போகர் சப்தகாண்டம் 4056 - 4060 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4056 - 4060 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4056. ஆமேதான் பொய்கையிடம் கிட்டிநின்றேன் வப்பனே மனோன்மணியைக் கண்டதில்லை
தாமேதான் மனோன்மணியாள் ரூபம்போல சொரூபமானதொரு ஜோதிகண்டேன்
போமேதான் பொன்னான வாசீர்மத்தைப் பொங்கமுடன் நெடுந்தூரங் கண்டேன்யானும்
தேமேதானவச் சித்திரப்பொய்கையப்பா தெளிவான மண்டபத்தைப்பார்த்தேன்பாரே

விளக்கவுரை :


4057. பார்த்தேனே நீராழிமண்டபத்தை பளிங்கான பன்னகச்சாலைகண்டேன்
தீர்த்தமுடன் பூஞ்சோலைத் தன்னைக்கண்டேன் கதிழானன்னம்பலந்தன்னைக் கண்டேன்
சேர்த்துமே ரிஷிகோடி முனிவர்தம்மை சேனைமுதல் நவகோடி சித்தர்கண்டேன்
சார்த்தகிரி யாழ்வார்கள் கணக்கேயில்லை சட்டமுடன் வடகோடி மகிமைதானே

விளக்கவுரை :

[ads-post]

4058. தானான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தகமையுள்ள புலிப்பாணி சொல்லக்கேளும்
கோனான எனதையர் காலாங்கிநாதர் குவலயத்தில் வெகுகால மிருந்தாரப்பா
தேனான மனோன்மணியாள் காமரூபி தேவிதனை யொருநாளுங்கண்டதில்லை
பானான பராபரியாள் ஜோதியல்லால் பாங்கியரை ஒருநாளுங்காணேன்தானே

விளக்கவுரை :


4059. காணேணே என்றுசொல்லி காலாங்கிநாதர் கனமாக எந்தனுக்குச் சொன்னதுண்டு
வேணபடி வெகுகாலங் காத்திருந்தார் வேதாந்தத் தாயினது வருளைக்காண
மாணவே வரைகோடி காலமப்பா வையகத்தில் மனோன்மணியாள் சொரூபங்காண
நீணவே காயாதிகற்பங்கொண்டு நெடுங்காலந் தாமிருந்தார் தவசியாமே

விளக்கவுரை :


4060. தவசுடனே சின்மயத்திலிருந்துகொண்டு தாரிணியில் மதியமுர்தம் வெகுவாய்ப்பூண்டு
பவமகற்றி சமாதிதனில் கோடிகாலம் சட்டமுடன் தாமிருந்தார் நாதர்தாமும்
சிவக்கடலைக் காணுதற்கு வெகுவாய் எண்ணி தீரமுடன் சமாதிதனி லிருந்தாரப்பா
அவமுடனே சமாதிவிட்டு ஏகியுந்தான் வவனிதனில் மனோன்மணியைக் காணார்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar