்துபோலே வாரான எழுத்துக்கள் மாராட்டஞ்சொல்லி
நண்ணமுடன் ஜெகஜோதி சொரூபங்காண நானுரைப்பேன் விதியதனை மகிழென்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3911 - 3915 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3911. ஆச்சப்பா புலிப்பாணி பாலாகேளு வன்பான யெனதையர் காலாங்கிதானும்
மூச்சடங்கிச் சீனபதி யிருந்தபோது மூதுலகில் வளமையெல்லாஞ் சொன்னார்முன்பு
பாச்சலுடன் பொதிகைமலைச் சார்புதன்னில் பாங்கான கடலோரம் பூமிவட்டம்
கூச்சலுடன் சித்தர்முனி ரிஷிகளோடு குவலயத்தில் சமாதிக்கு வந்தார்தானே

விளக்கவுரை :


3912. வந்தாரே சீஷனார் தெறையரொடு வளமாக சீனபதிகடலோரந்தான்
அந்தமுடன் பொதிகைமலை குண்ணின்பக்கம் வகஸ்தியனார் சீஷனது பாலன்தானும்
சொந்தமுடன் சமாதிதனி லிறங்கவென்று சுத்தமுள்ள புலஸ்தியருங் கூறலுற்றார்
வந்தவழி போவதுவே வுண்மையென்று வளமுடனே சமாதியிடந் தேடினாரே

விளக்கவுரை :

[ads-post]

3913. தேடியே சமாதியிட மருகிற்சென்று திறளான சீஷவர்க்கக் கூட்டத்தோடு
நாடியே சமுசார வாழ்க்கையற்று நாதாந்தப்பேரொளியைக்கண்டுதேர்ந்து
கூடியே குவலயத்தில் நேர்மையெல்லாங் கொற்றவனார் தான்வெறுத்து சமாதிக்கேக
நீடியே புலஸ்தியரும் சீஷர்தம்மை நீட்சியுடன் தாமழைத்துக் கூறுவாரே

விளக்கவுரை :


3914. கூறுவார் வாய்திறந்து சீஷவர்க்கம் குவலயத்தின் மகிமையெல்லாங் கண்டாராய்ந்தேன்
சீருடனே சிற்றின்ப வாழ்க்கையற்று சீரான பேரின்ப நிலையைக்காண
நேருடனே வுலகுதனை யான்மறந்து நேர்மையுடன் காயமதைநிலைநிறுத்தி
பாருள்ளே சமாதிதனி லிருப்பேனென்று பட்சமுடன் சீஷருக்கு வுரைத்தார்பாரே

விளக்கவுரை :


3915. பாரேதான் தேரையர் மைந்தாகேளு பாரினிலே சமாதிக்குப் போரேன்யானும்
சீரேதான் இருபத்துவாண்டு தானும்சிறப்புடனே சமாதிதனிலிருப்பேனென்று
நேரேதான் சமாதிதனிலிருந்துகொண்டு நேர்மையுடன் அசரீரிவாக்குசொல்வேன்
தீரேதான் யான்வருகுங்காலமட்டும் தீர்க்கமுடன் சமாதியிட மிருந்திடாயே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3906 - 3910 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3906. உண்மையாம் யாக்கோபு முனிவர்தாமும் வுலகத்தில் இருந்ததுவும் போதுமென்று
நண்மையாம் சீஷவர்க்க மானபேர்க்கு நாதாந்த யாக்கோபு முனிவர்தாமும்
வண்மையாம் லோகமதை மறந்தேனப்பா வாகுடனே சமாதிக்குப் பின்னுஞ்செல்வேன்
எண்ணமுடன் சீஷருக்கு வாக்குரைத்து எழிலாக சமாதிக்குப் போவார்தாமே

விளக்கவுரை :


3907. போகவே யாக்கோபு முனிவர்தாமும் பொங்கமுடன் சமாதிக்குச் செல்வேனென்றும்
வாகடங்கள் விதிமுறைப்போல் தப்பாவண்ணம் வளமுடனே தாமறிந்த சித்துதாமும்
வேகமுடன் சமாதிதனி லிறங்கியேதான் வேதாந்த சித்தொளிவு சொரூபந்தன்னை
யோகமுடன் தானிருந்து முனிவர்தாமும் வுத்தமர்க்கு வசரீரிவுரைத்தார்பாரே 

விளக்கவுரை :

[ads-post]

3908. பாரேதான் யாக்கோபு சித்துதாமும் பாருலகில் இதுவரையிலிருந்தகோலம்
நேரேதான் சுகமறிந்த தேகந்தன்னை நேர்மையுடன் பிரிதிவினில் சேர்ப்பதற்கு
வீரேதான் விண்ணுலக வாசையற்று வேதாந்த யாக்கோபு சித்தருக்கு
சீரேதான் யுகமுடிவு காலமாச்சு சிறப்பான தேகமது மண்ணாய்ப்போமே   

விளக்கவுரை :


3909. மண்ணாகிப் போனாலும் காயகற்பம் மகத்தான தேகமிது வழியும்பாரு
திண்ணமுடன் நபிதானும் முடிவுநாளில் தீர்க்கமுடன் கேள்வியது கேட்கும்போது
எண்ணமதில் யாக்கோபு முனிவர்தாமும் எழிலாக வந்தும்மைக்காண்பேனென்று
நிண்ணயமாய் வாக்குரைத்தார் சித்துதாமும் நீடாழியுலகத்தின் மேன்மைதானே

விளக்கவுரை :


3910. நேர்மையா மின்னமொரு மார்க்கங்கேளு நேரான வகஸ்தியனார்க் குகந்தசீஷன்
பார்மனதாய் யுலகுதனில் பெயர்வகுத்த பண்பான சிவராஜயோகியென்பர்
தீர்மையுள்ள புலஸ்திரா மென்றசித்து திகழான சமாதிதனை சொல்வோம்பாரு
வார்மையுடன் சீனபதி மேற்கேயப்பா வளமான தென்பொதிகை சார்புமாச்சே

விளக்கவுரை :


Powered by Blogger.