4336. ஆச்சென்று போகாமல்
அடியேன்தானும் வன்புடனே மறுபடியுங்கேள்விகேட்டு
பாச்சலுடன் குளிகையது போட்டுக்கொண்டு
பாங்கிமார் த்தகன்னி யேழுபேரை
மூச்சடங்கி போனதொரு தேகம்போல
மொய்குழல்மார் முன்னடியேன்நின்று
ஏச்சியே யவர்களிடம்
கண்டுபேசி எழிலாக யான்வருவேன் என்றிட்டேனே
விளக்கவுரை :
4037. என்றேனே சிறுபாலன்
சொன்னவார்த்தை எழிலான தவமுனிகள் ரிஷிகள்கேட்டு
நின்றதொரு நெடுமூச்சு
தானறிந்து நேர்மையுடன் எந்தனுக்கு யிதவுகூறி
குன்றின்மேல் செல்வதற்கு
வினயஞ்சொல்லி கொப்பெனவே யாசீர்மம் மிகவுங்கூறி
வென்றிடவே அடியேனை
யனுப்பினார்கள் விடுபட்டு குளிகைகொண்டு போனேன்நானே
விளக்கவுரை :
[ads-post]
4038. போனேனே யாசீர்மந்
தன்னிலேதான் பொங்கமுடன் காவனத்தை இறங்கினேன்யான்
சோனைபோல் சுனையருகே
யிறங்கிநின்றேன் சொர்னமென்ற சத்தகன்னி மார்கள் கண்டார்
தேனேதான் அகலிகை
யாசீர்மந்தான் திகழான முதற்பீடம் முதற்காவனந்தான்
மானேதான் திரௌபதியாம்
ரெண்டாம்பீடம் மகத்தான சீதையது பீடந்தானே
விளக்கவுரை :
4039. சீதையாம் பீடமது
மூன்றாம்பீடம் சிறப்பான தாரையாம் நான்காம்பீடம்
வேதையாம் மண்டோதரி
ஐந்தாம்பீடம் மிக்கான சாமாலி யாறாம்பீடம்
பாதையாம் காந்திரௌதா
சிறமாலியாகும் பாங்கான சத்தகன்னியேழுபேர்கள்
கோதையாம் தேவகன்னி
யேழுபேர்கள் குளிகைகொண்டு யானுமங்கே கண்டிட்டேனே
விளக்கவுரை :
4040. கண்டேனே யவர்களிடம்
வார்த்தைபேசி கலியுகத்து வதிசயங்கள் எல்லாங்கேட்டேன்
கொண்டல் வண்ணனச்சுதனார்
செய்திகேட்டேன் கோடான கோடிபெண்கள் முறைமைசொன்ன
விண்டபடி வார்த்தையது
மிகவுமங்கே வேதாந்தத் தாயினது வருளும்பெற்று
தொண்டனெனும் மைத்துனர்கள்
ஐந்துபேரும் சுகமுடனே கேட்டுமல்லோ விசாரித்தாரே
விளக்கவுரை :