4031. கண்டேனே என்வனத்தில்
சந்தேகத்தால் கதனமுடன் குளிகைகொண்டு சென்றேன்யானும்
அண்டவொண்ணாப் பாறையது
மேலேயுண்டு கவலயது யோசனைகள் சொல்லப்போமோ
தொண்டர்முனி சித்தர்களு
மனேகமுண்டு தோற்றமுடன் எந்தனுக்கு கண்ணிற்றோன்ற
சண்டமாருதப் போலேயென்னைக்
கண்டார் சட்டமுடன் யாரென்று கேட்டார்தாமே
விளக்கவுரை :
4032. கேட்டாரே சித்துமுனி
எந்தனுக்காய் கிருபையுடன் யாரென்று கேட்கும்போது
தாட்டிகமாய் குளிகைகொண்டு
வந்தவர்யார் தண்மையுள்ள சிறுபாலாவென்றபோது
நீட்டமுடன் காலாங்கி
சீஷனென்றேன் நீடான சித்துமுனி ரிஷிகளெல்லாம்
வாட்டமுடன் எந்தனையும்
வாசீர்மித்து வளமுடனே ஞானோபம்செய்தார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
4033. பாரேதான் யானுமல்லோ சிலதுகாலம் பாண்மையுடன் அங்கிருந்தேன் சித்தர்பக்கல்
நேரேதான் வடகோடி கானகத்தில்
நேரானதெதொப்புண்டு குளமுமுண்டு
ஊரேதான் என்றறிந்து
வுளவறிந்து வுத்தமனே யாசீர்மங்காணுதென்றேன்
பேரென்ன வூரென்ன
பதிதானென்றேன் பரான சத்தகன்னி பதியென்றாரே
விளக்கவுரை :
4034. பதியென்று சொல்லுகையில்
அடியேன்தானும் பட்சமுடன் என்மீதில்கிருபைவைத்து
துதிபுரியும் சத்தகன்னி
ஆசிர்மந்தான் துப்புறவாய் அவ்விடத்தில் சொல்லொணாது
மதிபோன்ற சத்தகன்னி
இருக்குந்தானம் மகத்தான தேவதா வாசீர்மந்தான்
கதிபெறவே சென்றவர்க்கு
எல்லாமுண்டு காசினியில் போவார்தா னில்லைதானே
விளக்கவுரை :
4035. இல்லையென்று
போனாலும்கன்னிமார்கள் எழிலான மாண்பர்களை சபிப்பாரப்பா
கொல்லவே எமனுக்கு
வுறுதியாகும் கோபத்தால் சாபமது வாய்க்கும்பாரு
புல்லவே யவ்விடத்திற்
செல்லவேண்டாம் புகழான சத்தகன்னிமார்களப்பா
எல்லைவிட்டு போகாதே
எந்தன்பாலா எடுத்துரைத்தார் எந்தனுக்கு மிகுதியாச்சே
விளக்கவுரை :