4081. பாரேதான் குளிகையது பூண்டுகொண்டு பாரினிலே சம்புவரம்பெற்றுவந்தேன்
நேரேதான் மத்துறையும்
நாடுகண்டேன் நெடிதான ஆழியது யானுங்கண்டேன்
சீரேதான் சிப்பினுறை
முத்துதானும் சிறப்பான கடலதுவும் பார்த்துவந்தேன்
ஊரேதான் குருபர்ன
ரிஷியாசீர்மம் வுத்தமனே யான்கண்ட வளம்சொல்வேனே
விளக்கவுரை :
4082. வளமான மார்க்கமது
யின்னங்கேளு வளமான தனக்கோட்டி வடபாகத்தில்
தளமான பதியென்று பாறைகண்டேன்
தண்மையுள்ள சம்புமகாரிஷியைக்கண்டேன்
குளமான பொய்கையது
சித்தர்வாழ்க்கை குவலயத்தில் அதற்கீடு யாதொன்றில்லை
பளமான நவகனியும்
நவதான்யத்தோடு பாறையதில் தான்விளையும் பாண்டினாடே
விளக்கவுரை :
[ads-post]
4083. நாடான பாண்டிவள
நாட்டைக்கண்டேன் நவகோடிரிஷிமுனிவர் ஆசீர்மந்தான்
காடான தவமுனிகள்
வுறையும்நாடு காசினியில் மாண்பர்கள்தானறியானாடு
கோடான கோடியிலே யொருவனப்பா
குறையான விட்டகுறையிருக்குமானால்
தடாண்மைக்கொண்டதொரு
தளமுங்காண்பார் தாரிணியில் அவனுமொரு சித்தனாமே
விளக்கவுரை :
4084. சித்தனாய்ப் பிறந்தாலும்
என்னலாபம் சீரான விட்டகுறை யிருக்கவேண்டும்
கந்தனது பதவிதனைப்
பெறவேவேண்டும் காசினியில் விதியாளிப் பெறுவானப்பா
சத்தமுடன் ஞானோபதேசந்தன்னை
சூட்சாதி சூட்சமதை யறியவேண்டும்
பித்தனைப்போலிருக்காமல்
பேரின்பத்தில் பேருலகில் வாழ்பவனே யோகியாமே
விளக்கவுரை :
4085. யோகமென்றால் யோகமது
சொல்லொண்ணாது யொளிவான பிரகாசமானஜோதி
பாகமுடன் சின்மயத்தின்
நிலையில்நின்று பட்சமுடன் சதாகாலமர்ச்சித்தேதான்
சோகமது வாராமல் சமாதிதன்னில்
தொல்லுலகில் மாய்கையது வாசையற்று
வேகமுடன் மனோன்மணியை
மனதிலுண்ணி வெட்டவெளியம்பரத்தே நிற்பீர்தாமே
விளக்கவுரை :