போகர் சப்தகாண்டம் 4046 - 4050 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4046. தந்தாரே சீனபதி விட்டுவந்தேன் தகமையுள்ள குளிகையது பூண்டுகொண்டு
வந்தேனே தயிர்கடலுக்கப்பாலப்பா வாகான வடகோடி கானகத்தில்
சொந்தமுடன் யானுமல்லோ சென்றேனங்கே சுத்தமுள்ள யாசீர்மங்கண்டேன்யானும்
அந்தமுடன் ஆசீர்மம் நடுமையத்தில் அழகான வாயக்கால் கூடந்தானே

விளக்கவுரை :


4047. தானான கூடமது சித்தரக்கூடம் தன்மையுள்ள சித்தர்களும் அறியாநாடு
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்கு வுரைத்தநீதி
மானான வடகோடி கானகத்தில் வளமான வாயக்கால் மண்டபந்தான்
தேனான மனோன்மணியாள் இருக்கும்ஸ்தானம் தேவியென்ற கூடமது விசித்திரமாமே

விளக்கவுரை :

[ads-post]

4048. ஆமேதான் ஆயக்கால் மண்டபத்தில் அண்டவொண்ணா தேவரிஷிகூட்டமப்பா
தாமேதான் காலாங்கி சொன்னவாக்கு தாரிணியில் மெய்யான வார்த்தைகொண்டு
போமெனவே வடகோடிகானகத்தில் பொங்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு
வேமெனவே யாசீர்மம் தன்னிற்சென்றேன் வேதாந்தத் தாயினது யிடங்கண்டேனே

விளக்கவுரை :


4049. கண்டேனே மனோன்மணியாள் வீற்றிருக்கும் கடிதான வாசீர்மந்தன்னைக்கண்டேன்
அண்டவொண்ணாச் சேனையது ரிஷிகள்கூட்டம் அங்ஙனமேயான்கண்டு பயமுங்கொண்டு
தொண்டரெனும் ரிஷிமுனிவர் சித்தர்தாமும் தோற்றமுடன் ஆசீர்மந்தன்னைச்சுற்றி
கொண்டல்வண்ணன் அச்சுதனும் முன்னேநிற்க கோடான கோடிவரை பார்த்திட்டேனே

விளக்கவுரை :


4050. பார்த்தேனே மனோன்மணியாள் ஆசீர்மத்தில் பலகோடி நவகோடி ரிஷியார்தாமும்
கார்த்துமே சதாகாஞ்சூழ்ந்திருக்க கண்மணி நவரத்தின வாசீர்மத்தில்
தீர்த்தமுடன் தடாகமென்ற பொய்கைதன்னில் திகழான மனுக்கூட்டம் அனேகம்பேர்கள்
சார்த்த கையாழ்வார் பன்னீராயிரந்தான் சட்டமுடன் தவசிருக்கக் கண்டேன்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4041 - 4045 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4041. கேட்டுமே கலியுகச் சேதிதன்னை கீர்த்தியுள்ள பஞ்சபாண்டவர்கள்தம்மை
வாட்டமுடன் கலியுக முதலில்தன்னில் வளமாக யெவ்விடத்தில் மடித்தாரென்று
நீட்டமுடன் எந்தனையும் கேட்கும்போது நீடூழி கோடிவரையிருந்தாரங்கே
காட்டமது கலியுக முதலிலப்பா கண்காணா மண்மேலே போனார்தாமே

விளக்கவுரை :


4042. போனதொரு செய்திதன்னை யானுரைத்தேன் பொங்கமுடன் எந்தன்மேல் பட்சம்வைத்து
தானமொடு சித்தர்முனி ரிஷியார் தம்மால் தாரிணியில் சாபமது நேரிட்டாலும் 
தீனமொடு சாபமது சொல்லாமற்றான் தீர்க்கமுடன் எந்தனுக்கு வரந்தந்தாரே

விளக்கவுரை :

[ads-post]

4043. தந்தாரே சாபமது நீக்கியல்லோ தாரணியில் சத்தகன்னி மார்கள்தானும்  
அந்தமுடன் எந்தனுக்கு ஆசீர்மித்து அவனியெல்லாம் செல்வதற்கு அதிதஞ்சொல்லி
சொந்தமுடன் உபதேசம் மிகவுங்கூறி சூட்சாதி சூட்சமெல்லாம் தெளிவுரைத்து
எந்தனுக்கு மாற்றமென்ற மைகொடுத்து எழிலாக சீனபதி போமென்றாரே

விளக்கவுரை :


4044. என்றவுடன் காலாங்கி நாதர்தம்மை எழிலாக தானினைத்து சீனம்போக
சென்றுமே குளிகைகொண்டு வடியேன்தானும் சிறப்புடனே சீனபதிவந்தேன்யானும்
மூன்றுமே தானடந்த சேதியெல்லாம் முனையான சீனபதிமாந்தருக்கு
நன்றாகத் தானுரைத்தேன் அடியேன்தானும் நலமுடனே மனக்களிப்பு கொண்டார்பாரே

விளக்கவுரை :


4045. பாரேதான் சத்தகன்னி மார்கள்நேர்மை பாங்குடனே தானுரைத்தேன் சீனத்தார்க்கு
நேரேதான் எந்தனுக்கு உறுதிசொல்லி நேர்மையுடன் சாபமதை தவிர்த்தாரென்றே
ஊரேதான் போகவென்று விடையுந்தந்து வுத்தமர்க்கு ஆதியந்த முடிவுசொல்லி
பேரேதான் வாழ்கவென்று எந்தநாளும் பெருமையுடன் இருக்கவென்று வரந்தந்தாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4036 - 4040 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4336. ஆச்சென்று போகாமல் அடியேன்தானும் வன்புடனே மறுபடியுங்கேள்விகேட்டு
பாச்சலுடன் குளிகையது போட்டுக்கொண்டு பாங்கிமார் த்தகன்னி யேழுபேரை
மூச்சடங்கி போனதொரு தேகம்போல மொய்குழல்மார் முன்னடியேன்நின்று
ஏச்சியே யவர்களிடம் கண்டுபேசி எழிலாக யான்வருவேன் என்றிட்டேனே

விளக்கவுரை :


4037. என்றேனே சிறுபாலன் சொன்னவார்த்தை எழிலான தவமுனிகள் ரிஷிகள்கேட்டு
நின்றதொரு நெடுமூச்சு தானறிந்து நேர்மையுடன் எந்தனுக்கு யிதவுகூறி
குன்றின்மேல் செல்வதற்கு வினயஞ்சொல்லி கொப்பெனவே யாசீர்மம் மிகவுங்கூறி
வென்றிடவே அடியேனை யனுப்பினார்கள் விடுபட்டு குளிகைகொண்டு போனேன்நானே

விளக்கவுரை :

[ads-post]

4038. போனேனே யாசீர்மந் தன்னிலேதான் பொங்கமுடன் காவனத்தை இறங்கினேன்யான்
சோனைபோல் சுனையருகே யிறங்கிநின்றேன் சொர்னமென்ற சத்தகன்னி மார்கள் கண்டார்
தேனேதான் அகலிகை யாசீர்மந்தான் திகழான முதற்பீடம் முதற்காவனந்தான்
மானேதான் திரௌபதியாம் ரெண்டாம்பீடம் மகத்தான சீதையது பீடந்தானே

விளக்கவுரை :


4039. சீதையாம் பீடமது மூன்றாம்பீடம் சிறப்பான தாரையாம் நான்காம்பீடம்
வேதையாம் மண்டோதரி ஐந்தாம்பீடம் மிக்கான சாமாலி யாறாம்பீடம்
பாதையாம் காந்திரௌதா சிறமாலியாகும் பாங்கான சத்தகன்னியேழுபேர்கள்
கோதையாம் தேவகன்னி யேழுபேர்கள் குளிகைகொண்டு யானுமங்கே கண்டிட்டேனே

விளக்கவுரை :


4040. கண்டேனே யவர்களிடம் வார்த்தைபேசி கலியுகத்து வதிசயங்கள் எல்லாங்கேட்டேன்
கொண்டல் வண்ணனச்சுதனார் செய்திகேட்டேன் கோடான கோடிபெண்கள் முறைமைசொன்ன
விண்டபடி வார்த்தையது மிகவுமங்கே வேதாந்தத் தாயினது வருளும்பெற்று
தொண்டனெனும் மைத்துனர்கள் ஐந்துபேரும் சுகமுடனே கேட்டுமல்லோ விசாரித்தாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4031 - 4035 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4031. கண்டேனே என்வனத்தில் சந்தேகத்தால் கதனமுடன் குளிகைகொண்டு சென்றேன்யானும்
அண்டவொண்ணாப் பாறையது மேலேயுண்டு கவலயது யோசனைகள் சொல்லப்போமோ
தொண்டர்முனி சித்தர்களு மனேகமுண்டு தோற்றமுடன் எந்தனுக்கு கண்ணிற்றோன்ற
சண்டமாருதப் போலேயென்னைக் கண்டார் சட்டமுடன் யாரென்று கேட்டார்தாமே

விளக்கவுரை :


4032. கேட்டாரே சித்துமுனி எந்தனுக்காய் கிருபையுடன் யாரென்று கேட்கும்போது
தாட்டிகமாய் குளிகைகொண்டு வந்தவர்யார் தண்மையுள்ள சிறுபாலாவென்றபோது
நீட்டமுடன் காலாங்கி சீஷனென்றேன் நீடான சித்துமுனி ரிஷிகளெல்லாம்
வாட்டமுடன் எந்தனையும் வாசீர்மித்து வளமுடனே ஞானோபம்செய்தார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4033. பாரேதான் யானுமல்லோ சிலதுகாலம் பாண்மையுடன் அங்கிருந்தேன் சித்தர்பக்கல்
நேரேதான் வடகோடி கானகத்தில் நேரானதெதொப்புண்டு குளமுமுண்டு
ஊரேதான் என்றறிந்து வுளவறிந்து வுத்தமனே யாசீர்மங்காணுதென்றேன்
பேரென்ன வூரென்ன பதிதானென்றேன் பரான சத்தகன்னி பதியென்றாரே

விளக்கவுரை :


4034. பதியென்று சொல்லுகையில் அடியேன்தானும் பட்சமுடன் என்மீதில்கிருபைவைத்து
துதிபுரியும் சத்தகன்னி ஆசிர்மந்தான் துப்புறவாய் அவ்விடத்தில் சொல்லொணாது
மதிபோன்ற சத்தகன்னி இருக்குந்தானம் மகத்தான தேவதா வாசீர்மந்தான்
கதிபெறவே சென்றவர்க்கு எல்லாமுண்டு காசினியில் போவார்தா னில்லைதானே

விளக்கவுரை :


4035. இல்லையென்று போனாலும்கன்னிமார்கள் எழிலான மாண்பர்களை சபிப்பாரப்பா
கொல்லவே எமனுக்கு வுறுதியாகும் கோபத்தால் சாபமது வாய்க்கும்பாரு
புல்லவே யவ்விடத்திற் செல்லவேண்டாம் புகழான சத்தகன்னிமார்களப்பா
எல்லைவிட்டு போகாதே எந்தன்பாலா எடுத்துரைத்தார் எந்தனுக்கு மிகுதியாச்சே

விளக்கவுரை :


Powered by Blogger.