4061. பாரேதான் இன்னமொரு
மார்க்கங்கேளு பாருலகில் வெகுகோடி சித்தருண்டு
நேரேதான் மனோன்மணியைக்
கண்டதில்லை நேர்மையுடன் ஜோதியென்ற ஒளிவுகண்டார்
வீரேதான்
சொரூபநிலைக்கண்டபோதே விருப்பமுடன் ஜோதிமயந்தன்னிற்தோன்றி
கூரேதான் மனோன்மணியை
நினைத்தவண்ணம் கொப்பெனவே தெரிசனைப்போல் தோற்றலாச்சே
விளக்கவுரை :
4062. தோற்றமுடன் புலிப்பாணி
மைந்தாகேளு தொல்லுலகை சுத்திவந்து குளிகைகொண்டேன்
காற்றில்லா ராமேஸ்வரந்
தானென்னுங்கனமான தனக்கோட்டி கடலைக்கண்டேன்
மேற்றிசைக்குக் கீழ்பாகங்
கடலோரந்தான் மேலான தென்பொதிகை சமீபமப்பா
நாற்றமுள்ள சங்கதுவும்
பிறக்கும்ஸ்தானம் நடுக்கடலாந் திட்டொன்று கண்டேன்பாரே
விளக்கவுரை :
[ads-post]
4063. கண்டேனே நடுக்கடலாம்
மத்திபத்தின் கனமான பாறையொன்று கட்டொன்றுண்டு
தண்டுளவ மாலையணி
கிருஷ்ணபூபன் தகமையுள்ள மண்டபந்தா னங்கொன்றுண்டு
கொண்டல்வண்ணன் ஸ்ரீராமர்
சீதாதேவி குடியிருப்பு வாசீர்மந் தன்னைக்கண்டேன்
வெண்டாமரைப் பொய்கையுண்டு
ஸ்தலமுமுண்டு மேன்மையுள்ள குகையதுவும் பார்த்திட்டேனே
விளக்கவுரை :
4064. பார்த்தேனே சீதையென்ற
பெண்ணணங்கை பண்பான வச்சிரமாங் கல்லினாலே
நேர்த்தியாய் கைச்சிலையாய்
அமைத்துமேதான் நேரான முகவையென்னும் சாகரத்தில்
பூர்த்தியாய் சேதுபதி
ஸ்நாணம்செய்வோர் புகழான ராமருட தேவிதன்னை
தீர்த்தமுடன் சீதாவின்
பிராட்டியரை தினக்கிரம வலங்காரம் செய்வார்தாமே
விளக்கவுரை :
4065. செய்வாரே ராமலிங்கம் பூசைசெய்து ஸ்ரீராமர் பிராட்டியார் ரூபங்காண
உய்யவே வோடமது தன்னிற்சென்று
வுத்தமனார் ராமர்தேவிதன்னை
துய்யமுனி சித்தனவா
ரிஷிகளெல்லாம் சுத்தமுடன் வோடமதிற்சென்றுமேதான்
பையவே விக்கிரகம் பூசைசெய்ய
பட்சமுடன் போவாரும் வருவார்தாமே
விளக்கவுரை :