4066. தாமான யின்னமொரு
மார்க்கங்கேளு தாக்கான தனக்கோட்டி யிடபாகத்தில்
வேமான மென்றதொரு
வாசீர்மந்தான் மிக்கான காடுள்ளே குகைதானுண்டு
கோமானுக் கொப்பான
ரிஷியார்தாமும் குருவான சாமியென்ற சித்துவுண்டு
நாமான மாகவல்லோ குளிகைபூண்டு
நன்மையுடன் சென்றேனே வனந்தானுள்ளே
விளக்கவுரை :
4067. உள்ளான வாசீர்மந்
தன்னிற்சென்றேன் ஓகோகோ நாதாக்கள் சித்தருண்டு
கள்ளரென்ற சித்தரப்பா
கணக்கோயில்லை காசினியில் அவர்பெருமை மெத்தவுண்டு
தெள்ளமுர்தமானதொரு
சித்துமுன்னே சிறப்புடனே குளிகைகொண்டு யானும்சென்றேன்
மெள்ளவே சித்தர்முனி
கண்டபோது மேதினியில் யாரென்று எனைக்கேட்பாரே
விளக்கவுரை :
[ads-post]
4068. கேட்டவுடன் சித்தர்கட்கு
விடையுஞ்சொன்னேன் கெடியான காலாங்கி சீஷனென்றேன்
நீட்டமுடன் தனக்கோட்டி
காணவந்தேன் நீதியுடன் சீதையென்னும் தேவிகண்டேன்
வாட்டமுடன் இடப்பாகங்
குளிகைகொண்டேன் வாகான வாசீர்மமிங்கேகண்டேன்
நாட்டமுடன் குளிகைகொண்டு
இறங்கியல்லோ நாதாந்த சித்தொளிவைக் கண்டேனே
விளக்கவுரை :
4069. கண்டவுடன் ரிஷிக்கூட்டம்
முனிவர்தாமும் கருத்துடனே எந்தனுக்கு உறுதிசொல்லி
அண்டமுடன் ஆகாயரிஷிகள்
தேவர்அப்பனே அதிசயங்கள் தாமுரைத்து
மண்டலங்கள் தான்புகழும்
ரிஷியார்தம்மை வாட்டமுடன் யான்கண்டேன்போகர்தாமும்
தண்டமிழ்சூழ்
சித்தர்முனிரிஷிகள் கூட்டம் தன்மையுடன் எந்தனுக்கு விதிசொன்னாரே
விளக்கவுரை :
4070. வதியான வாசகத்தை
யானுங்கேட்டு விருப்பமுடன் குளிகைகொண்டு வாசீர்மத்தில்
பதியான குபர்னரிஷியார்தம்மை
பட்சமுடன் காணுதற்கு வருகிற்சென்றேன்
ததியான ரிஷிபக்கஞ்சென்றபோது
தகமையுள்ள ரிஷியாரும் என்னைப்பார்த்து
மதிபோன்ற திருமுகத்தை
நோக்கியல்லோ மார்க்கமுடன் வார்த்தையது சொன்னார்பாரே
விளக்கவுரை :