4041. கேட்டுமே கலியுகச் சேதிதன்னை கீர்த்தியுள்ள பஞ்சபாண்டவர்கள்தம்மை
வாட்டமுடன் கலியுக
முதலில்தன்னில் வளமாக யெவ்விடத்தில் மடித்தாரென்று
நீட்டமுடன் எந்தனையும்
கேட்கும்போது நீடூழி கோடிவரையிருந்தாரங்கே
காட்டமது கலியுக முதலிலப்பா
கண்காணா மண்மேலே போனார்தாமே
விளக்கவுரை :
4042. போனதொரு செய்திதன்னை
யானுரைத்தேன் பொங்கமுடன் எந்தன்மேல் பட்சம்வைத்து
தானமொடு சித்தர்முனி
ரிஷியார் தம்மால் தாரிணியில் சாபமது நேரிட்டாலும்
தீனமொடு சாபமது
சொல்லாமற்றான் தீர்க்கமுடன் எந்தனுக்கு வரந்தந்தாரே
விளக்கவுரை :
[ads-post]
4043. தந்தாரே சாபமது நீக்கியல்லோ
தாரணியில் சத்தகன்னி மார்கள்தானும்
அந்தமுடன் எந்தனுக்கு
ஆசீர்மித்து அவனியெல்லாம் செல்வதற்கு அதிதஞ்சொல்லி
சொந்தமுடன் உபதேசம்
மிகவுங்கூறி சூட்சாதி சூட்சமெல்லாம் தெளிவுரைத்து
எந்தனுக்கு மாற்றமென்ற
மைகொடுத்து எழிலாக சீனபதி போமென்றாரே
விளக்கவுரை :
4044. என்றவுடன் காலாங்கி
நாதர்தம்மை எழிலாக தானினைத்து சீனம்போக
சென்றுமே குளிகைகொண்டு
வடியேன்தானும் சிறப்புடனே சீனபதிவந்தேன்யானும்
மூன்றுமே தானடந்த
சேதியெல்லாம் முனையான சீனபதிமாந்தருக்கு
நன்றாகத் தானுரைத்தேன்
அடியேன்தானும் நலமுடனே மனக்களிப்பு கொண்டார்பாரே
விளக்கவுரை :
4045. பாரேதான் சத்தகன்னி
மார்கள்நேர்மை பாங்குடனே தானுரைத்தேன் சீனத்தார்க்கு
நேரேதான் எந்தனுக்கு
உறுதிசொல்லி நேர்மையுடன் சாபமதை தவிர்த்தாரென்றே
ஊரேதான் போகவென்று
விடையுந்தந்து வுத்தமர்க்கு ஆதியந்த முடிவுசொல்லி
பேரேதான் வாழ்கவென்று
எந்தநாளும் பெருமையுடன் இருக்கவென்று வரந்தந்தாரே
விளக்கவுரை :