4071. சொன்னாரே குருபர்ன
ரிஷியார்தாமும் தெதொற்றமுடன் சிறுபாலா எங்கேவந்தீர்
மன்னவனே குளிகைகொண்டு
வந்ததென்ன மாராட்டமாகவல்லோ வந்தாயப்பா
வன்னநெடுங்கோபமுள்ள
சித்தர்தாமும் வளமுடனே யுந்தனையும் சபிப்பாரப்பா
இன்னநெடுங் காலமிலா
திந்தகாலம் யிறையவனே ஏன்வந்தீர் என்றிட்டாரே
விளக்கவுரை :
4072. இட்டாரே குருபர்ன
ரிஷியார்தாமும் எழிலான போகர்முகந்தன்னைப்பார்த்து
பட்டமரந் துளித்ததுபோல்
பாலாநீயும் பட்சமுடன் வந்ததினால் வுந்தனுக்கு
சட்டமுடன் வரந்தருவேன்
என்றுசொல்லி சாங்கமுடன் எனக்குரைத்தார் ரிஷியார்தாமும்
அட்டதிசை புகழவல்லோ
வரங்கள்பெற்று வாசீர்மந்தான்கடந்து வந்திட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
4073. வந்திட்டேன் தனக்கோட்டிக் கடலோரந்தான் வாகான சம்புவென்ற சங்கரைக்கண்டேன்
பந்திட்டமாகவல்லோ
கடலோரந்தான் பாரினிலே குளிகைகொண்டு செல்லும்போது
முந்திட்ட குருபர்னார்
செய்தியெல்லாம் முனையான சம்புவென்ற சங்கர்தானும்
தொந்திட்ட மாகவல்லோ
சம்புதானும் தொன்மையுடன் தானுரைக்கக் கேட்டிட்டேனே
விளக்கவுரை :
4074. கேட்டேனே
முத்தினாசிர்மந்தானும் கெடியான சாகரத்தைக் கிட்டிவந்தேன்
நீட்டமுடன் முத்துரையுங்
கடல்தானப்பா நீடாழி சாகரமும் வுளவுமெத்த
தேட்டமுடன் ஆணியென்ற
முத்துதாமும் தெளிவான கடல்தனிலே விளையுஞ்சிப்பி
நாட்டமுடன் சித்தர்முனி
ரிஷியார்தாமும் நவிலவே தானிருக்கும் கடல்தானாமே
விளக்கவுரை :
4075. கடலான நடுமையம் பாறைமீதில்
கனமான சம்புமகாரிஷியாசீர்மம்
அடலான வாய்கால் மண்டபந்தான்
அழகான கள்ளழகர் கோட்டைதானும்
மிடலான தேவதா ஸ்தலமுமுண்டு
மிக்கான வடிவேலர் கோயிலுண்டு
குடதிசையாம் பக்கமதில்
பொய்கையுண்டு குறிப்பான சம்புமகாபதிதானாமே
விளக்கவுரை :