போகர் சப்தகாண்டம் 4086 - 4090 of 7000 பாடல்கள்
4086. நிற்பீரே நிலைதனிலே
நின்றுகொண்டு நீடான பிரணவத்தை யுச்சரித்து
கற்பதித்த தூணதுபோல்
எந்தநாளும் கலங்காமல் சமாதிதனில் நின்றுகொண்டு
சொற்படியே குருவினது
மொழியுங்கேட்டு தோராமல் ஞானமது பூண்டுகொண்டு
பற்பல பேதத்தின் பேதாபேதம்
பாரினிலே சொல்லாத பான்மையாமே
விளக்கவுரை :
4087. பான்மையென்ற சதாநிலையில்
நின்றுகொண்டு பட்சமுடன் யோகமதை நிலைநிறுத்தி
ஆன்மாவுக்கொருநாளும்
அழிவில்லை வவனிதனில் நீயுமொரு சித்தனைப்போல
மேன்மையுடன் தானிருந்து
வையகத்தில் மெய்யான வழியறிந்து பதவிகண்டு
மான்மையென்ற
மோட்சவழிக்காளதாகி மகிதலத்திலிருப்பவனே புத்திவானே
விளக்கவுரை :
[ads-post]
4088. புத்தியென்றால் வாதமது
காண்பதற்கு புகழான யோகமதை நிறுத்துதற்கும்
நித்தியமும்
வாசியையுள்ளடக்கி நிகழான சுவாசமதை மேல்நோக்காமல்
சத்தியென்ற சொரூபமதைக்
கண்னிற்கண்டு சதாகாலம் கரமவினைதனையகற்றி
முத்திபெற வழிபாடு
செய்துகொண்டு மூதுலகில் இருப்பவனே தர்மவானே
விளக்கவுரை :
4089. தர்மமா மின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தாரிணியில் காலாங்கி கடாட்சத்தாலே
கர்மமென்ற பவக்கடலை
விட்டகற்றி கருவிகரணாதியுடன் தொந்தம்பார்த்து
வர்மமுடன் நடப்பவனே
புத்திவானாம் வரைகடந்துயிருப்பவனே கழுதைமாண்பன்
தர்மவினை விட்டகற்றித்
தாரிணிதன்னில் சட்டமுடன் பேருண்டாய் வாழ்குவீரே
விளக்கவுரை :
4090. வாழ்கவே யின்னமொரு
மகிமைகேளும் வாகான தனக்கோட்டி கடலிலப்பா
தாழ்கவே வலைகடலில்
சத்தந்தானும் தண்மையுடன் நின்றதொரு வளப்பஞ்சல்வேன்
மாழ்கியதோர் கடல்தனில்
பாறைமீதில் மகத்தான குருபர்ன ரிஷியார்தாமும்
வேழ்வியுடன்
ஆசீர்மந்தனைநடத்தி விருப்பமுடன் தானடத்தும் காலந்தானே
விளக்கவுரை :